கிட்டத்தட்ட அனைவரின் கையிலும் இப்போது ஆண்ட்ராய்டு மொபைல் தான் இருக்கும் .விலை குறைவு ,புதிய தொழில் நுட்பம் ஆகிய காரணங்கள் முக்கியமானவையாக இருக்கும் .இத்தகைய மொபைல்களில் பரவலாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் os ,version upgrade ,new applications ,ரூட்
இதில் ரூட் பற்றிய தகவல்களை பார்க்கலாம் ,இதைபற்றி பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் ,சிலர் வாரண்டி காரணமாக ,பழுதாக வாய்ப்பு உள்ளதாக பயன்படுத்துவதில்லை
சுருங்க கூறுவதென்றால் ரூட் என்பது உங்கள் போன்-ன் super user access பெறுவதுதான் .உங்களுக்கு மொபைல் வழங்கிய நிறுவனம் உங்களால் இவற்றை மட்டுமே பயன்படுத்தி கொள்ளமுடியும் என்கிற எல்லையை வைத்திருப்பார்கள் ,அந்த எல்லையை உடைத்து முழு பயன்பாட்டை பெறுவதுதான் ரூட்
ரூட் செய்வதன் பலன்கள்:
1.தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் UI பிடித்தவாறு மாற்றிக்கொள்ளமுடியும்
2.version upgradeசெய்து கொள்ளமுடியும்
3.gps பிக்ஸ் செய்து கொள்ளமுடியும்
4.battery திறன் அதிகரித்து கொள்ளமுடியும் .
5.சில முக்கியமான applications ரூட் உதவியினால் மட்டுமே இயக்க முடியும் (ramsweeper,call blocker)
இன்னும் பல வசதிகள் நமக்கு ஏற்றவாறு செய்து கொள்ளமுடியும்
குறைபாடு:
warrenty claim செய்து கொள்ளமுடியாது
(தற்போது உள்ள முறையில் unroot செய்து கொள்ளமுடியும்
warrenty கிடைக்கும் )
gingerbread மொபைல் களில் சூப்பர் ஒன் கிளிக் மூலமாக செய்துகொள்ளலாம்
ics ,jb ,மொபைல் களில் ரூட் வித் பைனரி மூலம் செய்து கொள்ளலாம்.
பெருமளவு சீனா மொபைல் களிலும் CHINDIAN மொபைல் களிலும்
(CHINA -INDIA ,micromax ,karbonn ,lenova ,acer ,)CHINA made indian brand name இதை பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம் ) மொபைல் களிலும் இது வேலை செய்யும்.
நீங்கள் உங்கள் மொபைல் ஐ ரூட் செய்ய விருப்பபட்டால் ,முதலில் உங்கள் மொபைல் க்கான flashing முறையை தெரிந்து வைத்துகொண்டு முயற்சியுங்கள் .ஏனென்றால் ரூட் தவறாகி விட்டால் flah செய்வதன் மூலம் சரிசெய்து கொள்ளமுடியும் .இந்த பிளாஷ் மூலம் உங்கள் warrenty திரும்ப கிடைக்கும்
ரூட் தவறாக செய்தால் இரண்டு விளைவுகள் ஏற்படும்
1.soft brick
இதில் மொபைல் -ன் பூட் லோகோ வந்து உள்ளே செல்லாமல் அப்படியே நின்று விடும் ,இதை பிளாஷ் மூலம் சரி செய்து கொள்ளலாம்
2.hard brick
இதில் மொபைல் on ஆகாமல் இருந்துவிடும் ,பூட் லோகோ வும் தெரியாது, இந்த பிரச்சனை வந்தால் புது மொபைல் வாங்க வேண்டியதுதான் ,
ரூட் செய்யும் போது இந்த hard brick வர வாய்ப்புகள் மிகவும் குறைவு.
சோனி மொபைல் வைத்திருபர்வர்களுக்கு இவை பயன்படாது .
அதில் முதலில் bootloder unlock செய்ய வேண்டும்.ஆகவே இதை செய்து பார்க்க வேண்டாம்
முயற்சித்து பாருங்கள் ,warrenty க்கு ஆசைபட்டு புதிய தொழில் நுட்பங்களை தவற விடாதீர்கள்