Monday, November 3, 2014

ஸ்லோமோஷன் டைம் (slowmotion time)....

       என்ன TITLE புரியவில்லையா?  ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். ஒரு பத்து முறை கீழே உள்ளதை படித்தால் புரியும்.....
         இப்போது உங்கள் வயது நாற்பது. உங்கள் மகன் வயது இருபது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் மகன் வயது எழுபது: உங்கள் பேரன் வயது நாற்பத்தெட்டு. ஆனால், உங்கள் வயது மட்டும் நாற்பதும் ஒரு மாதமும். அதாவது உங்களைவிட பேரன் எட்டு வயது மூத்தவந்தான். இது எப்படி சாத்தியம்? என்று தோன்றும். இதற்கும் விடை இருக்கிறது.

          நாற்பது வயதாகும் நீங்கள் வானவெளிப் பயணம் செல்கிறீர்கள். ஏவுகணையின் வேகம் (வினாடிக்கு 186000 மைல்) ஒளியின் வேகம்! உலக கணக்குப்படி இப்பயணத்திற்கு ஆகும் நேரம் ஐம்பது ஆண்டுகள். ஆனால், ஏவுகணையில் இடைவிடாது சீராக பயணம் செய்யும் நீங்கள் மேற்கொண்ட பயணத்தின் கால அளவு, உங்கள் கடிகாரக் கணக்குப்படி, ஒரு மாத காலம்தான். இதனால், உங்கள் வயது ஒரு மாதமே கூடியிருக்கும். இதற்கு ஐன்ஸ்டைன் விளக்கம் கூறுகிறார்.....



           "மனித இதயம் ஒரு வகைக் கடிகாரத்தைப் போன்றது. இதயத் துடிப்பைக் கடிகாரத்தோடு ஒப்பிடலாம். ஓடும் பொருளோடு இணைக்கப்பட்ட கடிகாரம் மெதுவாக இயங்குவது போல, ஒளியின் வேகத்தில் பயணம் செய்யும் மனித இதயமும் மெதுவாக இயங்கும். இதற்கேற்பவே உடல் மெதுவாக வளர்ச்சி அடைகிறது. இதனால்தான் இந்த வினோத மாற்றம் மெதுவாக நடைபெறுவதால், இளமை பாதுகாக்கப்படுகிறது.

            ஆனால்,பூமியில் ஐம்பது ஆண்டுகள் விண்வெளியில் 30 நாட்கள் மட்டுமே. எனவே, பேரனின் வயது கூடிவிட்டது. 'பூமியில் ஒரு வருடம் என்பது தேவலோகத்தில் ஒரு நாள்'  என்று நம் புராணங்களும் கூறுகின்றன.

             என்ன? இனிமே நாம இளமையாகவே இருக்க அடிக்கடி விண்வெளிப் பயணம் கிளம்புவோமா..............!