சிந்தனை என்பதை இதுவரை அறிவியல் விவரித்ததாகத் தெரியவில்லை.
சிந்திப்பதினால் விளையும் ஒரு கருத்தே சிந்தனை எனப்படுகின்றது.
என் கருத்து என்னவென்றால் யோசிப்பது வேறு சிந்திப்பது வேறு என்பதாகும். யோசிப்பது என்பது கிடைத்த சில தரவுகளை வைத்து ஒரு முடிவிற்கு வருவதற்காக செய்வது. சிந்தனை என்பது, கிடைத்த தரவுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாது, அதற்கும் காரணங்களைத் தேடி, ஆழ்ந்து அலசி, பல்வேறு தளங்களிலும் அவற்றைப் பொருத்திப் பார்த்து, சாதகபாதகங்களை ஆராய்ந்து பார்த்து, ஒரு முடிவினை எட்ட முயற்சிப்பதாகும். யோசிப்பின் தளம் சிறியது. சிந்திப்பின் தளம் விரிவானது.
Hallucination எனப்படும் காட்சிப்பிழை நம் கட்டுப்பாடின்றி தானாக விளைவது. அதனை சிந்தனையோடு குழப்பிக்கொள்ள வேண்டாம். சிந்தனைக்கு புலன்களின் உள்ளீடுகளும் ஒரு தரவாகும். புலன்களால் உணர்ந்தவற்றையும் தாண்டியதோர் உணர்வைத் தேடுவதற்கு சிந்தனையால் மட்டுமே முடியும்.
பகுத்தறிவோடு, காரணகாரியத்தைத் தேடி, தர்க்கரீதியான அலசல்கள் ஆகியவற்றோடு கூடிய கற்பனைதான் சிந்தனையா என்று கேட்டால், இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஏனெனில், நம் கணிதவியலார்கள், ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், ராமானுஜன் ஆகியோருக்கு சுயநினைவோடு சிந்திக்கும்பொழுது எட்டாத தீர்வுகள் தன்னிலை மறந்து இருக்கையில் எட்டியிருக்கின்றன. பென்சீன் அமைப்புகூட தூக்கத்தில் வந்த கனவில் கிடைத்ததுதான்.
எழுத்து:
babu pk

No comments:
Post a Comment