Saturday, June 20, 2015

பாலூட்டிகள் (Mammals)


 சில பாம்புகள் குட்டி போடுகின்றனவே... அப்படி எனில் அவைகள் பாலூட்டிகளா? என்று ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கையில் "குட்டி போட்டு பாலூட்டினால்தான் பாலூட்டிகள் இனத்தைச் சேரும். பாம்புகள் ஊர்வன இனத்தைச் சேரும். பெரும்பாலானவைகள் முட்டையிட்டே இனப்பெருக்கம் செய்கின்றன. சில வகைகளே குட்டிகளை ஈன்றெடுக்கின்றன." என்று சொல்லியிருந்தேன்.

இதோ இன்னும் சற்று விளக்கமாகப் பார்க்கலாம் பாலூட்டிகள் என்றால் என்னவென்று.


பறக்காதவைகள் அனைத்தும் பாலூட்டிகளா?
இல்லை. ஊர்வன பறக்காதன. அவைகள் பாலூட்டிகள் அல்ல. வெளவால் பறக்கும். ஆனால் அது பாலூட்டி.

உடலில் மயிர் உள்ளவைகள்தான் பாலூட்டிகளா?
இல்லை. பிளாடிபஸ், டால்பின், திமிங்கலம், Naked Mole Rat போன்றவைகளுக்கு உடலில் மயிர்கள் இல்லை. ஆனால், அவைகள் பாலூட்டிகள்.

நான்கு கால்கள் கொண்டவைகள்தான் பாலூட்டிகளா?
இல்லை. பிளாடிபஸ், டால்பின், திமிங்கலம் ஆகியவைகளும் பாலூட்டிகள்.

குட்டி போடுபவைகள்தான் பாலூட்டிகளா?
அப்படிச் சொல்ல முடியாது. Monotreme Mammals எனப்படும் வகையைச் சார்ந்த Echinda, Platypus போன்றவைகள் முட்டை போட்டுதான் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், பாலூட்டுவன.

பால் கொடுப்பவைகள் அனைத்தும் பாலூட்டிகளா?
அப்படியும் சொல்ல முடியாது. புறாக்கள் தங்கள் குஞ்சுகளுக்குப் பாலூட்டுகின்றன. (ஆனால் பால் சுரப்பி வழியாக அல்ல.)

முதுகெலும்புகள் உள்ளவைகள் எல்லாம் பாலூட்டிகளா?
இல்லை. மீன்களுக்கும் பறவைகளுக்கும் முதுகெலும்புகள் உள்ளனவே. அவைகள் பாலூட்டிகள் அல்லவே.

Cervic Bones (கழுத்து எலும்புகள்) 7 இருந்தால் அவைகள் பாலூட்டிகளா?
இல்லை. Sloth, Manatee, Spiny Ant Eaters ஆகியவைகளுக்கு வேறுபடும். ஆனால், அவைகளும் பாலூட்டிகள்.

பின் எதுதான் பாலூட்டிகள்? எப்படித்தான் அடையாளம் காணுவது?
பாலூட்டிகள் என்று சொல்வதற்குக் குறிப்பிட்ட புறத்தோற்ற அடையாளங்கள் ஏதும் இல்லை. பறவைகள், ஊர்வன ஆகியவற்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டிட ஒரு பொது மூதாதையில் இருந்து கிளைத்தவைகள் பாலூட்டிகள் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதற்குக் கீழாக முட்டையிடும் பாலூட்டி, குட்டி போடும் பாலூட்டி, நான்கு கால் பாலூட்டி, இரண்டு கால் பாலூட்டி, பறக்கும் பாலூட்டி, தரைப் பாலூட்டி, கடல் பாலூட்டி என்றெல்லாம் உள்வகைப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் இது வரைக்கும் பார்த்தேயிராத ஒரு விலங்கு பாலூட்டியா இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஆய்வாளர்களிடம் கொடுத்து அறிந்து கொள்ளுங்கள். இல்லை, தற்போது உலகில் பார்த்த விலங்குதான் என்றால், அது
  1. வெப்பரத்தப்பிராணியா
  2. குட்டி போடுகிறதா
  3. பாலூட்ட பால் சுரப்பிகள் உள்ளதா
  4. உடலில் மயிர் உள்ளதா
  5. கழுத்தெலும்புகள் 7 உள்ளனவா
  6. நடுக்காது எலும்பு இருக்கிறதா
  7. மூளை பெரியதாக இருக்கிறதா
  8. கீழ்த்தாடை ஒரே எலும்பால் ஆனதா
  9. இதயத்தில் இருந்து வரும் தமனி (Artery) இடதுபுறமாகச் செல்கிறதா
  10. உதரவிதானம் (Diaphram) இருக்கிறதா

போன்ற கேள்விகளைக் கேட்டு 95 சதவீதம் ஆம் என்று பதில்கள் வந்தால் அது பாலூட்டி என்று அறிந்து கொள்ளுங்கள். மீதம் 5 சதவீதத்தையும் உறுதி செய்து கொள்ள ஆய்வாளர்களை அணுகுங்கள்.


Kingdom     : Animalia
Phylum       : Chordata
Subphylum : Vertebrata
Class           : Mammalia

இதில் Mammaliaவிற்குக் கீழாக,
  1. Prototheria (Monotremes)வில் 2 வகைகளும்
  2. Metatheria (Marsupials)வில் 275 வகைகளும்
  3. Eutheria (Placental Mammals)வில் 3982 வகைகளுமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விபரங்களுக்கு Mammal Classification என்று தேடிப்படியுங்கள்.

படம் எடுக்கப்பட்ட தளம் : http://www. wildlifepewterpins. com/images/mammals/
MammalsCloseup.jpg

No comments:

Post a Comment