Saturday, June 6, 2015

தொலைந்து போன ஆன்றாயிட் மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி?



IMEI (International Mobile Station Equipment Identity) நம்பர் என்பது ஒவ்வொரு மொபைலுக்கும் தயாரிப்பாளரால் தரப்படும் தனித்துவமான நம்பர். நமது மொபைல் தொலைந்து விட்டாலோ பிறர் திருடி சென்று விட்டாலோ, பிறர் அதை பயன்படுத்த முடியாத வண்ணம் அதை ப்ளாக் செய்வதற்கு இந்த நம்பர் அவசியம்.

இது பொதுவாக மொபைலின் பேட்டரி இருக்கும் இடத்தை சுற்றி எழுதப்பட்டிருக்கும். ஆப்பிள் ஐபோனில் மொபைல் வைக்கபட்டிருக்கும் பெட்டியிலேயே IMEI நம்பர் அச்சிட பட்டிருக்கும். நமது மொபைலிலிருந்து *#06# டைப் செய்வதன் மூலமாகவும், மொபைலின் IMEI நம்பரை தெரிந்து கொள்ளலாம்.

களவு போன மொபைலின் IMEI நம்பரை, நெட்வொர்க் ஆபரேட்டருக்கு தருவதன் மூலம், அந்த மொபைல் " Black List "- ல் சேர்க்கப்படும். அதாவது அந்த மொபைலின் மூலம் எந்த நெட்வொர்க்கையும் பயன்படுத்தி கால் செய்வது, மெசேஜ் அனுப்புவது போன்றவற்றை செய்ய முடியாது. இதன் மூலம் அந்த மொபைல் பயன்படுத்த பயனற்றதாகும்.
இனி களவு போன ஆன்றாயிட் மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.


1. கூகுள் க்ரோம் மூலம் https://www.google.com/dashboard/ என்ற லிங்கை அணுகும் போது, கூகுள் அக்கௌன்ட் ஓபன் ஆகும்.


2. இப்பொழுது, களவு போன ஆன்றாயிட் மொபைலில் log in செய்யப்பட்ட ஜிமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட்- ஐ இங்கே கொடுத்து log in செய்யவும்.

3. இனி, ஆன்றாயிட் ஆப்சனை க்ளிக் செய்வதன் மூலம் இதுவரை இந்த ஜிமெயில் முகவரியில் log in செய்ய வேண்டும்.
அனைத்து ஆன்றாயிட் மொபைலின் IMEI நம்பர், மொபைலின் மாடல், தயாரிப்பாளர், நெட்வொர்க் கேரியர், கடைசியாக பார்த்த தேதி, மொபைலில் ஜிமெயில் முகவரி பதிந்த தேதி போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.

4. மேலும் " delete backup data " என்ற பட்டனை அழுத்துவதன் மூலமாக, இந்த ஜிமெயில் முகவரியின் பேக் அப் செய்து வைத்த தகவல்களை அழித்து விட முடியும்.

ஒருவேளை களவு போன ஆன்றாயிட் மொபைலில், எந்த ஜிமெயில் முகவரியையும் log in செய்யவில்லை என்றால் மொபைல் வாங்கிய பில்லை தேடி எடுப்பதை தவிர வேறு வழி இல்லை. மொபைல் பில்லில், விற்பனையாளர் IMEI நம்பர் எழுதியிருப்பார்.

No comments:

Post a Comment