Thursday, June 25, 2015

கிரகங்கள் மற்றும் பூமியில் இருந்து வரும் மர்ம ஒலிகளை நாசா பதிவு செய்து உள்ளது.


பிரபஞ்சம் குறித்து மனிதனுக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு.  பிரபஞ்ச ரகசியங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் மனிதன் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறான்.100 வருடங்களில் மனிதன் பிரபஞ்சம் குறித்து எவ்வளவோ தெரிந்து வைத்து  உள்ளான் .அதற்கு தகுந்தாற்போல் நவீன கருவிகளும் கண்டுபிடிக்கபட்டு மேலும் பிரபஞ்சம் குறித்தும் அதில் நிகழும் மாறுதல் குறித்தும் பூமி மற்றும் கிரகங்கள் குறித்து மனிதன் அறிந்து வருகிறான்.

இருந்தாலும் இன்னும் பிரபஞ்சம் குறித்து  முற்றிலுமாக மனிதன் அறிந்து கொள்ளவில்லை. இன்னும் நமது விண்வெளியில் ஏகபட்ட மர்மங்கள் உள்ளன.நாசா அதி நவீன கருவிகளை கொண்டு  பூமி மற்றும் மற்ற கிரகங்களின் அமைப்புகளை ஆராய்ந்து வருகிறது.அவ்வாறு பூமி மற்றும் கிரகங்களில் இருந்து வரும் மர்ம ஒலிகளை  மின்காந்த அலைகள் வடிவில் மனிதன் கேட்பதற்கு தகுந்தவாறு பதிவு செய்து உள்ளது.

இந்த ஒலி அலைகளை நாசாவின் வாயேஜர் கடந்த ஜூன் 1 பதிவு செய்தது மற்றும் அந்த பதிவுகள் நம்ப முடியாதவகையில் இருந்தன. அதன் சத்தம் மெய்சிலிர்க்க வைக்கிறது.குறிப்பாக  இது  பூமியில் இருந்த வந்த சத்தம். நமது கிரகத்தின் சத்தம் பாடுவது போல் உள்ளது. இந்த விண்வெளி சத்தம்  பூமியின் காந்த புலம் மத்தியில் இருந்து வருவதாக இருக்கலாம் என் நாசா கூறுகிறது.மேலும்  சூரிய காற்றில் இருந்து வரும் அயனி மண்டலம், பல்வேறு மின்காந்த துகள்கள்  சத்தமாகவும் இருக்கலாம்.

இந்த சத்தம் பூமியில் இருந்து மட்டும் வருவதாகவே கூற முடியாது. மற்ற கிரகங்களில் இருந்தும் இந்த சத்தங்கல் வரலாம்.இந்த சத்தம் பாடல்கள் போல் உள்ளது  ஒவ்வொரு கிரகத்தில் இருந்து வரும் சத்தத்தை வகைபடுத்தினால் தனிப்பட்ட கிரகங்களில் இருந்து வரும் சத்தத்தை கண்டறியலாம் என நாசா கூறி உள்ளது.

இந்த ஒலிகள் மிக புல்லரிக்கும் உணர்வுகளை தருகிறது.  ஆனால் கேடக நன்றாக உள்ளது. வீடியோ கீழே உள்ளது கேட்டு மகிழுங்கள்

 https://youtu.be/-MmWeZHsQzs

No comments:

Post a Comment