Monday, November 17, 2014

ANDROID SMART PHONE HOTSPOT? ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் ஹாட்ஸ்பாட் வசதி பெறுவது எப்படி..? Read more at: http://tamil.gizbot.com/how-to/



ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை ஹாட்ஸ்பாட்டாக மாற்றுவது எப்படனு தான் இங்க பார்க்க போறீங்க. முதலில் இது சாத்தியமானு கேட்கின்றீர்களா, இதற்கென கண்டறியப்பட்ட சில வழிமுறைகளை பின்பற்றினால் உங்க ஸ்மார்ட்போனையும் ஹாட்ஸ்பாட்டாக மாற்ற முடியும்

செட்டிங்ஸ் உங்க போனின் செட்டிங்ஸ் சென்று டெத்தரிங் அன்ட் போர்ட்டபள் ஹாட்ஸ்பாட் ஆப்ஷனை தேர்வு பன்னுங்க. சில போன்களில் இந்த ஆப்ஷன் உங்க போனின் செட்டிங்ஸ் - நெட்வர்க்ஸ் - ஷேரிங்கிலும் இருக்கும்

ஹாட்ஸ்பாட்:

இப்போ செட் அப் ஹாட்ஸ்பாட் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள், இது கான்பிகர் வைபை ஹாட்ஸ்பாட் என்று சில ஸ்மார்ட்போன்களில் காண்பிக்கும்

பெயர்:

இப்ப வைபை நெட்வர்க்கின் பெயர் மற்றும் அதற்கான பாஸ்வேர்டை கொடுத்து சேவ் பன்னுங்க

வைபை ஹாட்ஸ்பாட்:

இப்போ போர்ட்டபள் வைபை ஹாட்ஸ்பாட் ஆப்ஷனை தேரவு செய்தால் உங்க ஆன்டிராய்டில் ஹாட்ஸ்பாட் ஆன் ஆகி விடும்

ஆன்டிராய்டு :

இன்று ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் ஹாட்ஸ்பாட் பெறுவது எப்படினு பார்த்தோம், அடுத்து விண்டோஸ் மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்