Thursday, November 6, 2014

(Botox) என்னும் ஒரு ஊசி

ஒரு ஹாலிவூட் நடிகர்/நடிகை ஐம்பது வயதுக்கு அப்புறமும் இளமையான முகத்துடன் இருப்பார். அதைப் பார்த்துவிட்டுப் பல வீடுகளில் இருக்கும் மனைவிகள், “அட! என் புருஷன் முகம் சுருக்கமாகி, வயது போனவர்போல ஆகிவிட்டாரே!” என்று கொஞ்சம் மனதுக்குள் நினைத்துக் கொள்வதுண்டு. கணவர்களோ ஒருபடி மேலே போய், "அட! அந்த நடிகைக்கு என்ன வயதென்று நினைக்கிறே! உன்னைவிடப் பத்து வயது அதிகம். ஆனால் முகம் எப்படிப் பளிச்சென்று இருக்குப் பார்!” என்று நேரடியாகவே சொல்லிவிடுவார்கள்.
ஆனால், யதார்த்தம் வேறானது. வயது போனால், முகத்தில் சுருக்கங்கள் வருவது இயல்பானது. பிரபிரபிரபலங்களின் இந்த இளமையான முகங்களுக்குக் காரணம் ‘போடொக்ஸ்’ (Botox) என்னும் ஒரு ஊசி மருந்துதான். முகத்தின் சருமத்தில் செலுத்தும் ‘போடொக்ஸ்' ஊசியானது சில நாட்களுக்கு முகத்தை இளமையாக வைத்திருக்கும். ஊசி மருந்தின் வீரியம் குறைந்ததும், பழையபடி முகம் மீண்டும் சுருக்க நிலைக்கு மாறிவிடும். மீண்டும் போடொக்ஸ்.

 

இந்த மாதிரியான இளமைக்குக் கொடுக்கும் விலை அதிகமானது என்பதால் சாதாரண மக்கள் இதற்குள் அகப்பட்டு அவதிப்படுவதில்லை. இவ்வளவு செலவளித்து இதைப் பாவிப்பதைவிட, சாதாரண முகமே போதுமானது என்று அவர்கள் இருந்து கொள்வது நன்மைபயக்கும் விசயம்தான். ஆனால், இதையும் தாண்டி ‘போடொக்ஸ்' பாவனை செய்பவர்கள் மிகமோசமான பக்கவிளைவுகளுக்கு உள்ளாவார்கள் என்று சொல்லப்படுகிறது.
"உங்கள் கணவன்/மனைவி எப்படியான முக அமைப்புடன் இருந்தாலும், காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஒன்றைப் பார்த்து, இன்னொன்றை அலட்சியம் செய்துவிடாதீர்கள்”
ராஜ்சிவா -