Monday, March 9, 2015

பழந்தமிழ் எழுத்துருக்கள் மீட்பு ! அனைவரும் எளிதில் பயன்படுத்தலாம் !!

1000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய வட்டெழுத்து எழுத்துருவை இப்போது நாம் கணினியில் பயன்படுத்தலாம் .
2000 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த தொல்காப்பியர் காலத்து தமிழி எழுத்துருவையும் இப்போது நம் கணினியில் பயனபடுத்தலாம். நமது பெயர்களை பழந்தமிழ் எழுத்துக்களில் இனி எழுதி மகிழலாம். பழந்தமிழ் எழுத்துருக்களை கணினியில் கொண்டுவந்த தமிழர்களுக்கு நம் பாராட்டுகள் !!
படத்தில் :முதலில் இருப்பது இன்றைய தமிழ் எழுத்துரு. இரண்டாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழி எழுத்துரு. மூன்றாவது இராசராசன் காலத்தில் இருந்த வட்டெழுத்து முறை.
------------------------------------------------------------------
இசுக்கொத்துலாந்தில் மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் அவர்களின் அரிய முயற்சி தமிழி எழுத்துருவாக்கம்.
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துரு தரவிறக்க,http://www.virtualvinodh.com/down…/Adinatha-Tamil-Brahmi.zip
இன்றைய தமிழைத் தமிழி எழுத்துருவுக்கு மாற்ற
http://www.thevaaram.org/sirppi_transliteration.php
தமிழி எழுத்துரு தந்த எனதருமை அன்பர், நண்பர், மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் பாராட்டுக்குரியவர். அவரைச் சில ஆண்டுகளுக்கு முனனர் சென்னைப் பல்கலைக் கழக அரங்கில் பாராட்டும் பேறு என்னுடையதாயிற்று.
பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க.
Wonderful news for the lovers of all Tamil scripts.
A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
See: "http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".
Vaṭṭeḻuttu (வட்டெழுத்து) font newly available, thanks to Elmar Kniprath
Now everyone can write in வட்டெழுத்து என்கிறார் புதுவை வாழ் பேராசிரியர் இழாண் Jean-Luc Chevillard (Pondy) அவர்கள்.
என்னே... என்னே.... என்னே....
செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும்
அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும்
தமிழ் மக்கள் என்றென்றும கடமையுள்ளவர்கள்.
நன்றி நன்றி : மறவன்புலவு க. சச்சிதானந்தன்

No comments:

Post a Comment