Monday, June 29, 2015

TAMILNADU DIFFERENT TOURISUM PLACES

ஊட்டி - அவலஞ்சி - எமெரால்ட் ஏரி: 
 
ஊட்டிக்கு தென்மேற்காக அமைந்துள்ள அவலஞ்சி அணை வழியாக மலையேற்றம் மேற்கொள்வது சுலபமானது என்பதுடன் தூரத்தில் தெரியும் முக்கூர்த்தி தேசிய பூங்கா, பனிச்சரிவு ஏரி மற்றும் அடர்ந்த காடுகள் ஆகியவை கண்களுக்கு விருந்து படைக்கும்.

மேலும் இப்பகுதியில் இரவில் தங்குவதற்காக வனத்துறை விருந்தினர் இல்லங்களை ஏற்பாடு செய்துகொடுக்கிறது. எனவே இரவு ஓய்வெடுத்து விட்டு அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் பயணத்தை துவங்கலாம். பின்பு காலையில் புகழ்பெற்ற பிக்னிக் ஸ்தலமான மேல் பவானி அணையிலிருந்து மலையேற்றத்தை தொடங்குவது சிறப்பானதாக இருக்கும். இந்த அணையின் வடக்கே ஊட்டியின் உயரமான சிகரங்களில் ஒன்றான கொல்லரிபெட்டா அமைத்துள்ளது. இங்கிருந்து ஊட்டிக்கு திரும்பும் வழியில் அமைந்துள்ள எமெரால்ட் எனும் அழகிய கிராமத்தை நீங்கள் தவற விட்டுவிடக்கூடாது.


நீலகிரி மலைகளில் வருடம் முழுக்க மலையேற்றம் மேற்கொள்ளலாம் என்றாலும் குளிர் காலத்தில் மலையேற்றத்தில் ஈடுபடுவது அற்புதமான அனுபவமாக அமையும் எனினும் மலையேற்றத்தில் ஈடுபடும் முன் தகுந்த திட்டமிடலும், திடீர் ஆபத்துகளை சமாளிக்க முன்னேர்ப்பாடுகளும் அவசியம். எனவே இப்போதே சிலிர்ப்பூட்டும் நீலகிரி மலையேற்றத்துக்கு தயாராகுங்கள்!

கொடைக்கானல் - தொப்பித் தூக்கிப் பாறை - பெரியூர் - பெரியகுளம்:


கொடைக்கானலிலிருந்து பெரியகுளம் வரையிலான இந்த 19 கி.மீ பாதையில் மலையேற்றம் செய்வதற்கு குறைந்தது 5 முதல் 6 மணி நேரமாவது பிடிக்கும். முதல் முறை மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களும் சுலபத்தில் கடக்கும்படியாகவே இந்த பாதை அமைந்திருக்கிறது. மேலும் சாகச மலையேற்றத்தின் போது பாதையில் இருக்கும் காப்பித்தோட்டங்களில் இருந்து வரும் நறுமணமே நமக்கு புத்துணர்வை ஊட்டும்.

ஏலகிரி மலையேற்றம்:
  

 சந்தேகமே இல்லாமல் தமிழ்நாட்டில் ட்ரெக்கிங் போக சிறந்த இடம் என்றால் அது ஏலகிரிதான். ஏலகிரி மலையின் ஊடாக ட்ரெக்கிங் செல்கையில் நாம் இயற்கை அழகு ததும்பும் காட்சிகளையும், அருவிகளையும், பள்ளத்தாக்குகளையும் கண்டு ரசிக்கலாம். இங்கு ட்ரெக்கிங் செல்ல தேர்ந்தெடுக்க நமக்கு ஏழு பாதைகள் உள்ளன.


ஏலகிரி மலையேற்றம்:
அவற்றுள் அங்கனூர் ஏரியிலிருந்து நிலாவூர் ஜலகம்பாறை செல்லும் பாதை 14 கி.மீ. தூரமுள்ளதாகும். அதேபோல புங்கனூர் ஏரியிலிருந்து சுவாமி மலைக்கு செல்லும் மற்றொரு அழகான 6 கி.மீ. தூரமுள்ள பாதையும் இங்கு உள்ளது. இந்த இரண்டு பாதைகளும் பலராலும் விரும்பப்படுவதோடு இவை அழைத்துச் செல்லும் குன்றிலிருந்து ஏலகிரி மலையின் மொத்தத் அழகையும் தரிசிக்கலாம்.


நீர் சார்ந்த சாகச விளையாட்டுகள்:
 சர்வ காலமும் வாட்டியெடுக்கும் வெய்யிலின் காரணமாகவோ என்னவோ நம் மக்களுக்கு தண்ணீரில் விளையாட்டு என்றாலே மனம் குஷியாகி விடும். உலகத்தில் இருக்கும் மிகச்சிறந்த கடற்கரைகளில் ஒன்றான சோழ மண்டல கடற்கரையை கொண்டிருக்கும் தமிழகத்தில் நீர் சார்ந்த சாகச விளையாட்டுகளான ஸ்க்குபா டைவிங், வின்ட் ஸர்பிங் , கயாக்கிங் எனப்படும் துடுப்பு படகு சவாரி போன்ற விளையாட்டுகள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. அவற்றை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

 

பாண்டிச்சேரி - ஸ்குபா டைவிங்: 
பாண்டிச்சேரிக்கு 'பல' விஷயங்களுக்கு அடிக்கடி போகும் நம்மில் எத்தனை பேருக்கு அங்கே ஸ்குபா டைவிங் என்னும் அற்புதமான ஒரு விஷயம் இருக்கிறது தெரியும். ஆம், நம்ம ஊர் பாண்டிச்சேரியில் ஸ்குபா டைவிங் விளையாட்டு நடத்தப்படுகிறது

பாண்டிச்சேரி - ஸ்குபா டைவிங் : 
இந்த தனியார் பயிற்சி நிறுவனங்களில் முதல் முறை ஸ்குபா டைவிங் செய்பவர்களுக்கு என்றே பிரத்தேயகமான ஒரு நாள் பயற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் நாள் கடற்கரையில் இருந்து படகில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பயணித்து ஸ்குபா டைவிங் செய்யும் இடத்தை அடைந்து அங்கிருந்து கடலுக்கு அடியில் 6-12 மீட்டர் வரை ஆழம் உள்ள பகுதியில் ஆழ்கடல் மூழ்குதல் சாகசத்தில் ஈடுபடலாம். நவம்பர் முதல்

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5168

கோவளம் கடற்கரையில் வின்ட் ஸர்பிங்:
 இந்தியாவிலேயே வெகு சில இடங்களில் மட்டுமே இருக்கும் வின்ட் ஸர்பிங் எனப்படும் சாய் மர படகு சாகச விளையாட்டு சென்னையில் இருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கும் கோவளம் கடற்கரையில் உள்ளது. சறுக்கு பலகை ஒன்றின் மீது நின்றவாறு சீறிப்பாயும் கடல் அலைகளையும், கடல் காற்றையும் எதிர்த்து அலைச்சறுக்கில் ஈடுபடுவது மிக சவாலாக இருக்கும்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5169

கோவளம் கடற்கரையில் வின்ட் ஸர்பிங்:
 கோவளம் கடற்கரையில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் முட்டுக்காடு என்ற இடத்திலும் இந்த சாய் மர படகு சாகசம் நடக்கிறது. இந்த விளையாட்டுக்கு எந்த முன் அனுபவமும் தேவையில்லை. மேலும் தமிழக சுற்றுலாத்துறையே இந்த சாகசத்தில் ஈடுபட தேவையான கருவிகளை வாடகைக்கு தருகிறது. அடுத்த முறை கிழக்கு கடற்க்கரை சாலையில் பயணம் செல்கையில் நிச்சயம் இந்த சாய்மர படகு சவாரியை ஒரு முறையேனும் முயற்சி செய்து பாருங்கள்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5170 


ஹெங் கிளைடிங்: 
 கேள்விப்பட்டிராத ஒன்றாக இருக்கிறதல்லவா?ஹெங் கிளைடிங் எனப்படுவது கூம்பு வடிவிலான பாராசூட் போன்ற ஒன்றை பிடித்துக்கொண்டு உயரமான மலைச்சிகரத்தில் இருந்து குதித்து பறக்கும் ஒரு விளையாட்டு ஆகும்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5171  

ஹெங் கிளைடிங்: 
 வெளிநாட்டில் மட்டுமே பிரபலமான இந்த சாகச விளையாட்டு தற்போது சென்னை, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போன்ற மலைவாசஸ்தளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக துவங்கியிருக்கிறது. மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டம் இந்த விளையாட்டில் ஈடுபட சிறந்ததாகும்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5172 


ஹெங் கிளைடிங்: 
 
 சென்னையில் புனித தாமஸ் மலையிலும், ஊட்டியில் கல்ஹாட்டி அருவிக்கு பக்கத்திலும் இந்த விளையாட்டு நடக்கிறது. தமிழக சுற்றுலாத்துறையும் மற்ற சில தனியார் நிறுவனங்களும் இந்த விளையாட்டை அளிக்கின்றன. பறவை போல வானில் பறக்க நினைப்பவர்கள் இந்த சாகச விளையாட்டில் நிச்சயம் ஈடுபட வேண்டும்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5173   

பாராகிளைடிங் : 
ஹெங் கிளைடிங் போன்றே வானில் பறக்கும் சாகச விளையாட்டு தான் பாராகிளைடிங்கும். இது வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஏலகிரியில் நடத்தப்படுகிறது. உயரமான இடத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதிப்பதே இந்த விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டில் முன் அனுபவம் இல்லாதவர்கள் 'டேன்டம் க்ளிடிங்' என்ற முறைப்படி ஏற்க்கனவே நன்கு பயிற்சி பெற்ற ஒருவருடன் சேர்ந்து பாராசூட் உதவியுடன் பறக்கலாம். ஆபத்து குறைவான அதே சமயம் சுவாரஸ்யம் நிறைந்த விளையாட்டு இது.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5174  


ஸ்கை டைவிங் : 
நம்ப முடியவில்லை அல்லவா?. நம்மூர் பாண்டிச்சேரியிலும் இப்போது காகினி என்னும் தனியார் நிறுவனத்தால் ஸ்கை டைவிங் ஆரம்பிக்கப்படுள்ளது. வார விடுமுறையை கொண்டாட பாண்டிச்சேரி செல்பவராக இருந்தால் இந்த சாகசத்தையும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். அழகு நிறைந்த பாண்டிச்சேரியை வானத்தில் இருந்த ரசிப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த ஸ்கை டைவிங்கையும் டேன்டம் முறைப்படி செய்யலாம்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5175  


ஸ்கை டைவிங் :
 'ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி' என சொல்பவரா நீங்கள்? அப்படியெனில் மேலே குறிப்பிட்டுள்ள இந்த சாகச விளையாட்டுகளை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5176  


No comments:

Post a Comment