Saturday, November 22, 2014

rail ‘ஓடும் ரயிலில்’ ஏறி தவறி ஒருவர் விழுந்து விட்டால், யார் பொறுப்பு?


-நாம் ‘ஓடும் ரயிலில்’ ஏறி கொண்டிருக்கும்போது, தவறி விழுந்து இறந்தால், ரயில்வேதான் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 
நீதிபதிகள் H.K. Sema மற்றும் Markandey Katju ஆகியோர், “நாம் ரயில்வே சட்டம் பிரிவு 123(c) ஐ கண்டிப்பாக கடைபிடித்தால், நிறைய பயணிகள், இந்த தலைப்பில், ஏதும் இழப்பீடு பெற முடியாது” என தெரிவித்துள்ளனர். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தனியாக கார் எடுத்தோ, விமானம் மூலமோ பயணிக்க முடியாமல், ரயில் மூலம் பயணிக்கின்றனர். நாம் இந்த சட்டப்படி, ஓடும் ரயிலில் ஓடி பயணி இறந்தால், ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல என்று ஸ்ட்ரிக்ட் ஆக பார்த்தால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த பிரிவின் படி, யார் ஒருவர் ரயிலில் பயணிக்க உரிய பாஸ் அல்லது டிக்கெட் வைத்திருந்தாலும், அவர் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்து இறந்தால், அதற்கு ரயில்வே நிர்வாகம்தான் பொறுப்பு என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
May 23, 1996 இல் ரயிலில் ஏறும்போது விழுந்து இறந்த தனது மனைவி அப்ஜா என்பவருக்காக அவரது கணவர் பிரபாகரன் விஜயகுமார், ரயில்வே தீர்ப்பாயம் முன்பு இழப்பீடு கேட்டு வழக்கு தாக்கல் செய்தார். அதை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து, கேரளா உயர்நீதிமன்றத்தில் அது மேல் முறையீடு செய்யப்பட்டபோது, ரூபாய் இரண்டு லட்சம் வட்டியோடு கிடைத்தது. அதை எதிர்த்து, இந்திய அரசு அப்பீலுக்கு உச்ச நீதிமன்றம் சென்றபோது, மேலே சொன்ன தீர்ப்பு வந்துள்ளது.
Thanks – the hindu