அருட்பிரகாச வள்ளலார்
=====================
19ம் நூற்றாண்டின் ஒப்பற்ற ஞானியான அருட்பிரகாச வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க அடிகள் எண்ணற்ற பல சித்துகளை செய்து காட்டியுள்ளார். இருப்பினும் அடிக்கடி அதை செய்து காட்ட அவருக்கு எள்ளளவும் நாட்டம் இருக்கவில்லை.

பாதரசத்தை உள்ளங்கையில் ஊற்றி மூடிவைத்து விட்டு திறந்தபோது அது ரசமணியாக மாறியிருந்தது.
வந்த பக்தர்களுக்கு உணவு பரிமாற (பிக்ஷாண்டர்) இறைவனை வேண்ட, பாத்திரத்தில் அன்னம் குறையாமல் வந்தது. எல்லோரும் உண்டதுபோக மீதமும் இருந்ததாம். விளக்கில் எண்ணை இல்லாதுபோக தண்ணீர் விட்டு ஏற்றியுள்ளார். தில்லைக்கு போகாமலே இந்த சித்தி வளாகத்தின் உள்ளே தர்மசாலையில் ஒரு சீலை கட்டி தொங்க விட்டு, அதில் சிதம்பர ரகசியத்தை காண்பித்தார்.

அவருக்கு திருவொற்றியூர் வடிவுடை நாயகியும் தியாகேசரும் அளவில்லா அருள் பொழிந்தனர். முன்னொரு சமயம் சென்னையில் அண்ணன் வீட்டில் இருக்கும்போது சிறுவயதில், வீட்டிற்கு தாமதமாய் ஓர் இரவில் வந்தபோது வடிவுடை அம்மானே இவர் அண்ணியாக வந்து இவருக்கு அன்னமிட்டாள். இன்னொரு சமயம் வடலூரில் மழையில் எல்லோரும் நினைந்திருக்க இவர்மேல் ஒரு சொட்டு விழவில்லை.
வடலூர் சித்தி வளாகம் உள்ளே சுவாமிகள் ஏற்றிய தீபமும் தர்மசாலையில் உணவுசாலையில் ஏற்றிய அடுப்பின் தணலும் இன்றுவரை அணையாமல் காத்து வருகின்றனர். அவர் எழுதிய அருட்பா பெரிய சைசு கணக்கு புத்தகம் முழுதும் அடித்தல் திருத்தலின்றி முத்துமுத்தாக முழுமூச்சாக எழுதியுள்ளார். அதை நோட்டுபுத்தகத்தை திறந்து கண்ணாடி பேழைக்குள் வைத்துள்ளனர். இவற்றை எல்லாம் சில ஆண்டுகளுக்குமுன் அடியேன் அவற்றை சென்று தரிசித்து பரவசப்பட்டேன்.
சென்னையை சேர்ந்த மாசிலாமணி முதலியார் என்ற புகைப்படக்காரர் முன்னொரு சமயம் படம் எடுக்க அழைக்கப்பட்டார். அவர் எட்டு முறை எடுத்தபோதும் நெகடிவ்வில் வெண்ணிற ஆடை மட்டும் பதிவானது முகம் மற்றும் கை கால்கள் தெளிவாக இருக்கவில்லை. 'பதிவாகவில்லை என்றால் இதுவே சித்த ஞானிக்கு அடையாளம்' என்பாராம்வள்ளலார்.
அவருடைய தேகமே ஒளிரூபமாய் இருந்தபடியால் அவர் உடலுக்கு நிழல் விழாது, சூரிய ஒளியோ செயற்கை ஒளியோ அவர் உடலுக்குள் ஊடுருவியது. இவரைப்பற்றி இன்னும் சொல்லிகொண்டே போகலாம். அத்தனையும் அற்புதம்.
பிறகு அவர் அருளோடு படம் எடுக்க அதற்குப்பின் திருவொற்றியூரில் உள்ள மடத்தில் இதை வைத்து வண்ண ஓவியம் தீட்டப்பட்டது. இதுதான் பிற்பாடு உபயோகத்திற்கு வந்தது. இன்றும் அதைதான் பார்க்கிறோம். முதன் முதலில் ஏடுத்த அந்த அபூர்வ கருப்பு வெள்ளை படம் இங்கே உள்ளது. அவருடைய கையொப்பமும் இங்கே கொடுத்துள்ளேன். அருட்பெருஞ் சோதியை சிந்தையில் வைத்து தியானிப்போம்.
-- எஸ். சந்திரசேகர்
No comments:
Post a Comment