இதுவரை மனிதனின் கண்டுபிடித்த அளவீடுகளில் மிகவும் சிறிய, மிக நுண்ணிய அளவாகப் பிளாங்க் அளவைச் (Planc Length) சொல்வார்கள். இந்தப் 'பிளாங்க் அளவு’, தசமப் புள்ளிக்குப் பின்னர் 35 பூச்சியங்கள் இட்டு அப்புறம்16 என்று வரும் இலக்கத்தின் மீட்டர் அளவுதான், ஒரு பிளாங்க் அளவு. அதாவது ஒரு பிளாங்க் அளவு = 0.000000…..(35 பூச்சியங்கள்)…..16 மீட்டர்.
இந்த மிகநுண்ணிய அளவீட்டைக் கண்டுபிடிதவர் 'மாக்ஸ் பிளாங்க்' (Max Planck) என்பவராவார். இவர் ஒரு ஜேர்மனியர். நான் இப்போது வசிக்கும் இடத்திலிருந்து சிறிது தூரத்தில்தான் இவரும் வசித்திருக்கிறார். ‘அதிர்விழைக் கோட்பாடு’ என்று சொல்லப்படும் ஸ்ட்ரிங் தியரியில் (String Theory) சொல்லப்படும் ‘அதிர்விழை' (String), ஒரு பிளாங்க் அளவு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஸ்ட்ரிங்குக்கு அடுத்து மனிதன் புரிந்து கொண்ட மிகச்சிறிய துகளென்றால் அது நியூட்ரீனோதான். நியூட்ரீனோ என்னும் நுண்ணிய துகள், தசமப்புள்ளிக்குப் பின்னால் 24 பூச்சியங்கள் வரும் மீட்டர் அளவாகும். அதாவது, 0.0000….(24பூச்சியங்கள்)…1 மீட்டர். அவ்வ்வ்வ்வ்வ்வ்வளவு சிறிய துகள் அது. ஆனாலும், இதைவிடப் பெரிய அளவுள்ள நியூரீனோக்களும் உண்டு. நியூட்ரீனோக்களில் மூன்று வகை உண்டு.
1.எலெக்ரான் நியூட்ரீனோ (electron neutrinos), 2.மியூவான் நியூட்ரீனோ (Muon neutrinos), 3.டாவ் நியூட்ரீனோ (Tau Neutrinos)
நியூட்ரீனோக்களை பிசாசுத் துகள்கள் (Ghost Particle) என்றும் சொல்வார்கள்.
(தொடரும்)
பிற்குறிப்பு: நியூட்ரீனோ ஆய்வு மையம், தமிழகத்தில் உருவாக்கப்பட இருப்பதால், அதுபற்றி எழுதும்படி பலர் கேட்டிருந்தார்கள். நான் எந்தவொரு அரசியலுக்குள்ளும் உள்நுழையாமல், நியூட்ரீனோக்கள்பற்றிப் படிப்படியாக விளக்கங்களைத் தரலாமென்று நினைக்கிறேன். பிடித்தால் சொல்லுங்கள் தொடர்கிறேன். "பட் நோ பாட் வேர்ட்ஸ் ப்ளீஸ்……" (அரசியல் என்பதால் சொல்லிவைக்கிறேன்.
-ராஜ்சிவா-
No comments:
Post a Comment