Wednesday, March 25, 2015

காகபுசுண்டர் பிரான் தீர்க்கதரிசனம்

பல்லவி
கூவுதையா சேவல் கூவுதையா
கொக்கரித்துக் கூத்தாடிக் கூவுதையா
அனுபல்லவி
கூவுகின்ற சத்தமத்தின் குறிப்பறி யாதவர்க்குக்
கொடிய னரகமென்றும் கூவுதையா
சரணம்
கணபதி வந்தாரென்றும் கூவுதையா - அவர்
கலியுக வரதரென்றும் கூவுதையா
தேவர்கள் வந்தாரென்றும் கூவுதையா - இந்தச்
செகமெல்லாம் ஓர் குடைக்குள் கூவுதையா
அரசாள வந்தாரென்று கூவுதையா - ஈசன்
அவதாரம் செய்தாரென்றும் கூவுதையா
மும்மூர்த்தி வந்தாரென்றும் கூவுதையா - இந்த
மூவுலகும் கொக்கரித்துக் கூவுதையா
ஏகபரா பரவஸ்து வாகி - இங்கே
ஏசுவும் வந்தாரென்றும் கூவுதையா
ஈசாஅ லைகிஸ்ஸலாம் வந்தாரென்றே
இன்கிதமாய்க் கொக்கரித்துக் கூவுதையா
மகதிஅ லைகிஸ்ஸலாம் வருவாரென்றும்
வகைவகையாய்க் கொக்கரித்துக் கூவுதையா
திசாலும் வந்தாரென்றும் கூவுதையா - இந்தச்
செகமெல்லாம் கொக்கரித்துக் கூவுதையா
வீரபோக வசந்தரேன்று சொல்லினித்தம்
விதவிதமாய்க் கொக்கரித்துக் கூவுதையா
னீதிக்கொடி நாட்டவேன்று தேவரெல்லாம்
னீணிலத்தில் வந்தார்என்றும் கூவுதையா
சாஸ்திரங்கள் சொன்னபடி தவராதிங்கு
சகலரும் வந்தாரென்றும் கூவுதையா
ஆகாய மாய்ப்பறந்தும் கூவுதையா - எண்ணி
அண்டமெல்லாம் சுற்றிவந்தும் கூவுதையா
இரவும்ப கலுமாய்க் கூவுதையா - அதே
ஏகாந்த மாயிருந்தும் கூவுதையா
அற்புதங்கள் காட்டியுமே கூவுதையா - னித்தம்
அந்தரமாய் னின்றுகொண்டும் கூவுதையா
வேதங்கள் சொல்லியுமே கூவுதையா - னல்ல
வேதாந்தம் காட்டியுமே கூவுதையா
சாத்திரங்கள் சொல்லியுமே கூவுதையா - உலகில்
சகலருக்கும் தோணும்படிக் கூவுதையா
மானிட ரூபம்கொண்டு தேவரெல்லாம்
வையகத்தில் வந்தாரென்றும் கூவுதையா
பொய்கொலை களவுகள் கூடாதென்றும்
பொருந்தவே கொக்கரித்து கூவுதையா
துஷ்டர் மடிவாரென்றும் கூவுதையோ - இன்னம்
சொற்பனா ளிருக்குதென்றும் கூவுதையா
உலகம் அழியுமென்றும் கூவுதையோ - னிலையாய்
உத்தமர் இருப்பாரென்றும் கூவுதையா
வேதம்த வறுகின்ற மானிடர்க்கு - னல்ல
வீரவாள் வந்ததென்றும் கூவுதையா.
விளக்கம்:
காகபுசண்டர் அல்லது காகபுருடர் அல்லது காகபுஜண்டர் என்பவர் சித்தர்களில் ஒருவர். இவர் ரோமச முனிவரின் தந்தை. இவர் மாயூரத்தில் (மயிலாடுதுறை) பிறந்தார். மயூரநாதனின் அருளால் சாகா வரம் பெற்று காகமாக பல ஆண்டுகள் வாழ அருள் பெற்றதால் காகபுசுண்டர் என்ற பெயர் பெற்றார். காகபுசுண்டர் நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.இவர் வாழ்ந்த காலம் தோராயமாக 5000 ஆண்டுகளுக்கு முன்னர்,அதாவது கலியுக தொடக்கத்திற்கும் முன்னாள். அந்த காலத்திலேயே அவர் பாடல்களில் தீர்க்கதரிசனமாக இயேசு பிரானின் வரவையும்,கடைசி அவதாரமாகிய மகதி அலைகிஸ்ஸலாம்(கல்கி) பற்றியும்.ஈசனே அந்த அவதாரம் செய்தாரென்றும்.தேவர்களெல்லாம் இந்த கலியை அழிக்க இந்த பூலோகத்தில் பிறவி எடுப்பார்கள் என்றும், மானிட ரூபம்கொண்டு தேவரெல்லாம் வையகத்தில் வந்தாரென்றும், பொய்கொலை களவுகள் கூடாதென்றும், துஷ்டர் மடிவாரென்றும், உலகம் அழியுமென்றும், உத்தமர் இருப்பாரென்றும், வேதம்த வறுகின்ற மானிடர்க்கு வீரவாள்(தீர்ப்பு) வந்ததென்றும் இந்த யுகத்தில் நடை பெற்றும், பெற்றுக்கொண்டும், பெறவும் இருக்கும் விஷயங்களை தெள்ளத் தெளிவாக விளம்புகின்றார்.
இந்த பாடலில் அவர் மெய் பாரவான்கள் அனைவரையும் பற்றி பாடுகின்றார். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்". மதம் என்ற ஒன்று கிடையாது .மனிதனாக தனக்குள் பிரிவை ஏற்படுத்திக் கொண்டு அதில் தத்தளிக்கின்றான்

No comments:

Post a Comment