குடும்ப வன்முறை
=============== உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாக வோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் கு டும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப் பது, தள்ளுவது, கையில் கி டைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அல்லது அது இல் லாமையோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான குடும்ப வன்மு றை. இது கணவன் – மனை வி இடையில் மட்டுமே நடக்க வேண்டுமெ ன்பதில்லை. மற்ற உறவினர்களுக்கு இடையிலும் நடக்கலாம். சந்தேகப் படுவது, ஆபாசமாக திட்டுவது, அவதூறு செய்வது, தனிமைப் படுத்துவது போன்ற வை மன ரீதியான வன்முறைகள். தேவை யில்லாமல் தொட்டுப் பேசுவது, முத்த மிடுவது, கட்டியணை ப்பதில் தொடங்கி வல்லுறவு வரை செல் வது பாலியல் ரீதியான வன்முறைகள்.
இந்தச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?
============================== இந்தியாவில் 70 சதவிகித பெண்கள் குடும்ப வன்முறையா ல் துன்புறுத் தப்படுவதாக புள்ளி விவரம் சொன்னதை அடுத்து மத்திய மகளிர் மற் றும் குழந் தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் குடும்ப வன்முறை பெண் கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற ப்பட்டு அது 2005ம் ஆண்டு அமலு க்கு வந்துவிட்டது.
இதன்படி கணவன் தன் மனைவியை அடித்தா லோ அல்லது அவமானப் படுத்தி துன்புறுத்தி னாலோ இருபதாயிரம் ரூபாய் அபராதமும், ஓராண் டு சிறை தண்டனையும் கிடைக்கும்.
பெண்கள் மீதும் இந்தச் சட்டம் பாயுமா?
============================== குடும்ப வன்முறை புகார் என்றால் அது ஆண்கள் மீதுதான் பாய வேண் டு ம் என்று அவசியமில்லை. பெண்கள் மீதும் பாயும். சில மாதங்களுக் கு முன்பு மும்பை உயர் நீதிமன்றம் இதை உறுதி செய்திருக்கிறது.
‘பெண்களுக்கான நீதியை உறுதி செய்யும் விதமாகவே இச்சட்டத் தைப் பார்க்க வேண்டும். அவர்க ளுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தால் சட்டமே பொருளற் றுப் போய்விடும். வன்முறைக்கு ஆளான பெண், அதைத் தொடுத்த ஆண்களுக்கு எதிராக புகார் தருவது போலவே ஆண் களும் பெண்களு க்கு எதிராக புகார் செய்யலாம்’ என ஒரு மனுவை விசாரித்த நீதிபதி தன் தீர்ப்பி ல் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தச் சட்டம் பயனுள்ளதா?
=========================== நிச்சயமாக. ஆனால், குழந்தைத் தொழி லாளர் ஒழிப்பு, வரதட்சணை தடுப்பு, குழந்தைத் திருமணம், ஈவ் டீசிங் போ ன்ற சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டு விட்டன. அவை அமலுக்கு வந்தும் ஆண்டுகள் பலவாகி ன்றன. ஆனால், இன்றும் குழந்தைத் தொ ழிலாளர்கள் இருக்கிறார்கள். வரதட்சணை கொடுமை பல சமூகங்களில் நடை முறை யில் வெளியே தெரியாதவாறு இயங்குகி ன்றன. குழந் தைத் திருமணம் குறிப்பிட்ட சில சமூகங்களிலும், வட மாநிலங்களி லும் நிலவுகின்றன. ஈவ் டீசிங் தொட ர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் போல வே குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்ட மும் ஏட்டளவில்தான் உயிர் வாழ்கிறது.
இதற்கு என்ன காரணம்?
================== உள்ளங்கை நெல்லிக்கனி. இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண் முதலில் புகார் அளிக்க வேண்டும். ஆனால், கணவனை சிறைக்கு அனு ப்பிவிட்டு, தான் மட்டும் குழந்தைக ளுடன் நிம்மதியாக வாழ எந்த நடுத் தர, கீழ் நடுத்தர, ஏழைப் பெண்களும் விரும்புவதில்லை. அதற்கு அவர் களது வளர்ப்பு முறையும் இடம் தர வில்லை. இந்திய கலாசாரம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்தும் இதற்கு இடம் தருவ தில்லை. எனவே பெரும்பாலான பெண்கள் புகார் தருவதில்லை. அத னால் இந்தச் சட்டம் வெறும் பேப்பரில் மட்டுமே அச்சடிக்கப்பட்டதாக இருக்கிறது.
தமிழகத்தின் நிலைமை என்ன?
========================== கடந்த ஆண்டு குடும்ப வன்முறை குறித்து இந்தியா முழுவதிலும் இரு ந்து பதிவான புகார்களின் எண்ணிக்கை 4,547. அதில் தமிழகத்தில் மட்டு மே பதிவான புகார்களின் எண்ணிக்கை 3,838. அதாவது, நாட்டில் ஒட்டு மொத்தமாக பதியப்பட்டிருக்கும் புகார் களில் 80 சதவிகிதத்துக்கும் மேலாக தமிழகத்தில்தான் பதியப்பட்டிருக் கிறது. இந்த புள்ளி விவரத்தை சொன்னது அல்லது வெளியிட்டது எந்த தன்னார்வ அமைப்பும் அல்ல. கடந்த மாதம், அதாவது, ஆகஸ்ட் 6 அன்று, கேள்வியொன்றுக்கு நாடாளுமன்ற த்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்த தகவல் இது.
அப்படியானால் மற்ற மாநிலங்களில் வசிக்கும் பெண்கள் கொடுமைக்கு ஆளாவதில்லையா?
===================================== அப்படி சொல்ல முடியாது. ஏனெனில் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேச ம், பீகார், சட்டீஸ்கர், கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேச ம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிஸோர ம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கா ளம், அந்தமான் நிக்கோபார், தில்லி ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் எவ்வளவு புகார் கள் பதியப்பட்டன என்று தெரியவி ல்லை. உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அட்டவணையில் இந்த விவரங்கள் இல்லை. தகவல் கிடைக்கவில்லை என்கிற பதிலைத்தான் நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழ் நாடு ஆகிய ஐந்து மாநிலங்க ளின் தகவல்கள் தான் மத்திய அரசிடம் இருக்கின்றன. இதனடி ப்படையில்தான் கடந்த ஆண்டு இந்தியா முழு வதிலும் இருந்து பதிவான புகார்களின் எண்ணிக் கை 4,547 என்று சொல்கிறார் கள். கர்நாடகாவில் நான்கே நான்கு வழக் குகள்தான் கடந்த ஆண்டு பதிவாகியிருக்கிறதாம். உத்ச்ரப்பிரதேசத்தில் ஒரு வழக் கு கூட பதிவாகவில்லையாம். (ஆதாரம்: லி.ஷி. ஹிஷி.னி.ழி ளி. 388 திளிஸி 06.08.2013).
புள்ளி விவரங்கள் உணர்த்தும் பாடம் என்ன?
=============================== மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் இந்த விவரங்களை வைத்து மற்ற மாநிலப்பெண்கள் மகிழ்ச்சியாக வாழ் வதாக பொருள்கொள்ள முடியாது. நாகரீக சமூகத்துக்கு சவால்விடும் வகையில்தான் இந்தியாவில் குடும்பங் கள் இயங்கி வருகின்றன. ஆணாதிக்க சமூகம் என்பதற்கான முழு பொருளை யும் நடைமுறையில் உணர்த்தி வருவது இந்தியக் குடு ம்பங்கள். பெண்களுக்கு சம உரிமை, பேச்சுரிமை, பொருளாதார உரி மை, கல்வி உரிமை ஆகியவை இன்னும் முழு வீச்சில் செயலுக்கு வர வில்லை. வெற்று கோஷங்களாகத்தான் காற்றில் கரைகின்றன. ஆண்க ளை சார்ந்து வாழ்வதே பெரும்பாலான பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிற து. சொல்லப்போனால் இதை எதிர்க் க வேண்டும் என்று கூட பல பெண் கள் நினைக்கவில்லை. அந்தளவு க்கு அறியாமையில் வாழ்கிறார் கள்.
தமிழகம் முன்னுதாரணமா?
=============================== ஆமாம். நாட்டிலேயே அதிகளவு புகார்கள் தமிழகப் பெண்களால்தான் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதை எதிர்மறையில் எப்படி இந்தியாவி லே யே தமிழகத்தில்தான் பெண்கள் மீதான கொடுமைகள் அதிகளவு இருக்கின்றன என்று பார்க்கிறோ மோ அதே போல் நேர்மறையில் இன்னொரு விஷயத்தையும் பார்க் கலாம். அணுகலாம். அதாவது, தமிழகப் பெண்கள் துணிச்சலுடன் ஆண்கள் மீது புகார் கொடுக்க முன் வந் திருக்கிறா ர்கள் என்பதுதான் இது. இந்த துணிச்சல் ஒரே இரவில் பெண்களுக்கு வந்து விடவில்லை. தந் தை பெரியாரில் தொடங்கி பல திராவிட இயக்க முன்னோடிகளும், சமூக ஆர்வ லர்களும் தொடர்ச்சி யாக போராடி வந் ததன் விளைவைத்தான் இந்தத் தலை முறையை சேர்ந்த பெண்கள் அனுபவிக் கிறார்கள். தெளிவுடன் இருக்கிறார்கள். தங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். மறுக்கப்படுவ தை கேட்டுப் பெறு கிறார்கள்.
இதற்கு காவல்துறை தோள் கொடுக்கிறதா?
============================= இல்லை என்றுதான் வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. இந் த முடி வுக்கு வரவும் மத்திய அரசு தாக்கல் செய் திருக்கும் விவரங்கள் தான் காரணம். சென்ற ஆண்டு தமிழகத்தில் குடும்ப வன் முறை பெண் கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவான புகார்களின் எண்ணிக்கை 3,838. ஆனால், இவற்றில் காவல்துறை யால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டவை வெறும் 9 புகார்களுக்குத்தான். அதே போல் குடும்ப வன் முறைக்கு தண்டிக்கப்பட்டவர்களும் வெறும் 11 பேர்தான். அதாவது, கு டும்ப வன்முறைக்கு ஆளாகும் போது காவல்துறையிடம் புகார் தெரி விக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பரவலாக தமிழகப் பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வன்முறையை மேற் கொண்டவர்களுக்குத் தண்ட னை வாங்கித் தரவேண்டும் என்ற அக்கறை காவல்துறைக்கு இல்லை.பின்தங்கிய மாநிலம் என்று கருதப்படுகிற ஜார்கண்டி ல் கூட இந்த நிலை இல்லை.
கடந்த ஆண்டு அங்கு பதிவான குடும்ப வன்முறை புகார்களின் எண்ணி க்கை 552. இதில் 108 பேர் தண்டனை பெற்றி ருக்கிறார்கள். அதாவது, மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த மாநிலத்தில், மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற் கே நேரம் சரியாக இருக்கும் அந்த மாநிலத் தி ன் காவல்துறை, அதையும் மீறி குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பதிவான புகார் களையும் விசாரித்திருக்கிறது. இதுபோல் தமிழக காவல் துறையும் குடும்ப வன்மு றையின் கீழ் பதிவாகும் புகார்களை விசாரி த்து சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நீதி கிடை க்க வழிவகை செய்தால் நன் றாக இருக்கும். ஏனெனில் இந்தியாவிலேயே முதன் முறை யாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப் பட்டது தமிழகத்தில் தான். இப் போது நம் மாநில த்தில் மொத்தம் 1,296 காவல் நிலையங்கள், 196 மகளி ர் காவல் நிலையங்கள் இருக்கின்றன. சுமார் 250 ஐபிஎஸ் அதி காரிகள், ஒரு லட்சம் காவலர்கள் பணியாற்றுகிறார்கள். இயற்றப்பட்ட எல்லா சட்ட ங்களையும் போல், இந்த குடும்ப வன்முறை பாது காப்புச் சட்டத்துக்கு உயிர் கொடுக்கும் பொறுப்பும் இவர்களிடமே இருக்கின்றன. ஆவனச் செய்வார் கள் என்று நம்புவோம்.
- கே.என்.சிவராமன், தினகரன்