மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதவது.
இ.பி.கோ. 498 ஏ பிரிவின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை தன்னிச்சையாக கைது செய்யக்கூடாது என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். கைது செய்வதற்கான அவசியம் உள்ளதாக போலீஸ் அதிகாரிகளே திருப்தி அடையும் வகையில் காரணங்கள் இருந்தால்தான் கைது செய்ய வேண்டும். அந்த காரணங்கள் அடங்கிய பட்டியலை, போலீஸ் அதிகாரிகளுக்கு மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.
வழக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குள், குற்றம் சாட்டப்பட்டவர் நேரில் ஆஜராவதற்கான நோட்டீசு அனுப்பப்பட வேண்டும். அந்த கால அவகாசத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் குறிப்பிட வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதில்லை என்ற முடிவை இரண்டு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுக்கு போலீஸ் அதிகாரி தெரிவிக்க வேண்டும். அந்த கால அவகாசத்தை போலீஸ் சூப்பிரண்டு நீட்டித்துக் கொள்ளலாம். அதற்கான காரணத்தையும் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்.
மேலும், இத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, போலீஸ் அதிகாரியின் அறிக்கையை ஆய்வு செய்து, மேற்கூறிய காரணங்கள் உள்ளதா என திருப்தி அடைந்த பிறகே, அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட வேண்டும்.
ஆனால், இந்த காரணங்கள் இல்லாமல் காவலில் வைக்க உத்தரவிட்டால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு மீது ஐகோர்ட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும்.
thanks - CrPC - இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம்