தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக்கூடிய சிறந்த
தமிழ் மென்பொருளை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக்
கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழை களைத் திருத்த முடியும்.
இந்த மென்பொருளைச் சிறப் பாக வடிவமைத்த தெய்வசுந்த ரம், ‘முதலமைச்சர்
கணினித் தமிழ் விருது’ பெற முதன்முறை யாகத் தமிழக அரசால் தேர்ந்
தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்கம், பாராட்டுப்
பத்திரம் கொண்ட விருது விரைவில் அவருக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த மென்பொருளை கம்ப் யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பதிவேற்றிவிட்டால்,
தமிழ் வார்த் தைகளில் உள்ள தவறை எளி தாகக் கண்டுபிடித்து ஒரு வினாடி
யிலேயே திருத்த முடியும். வார்த்தை யில் ஒரு எழுத்து விடுபட்டிருக் கலாம்
அல்லது எழுத்து இடம் மாறியிருக்கலாம் அல்லது தேவை யில்லாமல் ஒரு எழுத்து
சேர்க்கப் பட்டிருக்கலாம். இதுபோன்ற தவறுகளைக் கண்டுபிடித்து வினாடி யிலே
திருத்துவதுதான் இந்த மென் பொருளின் சிறப்பு. உதாரணத்துக் குக் ‘கசலம்’
என்ற தவறான வார்த் தையைச் சொற்பிழை திருத்தியைக் கொண்டு திருத்தும்போது
‘கசம்’, ‘கலம்’, ‘கமலம்’, ‘கலசம்’ ஆகிய வார்த்தைகள் கம்ப்யூட்டர் திரை யில்
தோன்றும். அதில் நமக்குத் தேவையான சரியான வார்த்தையை எடுத்துக்கொள்ள
வேண்டும்.
சந்திப் பிழையையும் திருத்த முடியும். எடுத்துக்காட்டாகப் ‘படித்து
பார்த்தான்’, ‘வந்துப் பார்த்தான்’ என்ற வார்த்தைகளில் உள்ள ஒற்றுப்
பிழையைத் திருத்தி, ‘படித் துப் பார்த்தான்’, ‘வந்து பார்த்தான்’ என்று
காண்பிக்கிறது. எண்களைக் கொடுத்தால் எழுத்துகளாக்குகிறது. தமிழ்
எழுத்துகளுக்கு எண்களைத் தருகிறது. அதாவது 1,20,00,000 எனத் தட்டச்சு
செய்தால் ஒரு கோடியே இருபது லட்சம் என்று தமிழ் எழுத்துகளாக வருகிறது. இந்த
மென்பொருளில் உள்ள 56 ஆயிரம் தமிழ் அகராதி சொற்களைக் கொண்டு
கோடிக்கணக்கான வார்த் தைகளைத் திருத்த முடியும்.
தமிழைத் தமிழாகவும், பிற மொழிக் கலப்பு இல்லாமலும், பிழை இல்லாமலும்
எழுதப் பயன்படும் இந்த மென்பொருள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு
மட்டு மல்லாமல் அரசு மற்றும் தனியார் அலுவலகப் பணியாளர்களுக்கும் மிகப்
பெரிய வரப்பிரசாதம். ஆங் கிலம் மற்றும் தமிழ் அகராதியும் இருப்பது
தனிச்சிறப்பு.
இந்தச் சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக்கிய சென் னைப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் தலைவர் ந.தெய்வசுந்தரம் கூறியதாவது:
எனது தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவின் 5 ஆண்டு உழைப்பே இந்த மென்பொருள்.
கணினி பயன்படுத்தத் தெரிந்த அனைவரும் இதன் முழுப்பலனைப் பெற முடியும். 15
வகையான ‘கீ போர்டு’ வசதி இருப்பதால் உலகம் முழுவதும் பயன்படுத்தலாம்.
இத்தகைய மென் பொருட்களை உருவாக்கத் தமிழ் இலக்கணம் மட் டும் படித்தால்
போதாது. மொழி யியல் அறிவும் அவசியம். அதற் குப் பல்கலைக்கழகங்களில் மொழி
யியல் பாடம் கட்டாயம் இருக்க வேண்டும். அதன்மூலமே ஏராள மான தமிழ்
மென்பொருட்களை உருவாக்கிக் கணினித் தமிழ்ப் பயன்பாட்டை ஆங்கில மொழிப்
பயன்பாட்டுக்கு இணையாக வளர்க்க முடியும்.
இவ்வாறு பேராசிரியர் தெய்வ சுந்தரம் கூறினார்.
No comments:
Post a Comment