Saturday, November 22, 2014

அட வாங்கப்பா பணம் சம்பாரிக்க முயற்ச்சி பண்ணலாம்!!!

வணக்கம் நண்பர்களே....


                  பெரும்பாலான வாசகர்கள் இந்த தளத்தில் உள்ள நல்ல செய்திகளை படித்து பயன் பெற்று உள்ளீர்கள்!  இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது! மேலும் பலர் என்னுடன் தினமும் தொடர்பில் இருப்பது என் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது! 

நாம் எவ்வளவோ நேரத்தை இணையதளத்தில் இதுவரை செலவிட்டு உள்ளோம். இனி அந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காக ...

"சில பயனுள்ள இணைய தளத்தின் மூலம் எப்படி வீட்டில் இருந்து 

கொண்டே வருமானத்தை பெருக்கலாம் என்ற சில தந்திரத்தை 

உங்களுக்கு வரும் DECEMBER 7 ஆம் திகதி 2014- ல் மாலை 5 மணிக்கு 

தெரிவிக்க போகின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன் " 

பலர் இணையதளத்தின் மூலம் ஏதாவது ஒரு வழியில் வருமானம் பெற முயன்று தோல்வியுற்றிருக்கலாம். ஆனால் நான் உங்களுக்கு படி படியாக தகவலை இந்த இணையதளம் மூலமாக தெரிவிக்க போகின்றேன். ஆகையால் நீங்கள் இதை பின்பற்றி சரியான முறையில் பணத்தை பெற உங்களுக்கு நான் உதவியாக இருக்க போகின்றேன்! 

ஆகையால் அனைவரும் paypal மற்றும் payza இணையதளத்தின் மூலம் உங்கள் கணக்கை ஆரம்பித்து வைத்துக்கொண்டு தயாராக இருங்கள்!

மேலும் சிலருக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றது. சில இடங்களில் உள்ள தலைப்புகளை சொடுக்கும் போது வேறு ஒரு தளத்திற்க்கு சென்று விடுகின்றது. ஆகையால் என்னால் தலைப்புக்கு உண்டான செய்தியை படிக்க முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்கள்!

அது வேறு ஒரு தளத்திற்க்கு சென்றாலும், திரையின் வலது பக்க மூலையில் திரையை திறந்த 5 நொடிகளுக்கு பின்பு SKIP ADD என்று தெரிய ஆரம்பிக்கும்! அதை சொடுக்கினால் உங்களுக்கு வேண்டிய செய்திகள் தெரிய ஆரம்பிக்கும். 

இவ்வாறு ஆகும் படி அமைத்து வைத்தது அடியேன் தான். ஏனென்றால் நீங்கள் காத்திருக்கும் 5 நொடிகளின் மூலம் எனக்கு ஒரு மிக சிறிய தொகை கிடைக்கும் படி அமைத்துக் கொண்டுள்ளேன்! மேலும் இந்த தளத்தின் மூளை முடுக்குகளில் உள்ள விளம்பரத்தையும் தாங்கள் விருப்பப்பட்டால் ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டு உங்கள் வேலையை தொடர்ந்தால் அடியேன் பயன் பெறுவேன். . தேனீயை போன்று சிறுக சிறுக உங்களுக்காக தகவல் சேகரிக்கும் எனக்காக ஒரு சிறு உதவியாக இது இருந்து விட்டுப் போகட்டுமே என்று தான்!

நான் உங்களிடம் எதிர்பார்பது உங்களின் நட்பு ஒன்றை மட்டுமே! இந்த தளத்திற்க்கு  உங்களின் வருகையும், உங்கள் கருத்துக்களுமே எனக்கு முக்கியம். உங்கள் கருத்துக்களை இந்த தளத்தில் உள்ள கருத்துப் பெட்டியில் எழுதி அனுப்பவும்! 


இதை எனக்காக பொறுமையாக படித்த என் அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்றும் உரிதாகட்டும்!


என்றும் அன்புடன் 

DINESH
959 777 1037 


-------------------------------------------------------------------------------------------------------------------



வாசகர்கள் எந்த அளவு திறன் படைத்தவர்கள் என்ற அடிபடையில் அவர்களுக்கு படிப்படியாக இணையத்தில் வேலை கற்றுக் கொடுக்கப்படும்.
ஆகவே, இந்த வலை பதிவில் உள்ள CONTACT FORM -ல் தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டும் மின் அஞ்சல் வழியாக வேலை கற்றுக்கொடுக்கப்படும்.

வாசகர்களாகிய நீங்கள் செய்வது இதை மட்டுமே....

  •  fill this details then send me
  • Do u have paypal and payza account?

  • Wru from?

  • Watz ur qualification?

  • ur contact num?

  • do u have 300 online friends?

  • wr r u working?


give me ans. then i wil tel u a suitable job.



Thank u and keep in touch

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம் நண்பர்களே!

நீங்கள் எதிர்பார்த்த வேலை இதோ உங்களுக்காக!


மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ சொடுக்கினால், உங்களுக்கு கணக்கை தொடங்க கூடிய பக்கம் உருவாகும். அதில் உங்கள் விவரங்களை பதிவு செய்து உங்கள் வேலையை தொடங்கலாம்.

இனி விவரமாக பார்க்கலாம்!

இப்பொழுது உங்களுக்கு தேவையானவை இரண்டு தான்,
  1. இணையவசதி கொண்ட ஒரு கம்ப்யூட்டர்
  2. ஆன்லைன் வேலை செய்யத் தேவையான ஆர்வம்
இவைகளைத் தவிர கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங், வங்கிகணக்கு, முதலீடு, முன்-அனுபவம், படிப்பு, திறன்கள் என எதுவும் தேவையில்லை. இவ்விரண்டும் உள்ளவர்கள் யாரானாலும் கீழே தொடரலாம். வேலைகள் என்ன என தெரிந்து கொண்டு சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்

பேசா கணக்கை தயார் செய்துகொள்ளுங்கள்

முதலில் உங்களுக்கு ஒரு பேசா அக்கொண்ட் (கணக்கு) வேண்டும். பேசா என்பது ஒரு வெப்சைட். இணையத்தில் இந்த வெப்சைட் ஒரு வங்கி போல செயல்படுகிறது. நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
  1. https://payza.com  என்ற முகவரிக்கு செல்லுங்கள்
  2. வெப்சைட் லோடானதும், 'Sign Up Now' என்ற பட்டனை அழுத்துங்கள்
  3. இப்பொழுது 'Starter' என்ற தொடுப்பை தேர்வு செய்யவும்
  4. பதிவு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, 'Next' என்ற பட்டனை அழுத்துங்கள்
  5. இரண்டாவது படிவத்தையும் சரியாக பூர்த்தி செய்யவும்.
  6. இரண்டாவது படிவத்தில் கவனத்திற்குரியவை: 'Transaction pin' என்பது இன்னொரு பாஸ்வேர்டு போன்றது. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள கூடிய எண்களை இக்கட்டத்தில் பூர்த்தி செய்யுங்கள். 'Third Party Information' என்ற விண்ணப்பத்தில் 'No' என்று தேர்வு செய்யவும். எல்லாம் முடிந்தபிறகு, 'Final Step' என்ற பட்டனை அழுத்துங்கள்.
  7. இப்பொழுது, கணக்குப்பதிவு படிவத்தில் நீங்கள் கொடுத்த உங்கள் ஈமெயில் முகவரிக்கு பேசா ஒரு மின்னஞ்சல் அனுப்பும். அந்த மின்னஞ்சலை திறந்து அதில் உள்ள தொடுப்பை சொடுக்குங்கள், உங்கள் பேசா கணக்கு உடனடியாக ஆக்டிவேட் ஆகிவிடும்.
இப்பொழுது இந்த ஈமெயில் முகவரியையும், கடவுச்சொல்லையும் கொண்டு உங்களது பேசா கணக்கை லாகின் செய்யலாம். இந்த பேசா அக்கௌண்ட் ஒரு பேங்க் அக்கௌண்ட் போன்றது. இணையத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்த பேசா கணக்கில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஆன்லைன் வேலை வழங்குகின்ற ஒரு வெப்சைட்டில் நீங்கள் இரண்டு டாலர் (2$) சம்பாதித்து இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு அப்பணம் தேவைப்படும் போது, 'Withdraw', 'Cashout', 'Payment', 'Payout' என்று எதாவது தொடுப்பு அந்த வெப்சைட்டில் இருக்கிறதா என பாருங்கள். கண்டிப்பாக இருக்கும், அதனை சொடுக்குங்கள். உடனே ஒரு புதிய பக்கம் தோன்றும். அதில் Payment Mode/Payment Option என்ற கட்டத்தில் 'PAYZA' என தேர்வு செய்து உங்களது பேசா அக்கௌண்டை லாகின் செய்ய நீங்கள் பயன்படுத்தும் ஈமெயில் முகவரியை சமர்ப்பியுங்கள். நீங்கள் சம்பாதித்த பணம் உங்கள் பேசா அக்கௌண்டிற்கு வந்துவிடும். இப்படியே நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்கள் பேசா கணக்கில் சேர்த்து வைத்து கொண்டே வாருங்கள். பேசா கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ள பேசாவில் லாகின் செய்து 'Withdraw Funds' என்ற தொடுப்பை அழுத்துங்கள். அதில் பணத்தை எவ்வாறு பெறலாம் என வழிகள் பட்டியல் இடப்பட்டிருக்கும் (உதாரணத்திற்கு பேங்க், செக், மணி ஆர்டர் - உங்களது நாட்டை பொருத்து மாறும்). அதில் உங்களுக்கு தேவையான வழியைத் தேர்வுசெய்து, படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் உங்கள் நாட்டுப் பணமாகவே வந்துவிடும். அல்லது நீங்கள், உங்களது பேசா அக்கௌண்டிலேயே பணத்தை சேமித்து வைத்துக்கொண்டே இருக்கலாம். அதில் உள்ள பணத்தை கொண்டு வெப்சைட், சாப்ட்வேர், சி.டி, புத்தகம், பொருள் வாங்குவது... என இணையத்தில் ஷாப்பிங்க் கூட செய்யலாம். நீங்கள் விரும்பினால் உங்களது பேசா அக்கௌண்டில் சேர்ந்த பணத்தை இணையத்திலேயே முதலீடு செய்து இன்னும் அதிகமாகவும் சம்பாதிக்கலாம் (இது குறித்து கீழே செய்திகள் உள்ளன). பேசா அக்கௌண்டில் எவ்வளவு பணத்தை சேமிக்கிறோமோ அவ்வளவும் லாபம் தான். இணையத்தில் சம்பாதிக்க கண்டிப்பாக இதெல்லாம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நீங்கள் ஆன்லைன் வேலைகளுக்கு புதியவர் என்றால் இதெல்லாம் பார்க்க பெரிய வேலைகள் போல தெரியலாம், எனினும் நீங்களாகவே செய்துபார்க்கும் போது நன்றாக புரிந்துகொள்வீர்கள். இப்பொழுது பேசா என்றால் என்ன என்று ஒரு மேலோட்டமாக உங்களுக்கு தெரிந்திருக்கும். அதனை புரிய வைக்கத்தான் இத்தனை விளக்கங்களும் :-)

பேபால் இணையவங்கி

Picture
(குறிப்பு: இந்த செய்தி இந்தியர்களுக்கு மட்டுமே ஏற்ற வகையில் சொல்லப்படுகிறது, எனவே, நீங்கள் வேறு நாட்டவராக இருந்தால் இதனைக் கண்டுக் கொள்ள வேண்டாம்.)

முதல் பக்கத்தை முழுமையாக படிக்காமல் வந்திருப்பீர்களானால் தயவுசெய்து ஒரு முறை படித்துவிட்டு வரவும். அப்பொழுது தான் இங்கு கூறப்பட்டுள்ள செய்தி உங்களுக்கு நன்றாக விளங்கும். முதல் பக்கத்தில் பேசா இணையவங்கியைப் பற்றி படித்திருப்பீர்கள். இப்பகுதியில் நீங்கள் தெரிந்துக் கொள்ள போவது பேபால் என்ற இன்னொரு இணையவங்கி பற்றி. பேசாவைப் போல பேபாலும் நீங்கள் ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தை பெற்றுக் கொள்ள உதவும்.



பேப்பாலின் சிறப்பு அம்சம்கள்:

1) மிக மிக நம்பிக்கைக்குரிய, நல்ல பெயர்பெற்ற, மிகச்சிறந்த‌ இணையவங்கி.

2) எல்லா ஆன்லைன் வேலை தளங்களும் இதனை பயன்படுத்துகின்றன.

3) இணையத்தில் நீங்கள் சீரியஸாக சம்பாதிக்க விரும்பினால், இதில் ஒரு அக்கவுண்ட் வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

4) நாம் ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தை எளிதாக நம் பேங்க் அக்கவுண்டில் பேபால் வழியாக இந்திய ரூபாயாகவே எடுத்துக் கொள்ளலாம்.

இந்தியர்களுக்கான தேவைகள்:

1) கண்டிப்பாக இதில் இணைய பேன் கார்டு தேவை.

(இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இந்திய அரசாங்கம் பேன் கார்டு என்ற அடையாள அட்டையை வழங்கி வருகிறது, உங்களிடம் இல்லையெனில் எளிதாக வாங்கிக் கொள்ளலாம், இதற்கு 100/200 ரூபாய் செலவாகும்)

2) கண்டிப்பாக ஒரு வங்கி கணக்கு இருக்க வேண்டும்.

இந்தியர்களுக்கான வருத்தமான செய்திகள்:

1) பேன்கார்டு, வங்கி கணக்கு இல்லாவிட்டால் இதில் அக்கவுண்ட் வைத்திருக்க முடியாது.

2) பேப்பாலில் இந்தியர்கள் பணத்தை சேமித்து வைக்க முடியாது. நீங்கள் ஆன்லைன் இணைய தளத்தில் சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலரும் ஏழு நாட்களுக்குள் உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பப்பட்டுவிடும்.

3) உங்கள் பேப்பால் கணக்கில் உள்ள பணத்தை இணையத்தில் செலவழிக்க முடியாது, உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு மட்டும் தான் எடுக்க முடியும், பேப்பாலே டாலர்களை இந்திய ரூபாயாக மாற்றி அனுப்பிவிடும்.

4) எனவே, இணையத்திலேயே நாம் சம்பாதிக்கும் பணத்தை சேர்த்து வைத்து நியோபக்ஸ் போன்ற தளங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை நாம் இழக்கிறோம்.

5) பேபால் இந்திய ரூபாயாக மாற்றி அனுப்பி வைப்பதற்காக நம்மிடம் கமிஷன் வசூலிக்கிறது, அதாவது அனுப்ப வேண்டியது 100 ரூபாய் என்றால் நமக்கு 98 ரூபாய் தான் அனுப்பும்.


பின்பு ஏன் பரிந்துரைக்கப்படுகிறது?

Picture
பேசா போன்ற இணையவங்கிகளைப் போல பேப்பால் அல்ல. பேசா போன்றவை இன்னும் பேப்பாலைப் போல ஒரு சிறப்பான சேவையை வழங்க முடியாமல் திணறி வருகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்கா பயன்பாட்டார்கள் தற்போது பேசாவைப் பயன்படுத்துவதில் பெரிய சிக்கல் நீடித்து வருகிறது, ஏனெனில் பேசா இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது, அமெரிக்காவில் உள்ள தன் பயனாளர்களுக்கு சேவைகளை நேரடியாகச் செய்யும் லைசண்ஸ் பேசாவிடம் இல்லை, எனவே ஈகோபே என்ற அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்திட்டு அவர்கள் வழியாக அங்கே தன் சேவையை வழங்கி வந்தது, எப்படியெனில் ஒரு அமெரிக்க பயனாளாருக்கு பணம் அனுப்ப வேண்டுமானால், பேசா அதற்கான தகவலையும் பணத்தையும் ஈகோபேவிற்கு அனுப்பும், ஈகோபே அந்த பயனாளருக்கு அனுப்பி வைப்பார்கள். கடந்த ஓராண்டாக பேசாவிற்கும் ஈகோபேவிற்கும் தகராறு. எனவே, ஈகோபே தன் உதவியை தர மறுத்துவிட்டது. இதனால் பேசாவால் அமெரிக்க பயனாளர்களுக்கு எந்த சேவையும் வழங்க முடியவில்லை.

அமெரிக்க பயனாளர்கள் தங்கள் பணத்தை அனுப்பச் சொல்லி பேசாவைத் துரிதப்படுத்த அது என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகிறது. அமரிக்காவில் தனது புதிய ஏஜென்ட்டை ஸ்தாபிக்கும் வேலையைச் செய்து வருவதாகவும், அதுவரை பொறுக்குமாறும் தன் அமெரிக்க பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது, இதனால் அவர்கள் வெறுத்துப் போய் உள்ளார்கள். அரசாங்க வேலைகள் என்றாலே ஆமை போல நகரும் என்பது நாம் அறிந்ததே, இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. அதனால் மிகவும் கால தாமதமாகி வருகிறது. இணையத்தில் ஆன்லைன் வேலைகளைச் வழங்குகின்ற/செய்கின்ற மக்களில் முதலிடம் வகிப்பவர்கள் அமெரிக்கர்கள் தான். அவர்களால் இப்போது பேசாவைப் பயன்படுத்த முடியவில்லை, அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு ஆன்லைனில் வேலை புரியும் முழு உலக மக்களையும் பாதித்துவிட்டது, எப்படியெனில் நியோபக்ஸிற்கு அடுத்தப்படி சிறந்த தளம் கிளிக்சென்ஸ் என முதல் பக்கத்திலேயே படித்திருப்பீர்கள். கிளிக்சென்ஸ் அமெரிக்காவில் இருந்து செயல்படுகிறது. அமெரிக்கர்கள் பேசா சேவையைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், கிளிக்சென்ஸ் இனி தன் வாடிக்கையாளர்கள் பேசா வழியாக சம்பளம் பெற முடியாது, அதற்கு பதிலாக பேப்பாலை பயன்படுத்துங்கள் என சொல்லிவிட்டது! இது போல அமெரிக்காவில் செயல்படும் பல தளங்கள் சொல்லிவிட்டன. இதனால் இணையம் வழியாக சம்பாதிப்பவர்களுக்கு பெரிய பாதிப்பு, குறிப்பாக இந்தியர்களுக்குத் தான்!

எனவே, நாம் ஒரு பேபால் அக்கவுண்டையும் கொண்டிருப்பது நல்லது. பேபால் தன் சேவையில் இவ்வாறு இதுவரை திணறவே இல்லை. மிகவும் நன்றாக பத்து ஆண்டுகளுக்கு மேலாய் செயல்பட்டு வருகிறது, நமக்கு நிம்மதியான, நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒரு இணையவங்கி என்றால் அது பேபால் தான். ஆனால் இன்னொரு சோகக் கதையைக் கேளுங்கள். இந்தியர்கள் கருப்பு பணத்தை வைத்துக் கொண்டு நாட்டை சீரழித்து வருவது நாம் அறிந்ததே, அந்த கருப்பு ஆடுகளை முடக்க, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பேபால் இந்தியாவில் இயங்க ஏகப்பட்ட விதிகளை விதித்துள்ளது!

பேப்பாலுக்கு ரிசர்வ் பேங்க் கொடுத்த விதிகள் என்னவென்றால், இந்தியர்களின் பேப்பால் அக்கவுண்ட்களில் பணமே இருக்கக் கூடாது, அவர்களது பேபால் அக்கவுண்டிற்கு பணம் வந்தால் உடனடியாக அவர்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விட வேண்டும், இந்தியர்கள் பேப்பாலில் பேலன்ஸ் சேர்த்து வைக்கவோ, டெப்பாசிட் செய்யவோ, அதனைப் பயன்படுத்தி இணையத்திலேயே ஷாப்பிங் செய்யவோ பேப்பால் அனுமதிக்கவே கூடாது! இதனால் கருப்பு ஆடுகளோடு சேர்ந்து நம்மைப் போன்ற உழைக்கும் வெள்ளாடுகளும் பாதிக்கப்பட்டு விட்டோம், கால கொடுமை! எனவே, நீங்கள் ஆன்லைனில் ஒரு தளத்தில் சம்பாதித்து உங்கள் பேப்பால் அக்கவுண்டிற்கு அனுப்பினால் உடனடியாக அதனை உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பும் வேலையில் பேப்பால் ஈடுபட துவங்கும், ஏழு நாளைக்குள் அனுப்பியே தீர‌ வேண்டும் என்பது ரிசர்வ் பேங்கின் உத்தரவு. அதற்கு பயந்துக் கொண்டு பேபால் உடனடியாக அனுப்பிவிடுகிறது. பணம் உடனடியாக வருவது நல்ல விஷயம் தான், ஆனால் நாம் ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தை பேப்பாலில் சேர்த்து வைத்து நியோபக்ஸ் போன்ற தளங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பை இழக்கிறோமே!

நீங்கள் நினைக்கலாம், அதற்குத் தான் பேசா இருக்கிறதே என்று. ஆனால் மேலே பேசா சந்தித்து வரும் சிக்கல்களைப் படித்திருப்பீர்கள். இவ்வாறு திணறி வரும் இணையவங்கியை விட பேபால் மேலானதே. நல்ல அனுபவமிக்க, 100% நம்பிக்கைக்குரிய அற்புதமான இணையவங்கி பேப்பால். இந்தியர்களாகிய நமக்குத் தான் அதன் சேவைகளை முழுமையாக அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை!

இந்த செய்தி உங்களுக்கு பேப்பால் இணையவங்கியின் முக்கியத்துவத்தை தெரியபடுத்தவே. நீங்கள் இணையத்தில் சம்பாதித்த பணத்தை உடனடியாகப் பெற‌ விரும்பினால் பேப்பாலில் ஒரு அக்கவுண்ட் வைத்திருங்கள். தேவையான நேரத்தில் நீங்கள் சம்பாதித்த பணத்தை வேலைவாய்ப்பு தளத்தில் இருந்து உங்கள் பேபால் அக்கவுண்டிற்கு மாற்றினால், அதிலிருந்து உடனடியாக உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு இந்திய ரூபாயாகவே வந்துவிடும்.

நியோபக்ஸ் போன்ற தளங்களில் முதலீடு செய்வதற்கு இப்போது கூறப்போகும் யோசனையை நீங்கள் பின்பற்றுவது சிறந்தது. எதாவது ஒரு ஆன்லைன் வேலைவாய்ப்பு தளத்தில் நீங்கள் சம்பாதித்து பணம் சேர்த்தால் அதை தேவைப்படும் நேரம் வரை வெளியே எடுக்காமல் அதிலேயே வைத்திருங்கள். ஒரு வேளை உங்களுக்கு நியோபக்ஸில் ரென்ட் ரெபிரல்கள் வாங்க (அல்லது) கோல்டன் உறுப்பினராக பணம் தேவைப்படுகிறது என்றால் அப்பொழுது நீங்கள் சேமித்து வைத்த பணத்தை உங்கள் பேசா அக்கவுண்டிற்கு மாற்றுங்கள். பின்பு, பேசாவில் இருந்து நியோபக்ஸிற்கு மாற்றி உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். இல்லை உங்களுக்கு பணம் கையில் வேண்டுமானால் ஆன்லைன் வேலைவாய்ப்பு தளத்தில் நீங்கள் சம்பாதித்த பணத்தை பேசாவிற்கு பதிலாக பேபாலிற்கு மாற்றுங்கள். பேபால் ஒரு வாரத்திற்குள் உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு அனுப்பி வைத்துவிடும். இப்படி திட்டமிட்டு செயல்படவும். பேசா இணையவங்கியில் நீங்கள் ஆன்லைனில் சம்பாதித்த பணத்தைக் குவித்து வைக்க வேண்டாம். மேலுள்ளவாறு செயல்படுவதே நமக்கு பாதுகாப்பானது.


பேப்பாலில் எப்படி அக்கவுண்ட் தொடங்குவது?


1) முதலில் www.paypal.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

2) Sign up என்ற பட்டனை அழுத்தவும். பின்பு கீழுள்ள படத்தைப் போல ஒரு படிவம் தோன்றும்.
3) அதில் India என தேர்வு செய்து, An account for individuals என்ற தலைப்பின் கீழுள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும்.

4) பின்பு தோன்றுகிற படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • Email address: உங்கள் ஈமெயில் முகவரி
  • Choose a password: பேபால் கணக்கிற்கு உபயோகிக்க விரும்பும் கடவுச்சொல்
  • Re-enter password: பேபால் கணக்கிற்கு உபயோகிக்க விரும்பும் கடவுச்சொல்
  • First name: உங்கள் பேன்கார்டில் உள்ள முதற்பெயர்
  • Middle name: உங்கள் பெயரில் இரண்டாவது சொல் இருந்தால் இதில் தெரிவிக்கவும்.
  • Last name: தங்கள் பேன்கார்டில் உள்ள தந்தை / கணவன் பெயர்
  • Date of birth: பிறந்த நாள்
  • Nationality: இந்தியா
  • Address line 1: முகவரி
  • Address line 2: முகவரிக்கான முதல் கட்டம் போதாவிட்டால், இக்கட்டத்தை பயன்படுத்தலாம்.
  • Town/City: உங்கள் ஊர்
  • State: உங்கள் மாநிலம்
  • PIN code: உங்கள் பின் கோடு
  • Mobile Number: உங்கள் மொபைல் நம்பர்

எல்லாம் முடிந்த பிறகு, படிவத்தை சமர்ப்பியுங்கள். உங்கள் பேபால் கணக்கு ரெடி.

அதன் பின்பு, நீங்கள் விரும்பினால் உங்கள் கிரடிட்/டெபிட் கார்டுகளை இணைக்கலாம் என ஒரு செய்தி வரும். அதெல்லாம் தேவையில்லை, அச்செய்தியின் கீழுள்ள Go to My Account என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது உங்கள் பேப்பால் கணக்கு தோன்றும். அதன் இடப்பக்கத்தில் உள்ள "Confirm  Identity" என்ற தொடுப்பைச் சொடுக்கவும். அதில் உங்கள் பேன் கார்டு, பேங்க் அக்கவுண்ட் தகவல்களைச் சமர்பிக்கலாம்.

வழிமுறைகள்:

பேன்கார்டு ஆப்ஷனைக் சொடுக்கி, உங்கள் பேன் எண்ணை சமர்ப்பிக்கவும். அதன் பின்பு, உங்கள் ஈமெயிலை நிருபிக்க வேண்டும், அதற்காக உங்கள் ஈமெயிலிற்கு பேபால் ஒரு மெயில் அனுப்பியிருக்கும், அதைக் திறந்து அதிலுள்ள "confirmation link"-ஐ கிளிக் செய்தால் ஈமெயில் நிருபனமாகிவிடும். மூன்றாவதாக, Purpose code என்ற ஆப்ஷனை சொடுக்கி, "Freelance journalism" என்ற தேர்வை செலக்ட் செய்து சமர்பியுங்கள்.

இறுதியாக, பேன்க் அக்கவுண்டை இணைக்க வேண்டும், அதற்கான படிவத்தில் கணக்கு பெயர், கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி எண் மூன்று தகவல்களையும் சமர்பிக்க வேண்டும், ஐ.எப்.எஸ்.சி எண் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பேங்கிற்கும் உள்ள தனிப்பட்ட அடையாள எண், உங்கள் பேங்கின் ஐ.எப்.எஸ்.சி எண் தெரியாவிட்டால், பேபாலிலேயே அதனைத் தெரிந்துக் கொள்ளலாம், ஐ.எப்.எஸ்.சி எண் தெரியுமா என்ற தலைப்பின் கீழ், "No" என்று தேர்வு செய்யவும், பின்பு, பேன்க் பெயர், மாநிலம், ஊர், கிளை என வரிசையாக தேர்ந்தெடுத்தால் பேபாலே உங்கள் வங்கியின் ஐ.எப்.எஸ்.சி எண்ணைக் காட்டும். எல்லாம் முடிந்த பின், கணக்கு பெயர், கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி எண் ஆகிய மூன்றையும் சரியாக பூர்த்தி செய்துள்ளீர்களா என பலமுறை சரிபார்க்கவும். இறுதியாக படிவத்தை சமர்ப்பியுங்கள். உங்கள் பேன்க் அக்கவுண்டிற்கு பேபாலில் இருந்து ஓரிரு நாட்களில் இரண்டு சிறு தொகைகள் அனுப்பப்படும், எனவே, ஒரு ஐந்து நாட்கள் கழித்து எதாவது சிறிய அளவில் பணம் வந்திருக்கிறதா என ஏ.டி.எமில் செக் செய்து பாருங்கள், வந்திருந்தால் எவ்வளவு வந்திருக்கிறது என குறித்து வைத்துக் கொள்ளவும். பின்பு, உங்கள் பேபால் கணக்கை லாகின் செய்து, அதனை தெரிவித்தால் உங்கள் பேன்க் அக்கவுண்ட் பேபாலோடு இணைந்துவிடும். இனி, நீங்கள் தாராளமாக பேபாலை உபயோகிக்கலாம். நீங்கள் உங்கள் பேபால் அக்கவுண்டிற்கு ஆன்லைனில் சம்பாதித்த பணத்தை மாற்றினால், உடனடியாக உங்கள் பேன்க் அக்கவுண்டிற்கு வந்துவிடும். இப்படி நாம் ஆன்லைனில் சம்பாதிக்கும் பணத்தை எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.

பேபாலில் பேன் எண், பேங்க் கணக்கு எண் போன்றவற்றைத் தெரிவிப்பது பாதுகாப்பா? பேபால் நற்பெயர் பெற்ற இணையவங்கி. நமக்கு அச்சம் தேவையில்லை. பேன் எண்ணையும், பேங்க் கணக்கு எண்ணையும் பேபால் கேட்பது கூட அதற்காக அல்ல, ரிசர்வ் வங்கி பேபாலிற்கு இட்ட உத்தரவினால் தான் கேட்கிறது. இந்திய பயனாளர்கள் இவைகளை எல்லாம் சமர்பித்தாலே பேபாலை உபயோகிக்க விட வேண்டும் என ரிசர்வ் வங்கி பேபாலிற்கு உத்தரவிட்டுள்ளது. அதோடு, பேன்க் கணக்கு எண், கணக்கு பெயர், ஐ.எப்.எஸ்.சி எண்ணை நாம் தெரிவிப்பது பிரட்சனை அல்ல, ஏனெனில் இவைகளை பேபால் தெரிந்து கொள்வதால் நம் அக்கவுண்டிற்கு பணம் அனுப்ப மட்டுமே முடியும், வேறெதுவும் செய்ய முடியாது. யாராயிருந்தாலும் சரி, ஒருவர் நமக்கு பேங்க் வழியாக பணம் அனுப்ப வேண்டும் என்றால் இந்த மூன்று குறிப்புகளை நாம் தந்தால் ஒழிய‌ அவரால் நமக்கு பணம் அனுப்ப முடியாது. எனவே, நாம் ஆன்லைனில் சம்பாதித்த பணத்தை பேபாலிற்கு மாற்றியவுடன், அது நமக்கு அனுப்ப வேண்டும் என்றால் இத்தகவல்களைத் தராமல் அதெப்படி அனுப்ப முடியும்? அதற்காகத் தான் கேட்கிறது, மற்றபடி ஒன்றும் அல்ல.

இணையத்தில் சம்பாதிப்பது என்றால் இதெல்லாம் கற்றுக் கொள்ளத் தான் வேண்டும். சம்பாதிப்பது முதல் சம்பளம் பெறுவது வரை எல்லாம் இன்டர்நெடிலேயே தான். உங்களிடம் பேன் கார்டு, பேன்க் அக்கவுண்ட் இல்லை என்றால் முதல் பக்கத்தில் உள்ள பேசா இணையவங்கியையே பயன்படுத்துங்கள். ஆனால் நினைவில் கொள்ளவும், பேசாவிலும் பணத்தை வெளியே எடுக்க வேண்டுமானால், இந்தியர்களுக்கு உள்ள ஒரே வழி பேங்க் அக்கவுண்ட் மட்டும் தான். ஆனால் பேபாலைப் போல அல்லாமல், பேசாவில் நீங்கள் சேர்த்து வைத்த பணத்தை இன்டர்நெடிலேயே வெப்சைட் வாங்குவது, ரெபிரல் வாங்குவது, கோல்டன் உறுப்பினர் உரிமம் வாங்குவது என செலவழிக்கலாம்.

1) நியோபக்ஸ்

Picture
அ) அறிமுகம்நியோபக்ஸ் இணையத்தில் பணம் சம்பாதிக்க 100/100 மிகச்சரியான வெப்சைட். இந்த வெப்சைட்டை பயன்படுத்தி பல மக்கள் மாதம் 50,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள். "அப்படி என்றால் நாமும் இந்த வெப்சைட்டில் குதித்து பணத்தை அள்ளிவிட வேண்டியதுதான்!" என நீங்கள் நினைத்தால் அது தவறு. முயற்சி இல்லாமல் அத்தொகையை நம்மால் எட்டவே முடியாது. ஏற்கனவே சொன்னது போல இந்த வெப்சைட்டில் நீங்கள் கால் பதித்துவிட்டால் அது தவறாமல் கனி கொடுக்கின்ற ஒரு மரத்தை போல ஆகிவிடும். கால்பதிப்பது தான் சாமர்த்தியம். அதற்கு உங்களுக்கு கொஞ்சம் பொறுமை மட்டுமே தேவை. எடுத்தவுடன் இணையத்தில் வருமானத்தை அள்ளுவது என்பது இயலாத காரியம். இன்று எத்தனையோ மக்கள் அலுவலகத்திற்கு சென்று படாதபாடுபட்டு உழைக்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் கொட்டிக் கொடுக்கின்ற ஆன்லைன் வேலை உடனே கிடைத்தால் அவர்கள் ஒரு கணினியை மட்டும் வாங்கிப்போட்டு வீட்டில் இருந்தபடியே எளிமையாக சம்பாதித்துவிட மாட்டார்களா? எனவே எடுத்தவுடன் வென்றுவிடலாம் என்ற‌ நினைப்பு இருந்தால் தயவுசெய்து விட்டுவிடுங்கள்....

நியோபக்ஸில் எப்படி மக்கள் அவ்வளவு தொகையை எட்டுகிறார்கள் எனக் காணலாம். இந்த வெப்சைட்டில் இணைந்து பணிபுரிய ஒரு பைசாவும் தேவையில்லை. வெற்றி பெற தேவையானது பொறுமை, பொறுமை, பொறுமை மட்டும்தான். இப்பொழுது உங்களுக்கு வேண்டியது ஒரு நியோபக்ஸ் அக்கௌண்ட். கீழுள்ள முகவரியை பயன்படுத்தி இணையலாம்.
அக்கௌன்ட் பெறும் போது, 'Paypal/Payza Email' என்ற கட்டத்தில் உங்களது பேசா ஈமெயில் முகவரியை டைப் செய்யவும். எல்லாம் முடிந்த பின் படிவத்தை சமர்ப்பியுங்கள். உடனே 'Verification' என்ற பக்கம் தோன்றும். இந்த பக்கத்தை மூடிவிடாதீர்கள் (தவறுதலாக பேஜை மூடி இருந்தால் இன்னொரு முறை கணக்குப்பதிவு செய்யலாம்). உலாவியில் இன்னொரு டேப் ஓபன் செய்து உங்களது மின்னஞ்சலை லாகின் செய்யுங்கள். நியோபக்ஸில் இருந்து உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்பப்பட்டிருக்கும். அந்த ஈமெயிலைத் திறந்து அதில் உள்ள Verification Code-ஐ காப்பி செய்யுங்கள். அதை அப்படியே 'Verification' பக்கத்தில் உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து சமர்ப்பியுங்கள், உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட் ரெடி.

ஆ) முதல் 20 நாட்கள்இனிதான் உங்களுக்கு முக்கியமான செய்திகள். உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்டை லாகின் செய்து, 'View Advertisements' என்ற தொடுப்பை கிளிக் செய்யுங்கள். சிவப்பு, பச்சை, மஞ்சள் என நிறைய கட்டங்கள் தோன்றும். அவற்றை கிளிக் செய்து விளம்பரங்களை காண ஆரம்பியுங்கள். நீங்கள் விளம்பரங்களை காணக்காண அதற்கான தொகை உங்களது நியோபக்ஸ் அக்கௌன்ட்டில் சேர்ந்து கொண்டு இருக்கும். ஒவ்வொரு விளம்பரத்திற்கும் $0.001 முதல் $0.02 வரை கிடைக்கும். (அதாவது இந்திய மதிப்பில் 5 பைசா முதல் 1 ரூபாய் வரை). "இதென்ன! ஐந்தைந்து பைசாவாக எப்படி சம்பாதிப்பது? இதற்கு போய் நியோபக்ஸில் நான் வேலை செய்யனுமா?" என நினைத்து நியோபக்ஸை விட்டு சில நாட்களில் வெளியேறியவர்கள் ஏராளம்!

பொறுமைதான் வெற்றியைத் தரும். கணக்கு தொடங்கி முதல் 20 நாட்கள் நீங்கள் பற்கள் பிடுங்கப்பட்ட பாம்புமாதிரிதான் :-) ஐந்தைந்து பைசாவாக (0.001 டாலர்) சம்பாதிப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது இரவு 9 மணி என வைத்து கொள்வோம் (அது உங்கள் இஷ்டம்). 20 நாட்கள் விடாமல் இரவு 9 மணிக்கு நியோபக்ஸை லாகின் செய்து விளம்பரங்களை பார்வையிடுங்கள். இதனால் தினமும் ஒரு ஐந்து நிமிடம் செலவாகும் (இச்செயல் வருங்காலத்தில் உங்களுக்கு பெரிதும் உதவும். கவலை வேண்டாம்...) நியோபக்ஸ் அதிகமான விளம்பரங்களை எல்லாம் தராது - சுமாராக ஒரு நாளைக்கு 50 விளம்பரங்கள் வரை தரும். இப்போது நீங்கள் குறைந்தது முப்பது விளம்பரங்களை 20 நாட்கள் விடாமல் பார்க்கிறீர்கள்...

அப்படியெனில்,
ஒரு நாளைக்கு 30 X 0.001 = 0.03$ (1.50 ரூபாய்)
20 நாட்களுக்கு 0.03 X 20 = 0.60$ (30 ரூபாய்)
20 நாட்கள் கழித்து உங்கள் Main Balance 0.6$-ஆக இருக்கும். Main Balance என்றால் நீங்கள் சம்பாதித்த தொகை. இத்தொகை 2 டாலரை எட்டியவுடன் உங்கள் பேசா கணக்கிற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் 0.6$ சேர்ந்தவுடனேயே கீழே சொல்லப்பட்ட படி செலவழிக்க வேண்டும். 0.6 டாலர் சம்பாதிப்பதற்கே இருபது நாட்கள் தேவைப்படுகிறது. 2$ சம்பாதிப்பதற்கு கிட்டதட்ட 2 மாதத்திற்கு மேல் ஆகிவிடும். தொடர்ந்து 70 நாட்கள் சம்பிரதாயமாக 5 நிமிடத்தை செலவிட யாருக்கு தான் மனம் வரும்? நாம் அறுத்துப்போய் சென்றுவிட வேண்டும் என்று தான் நியோபக்ஸ் எதிர்பார்க்கிறது. நாம் கொஞ்சம் எதிர்த்து நின்றோம் என்றால் நியோபக்ஸ் நமக்கு ஊதியங்களை கொட்ட வேண்டும்அதற்காகத்தான் நம் பொறுமையை டெஸ்ட் செய்கிறது. எனவே 2 டாலருக்கு ஆசைப்பட்டு நியோபக்ஸை விட்டுவிடாதீர்கள்.

2 டாலருக்கு ஆசைபடும் மக்கள் தான் பொறுமை இழந்து போய் விடுவார்கள். இதில் என்ன ஒரு பரிதாபம் என்றால் அவர்களுக்கு நியோபக்ஸை பயன்படுத்தி 1000 டாலருக்கு மேலாக சம்பாதிக்கலாம் என்பதே முதலில் தெரியாது. "நியோபக்ஸ் என்றால் ஒரு வெப்சைட், அதில் விளம்பரங்களைக் கண்டால் சில்லறையாக சேர்த்து சம்பாதிக்கலாம்" என்று நினைத்துக் கொண்டு வருவார்கள். 2$ சம்பாதிப்பதற்குள்ளாகவே திக்குமுக்காடி போய்விடும். எனவே 'சீ போ' என தூக்கி எறிந்துவிட்டு போய் விடுவார்கள். இதன் காரணம் என்ன? - நிறைய பேர் இணையத்தில் நியோபக்ஸை அறிமுகம் செய்யும் போது இந்த செய்திகளை எல்லாம் விவரித்து சொல்வதில்லை. அதனால் தான் அவர்கள் இவ்வாறு எதையாவது நினைத்துக் கொண்டு வந்து சலித்துபோய் சென்று விடுகிறார்கள். உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் - நீங்கள் எல்லா தகவல்களையும், வெற்றிக்கான வழிகளையும் தெளிவாக படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இந்த 20 நாட்கள் பொறுமையுடன் இந்த வேலையை செய்து கொண்டு இருங்கள்! இதன் அடுத்த பதிவு  உங்கள் மின் அஞ்சலை தேடி வரும்! 
பின் குறிப்பு:
neobux ல் கணக்கை துவங்கும் முன் சில நிபந்தனைகள்:
1. ஒருவர் .ஒரு கணினியில் ஒரு கணக்கை மட்டும் துவங்க வேண்டும்.
2. உங்களுக்கு rent referral மற்றும் direct referral எப்படி உருவாக்குவது என்பதை தெளிவாக கூறப்படும். அதுவரை எனது அறிவுரையை பின்பற்றவும்!
3. ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் இதை செய்வது மட்டுமே நல்லது. உங்களின் எதிர்கால திட்டமிடலுடன் இதை ஒப்பிட்டு செய்ய வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்!
4. neobux இணையதளத்தில் விளம்பரத்தை பார்க்கக் கூடிய பக்கத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள நேரத்தின் அடிப்படையில் வேலை செய்தால் விளம்பரங்களை தவறா விடாமல் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
5. neobux ஐ போல இன்னும் இரண்டு இணையதளம் உள்ளது. அதனுடைய கணக்கையும் தொடங்கி neobux செய்யும் நேரத்தில் அதனையும் செய்து பயன்பெறுங்கள். அதனுடைய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கிளிக் செய்து கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்!
6. முழு நேரம் வேலை செய்ய தயாராக இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்து சம்பாரித்துக்கொள்ளலாம். 
இந்த வேலை செய்வதால் ஒரு கூடுதல் பலன் கிடைக்கும். அது என்னவென்றால், இந்த protypers இணைய தளத்தில் சம்பாரிக்கும் பணத்தை நியோபக்ஸ், கிளிக்சென்ஸ் மற்றும் பக்ஸ்பி இணைய தளத்தில் முதலீடு செய்தால் கொள்ளை லாபம் பார்க்கலாம் என்பது நிபுணர்களின் கருத்து!
அதனுடைய விவரம் கீழே :
நியோபக்ஸ் போல இன்னும் 2 தளங்கள் கீழே உள்ளன. இவைகளை நியோபக்ஸிற்கு குறைவாக எண்ணாதீர்கள்.இவைகளும் அதே அளவு மதிப்பு, வருமானம், நம்பிக்கை, நற்பெயர் மிக்கவை தான். கிளிக் செய்து சம்பாதிக்கலாம், சிறுவேலைகளை செய்து சம்பாதிக்கலாம்... ரெண்டல் ரெப்பிரல் என்ற ஒரு வசதி மட்டுமே இவைகளில் இல்லை. ஆனால் நீங்கள் உங்களுக்கென தரப்படும் பிரத்யேக வலைமுகவரி வழியாக உங்களது நண்பர்களை இத்தளங்களில் சேர்க்கலாம். அதனால் உங்கள் நண்பர்களும் பயனடைவார்கள், உங்களுக்கு ரெப்பிரல்களாக செயல்படுவார்கள். இந்த முகவரி Referral Link / Affiliate Link என்ற தலைப்பிட்டு காணப்படும். எனவே உங்களது தனிமுகவரியை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். இத்தளங்களிலும் ஒரே கணக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும், முப்பது நாளிற்கு ஒரு முறையாவது லாகின் செய்யவேண்டும். பக்ஸ்பி மற்றும் கிளிக்சென்ஸ் நியோபக்ஸை விட ஒரு விளம்பரத்திற்கு அதிக தொகை வழங்குகின்றன.
(கீழுள்ள படங்களை கிளிக் செய்து இணையலாம்)
Picture
2) பக்ஸ்பி

Picture
Picture
3) கிளிக்சென்ஸ்

Picture


ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை

Picture
முதல் வேலை டேட்டா என்ட்ரி. இந்த வேலையில் நீங்கள் தட்டச்சு பணி செய்ய வேண்டும். இன்று நிறைய மக்கள் ஆன்லைனில் விரும்பி செய்வது டேட்டா என்ட்ரி வேலைகளைத் தான். இதற்கு எந்த அனுபவமும் தேவையில்லை. வீட்டில் இருந்தவாறே உங்கள் ஓய்வு நேரங்களில் இந்த டேட்டா என்ட்ரி வேலையை செய்து நன்கு சம்பாதிக்கலாம். கீழே உள்ள படத்தை நிச்சயம் ஜிமெயில், யாஹூ, பேஸ்புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்கும் போது பார்த்திருப்பீர்கள். இதனைத் தான் கேட்ப்சா என்பார்கள். கேட்ப்சா போலி கணக்குகள் உருவாவதை தவிர்க்கும். கிட்டத்தட்ட அனைத்து தளங்களும் இன்று கேப்ட்சா பரீட்சை வைத்துதான் உறுப்பினர்களை சேர்த்து கொள்கின்றன. எனவே கேப்ட்சா இல்லாமல் இன்று இணையம் கிடையாது என்றே சொல்லலாம். இவைகளின் பயன்பாடு அந்தளவு இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

Picture
கேப்ட்சா
கேப்ட்சாவின் முக்கியத்துவத்தை இப்பொழுது அறிந்திருப்பீர்கள். தினமும் இணையத்தில் கோடிக் கணக்கான கேப்ட்சாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே கேப்ட்சாக்களை சில கம்பனிகள் தயாரித்து இணையதளத்தில் விற்று வருகின்றன.இந்த கேப்ட்சா தயாரிக்கும் பணியில் தான் நீங்கள் உதவி செய்ய வேண்டும். அதற்கான தொகை சம்பளமாக வழங்கப்படும். உங்களுக்கு கேப்ட்சா படங்களை தந்து விடுவார்கள். அந்த படங்களில் எழுதப்பட்டுள்ள சொற்களை நீங்கள் டைப் செய்து கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். எவ்வளவு படங்களை பதிவு செய்து கொடுக்கிறீர்களோ அவ்வளவு தொகை ஊதியமாக வழங்கப்படும். கீழே உள்ள படத்தை பாருங்கள்...
Picture
கேப்ட்சா படத்திற்கு கீழே உள்ள கட்டத்தில் அதற்குரிய சொற்களை டைப் செய்து 'Submit Answer' என்ற தொடுப்பை சொடுக்க வேண்டும். ஒரு கேப்ட்சாவை பதிவு செய்தவுடன் அடுத்த படம் உடனே தோன்றும். பின்பு அதனை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு படங்களை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டியது தான். ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் பல படங்களை பதிவு செய்து இருப்பீர்கள். இது ஒரு எளிமையான டேட்டா என்ட்ரி வேலை. குறைந்தது 3$ (மூன்று டாலர்) சம்பாதித்தால் கூட உங்கள் பேசா அக்கௌண்டிற்கு எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் உங்களது பேசா கணக்கிற்கு டேட்டா என்ட்ரி வெப்சைட்டில் இருந்து சம்பளம் அனுப்பப்படும். இந்த டேட்டா என்ட்ரி வேலையில் இணைந்து பணிபுரிய எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒரு பேசா அக்கௌண்ட், இணைய வசதி கொண்ட ஒரு கணினி இருந்தாலே போதுமானது. கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்து இந்த வேலையில் சேரலாம்.
இந்த தொடுப்பை கிளிக் செய்துவுடன் தோன்றிய பக்கத்தில் உள்ள 'Free Signup' என்ற பட்டனை அழுத்துங்கள். அதில் உள்ள படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும். 'Payment type' என்ற தலைப்பின் கீழ் 'Payza' என்பதை தேர்வு செய்து, 'Payza Email' என்ற கட்டத்தில் உங்களது பேசா ஈமெயில் முகவரியை டைப் செய்யவும். இந்த தகவல் மிகவும் முக்கியமானது. ஒருமுறை உங்கள் பேசா ஈமெயில் முகவரியை இந்த வெப்சைட்டில் பதிவு செய்துவிட்டால் பின்பு திருத்தவே முடியாது. எனவே முதல் முறையிலேயே கவனமாக டைப் செய்யுங்கள். எல்லாம் முடிந்த பிறகு படிவத்தை சமர்ப்பியுங்கள். உங்களது டேட்டா என்ட்ரி அக்கௌண்ட் தயார். இனி லாகின் செய்து 'Solve  Images' என்ற தொடுப்பை சொடுக்கி சம்பாதிக்கலாம்.

குறிப்புகள்
  1. ஒருவருக்கு ஒரு கணக்கு மட்டுமே இருக்க வேண்டும். ஒரு கணினியை பயன்படுத்தி பல அக்கௌண்ட்களை தொடங்காதீர்கள். பல அக்கௌண்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டால் டேட்டா என்ட்ரி வெப்சைட் நம்மை வேலை செய்ய அனுமதிக்காது.
  2. படத்தில் உள்ள சொற்களை கண்டிபிடிக்க தெரியவில்லை என்றால் 'Don't Know' என்ற பட்டனை அழுத்துங்கள். எனினும் அடிக்கடி இந்த பட்டனை பயன்படுத்த வேண்டாம்.
  3. படங்களை டைப் செய்யும் போது, ஓய்வு எடுத்துக்கொள்ள விரும்பினால் 'Submit and Pause' என்ற பட்டனை அழுத்துங்கள்.
இது ஒரு அழகான வேலை. நமது ஓய்வு நேரங்களை பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த டேட்டா என்ட்ரி வெப்சைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
***** இதை போன்று பல ஆன்லைன் வேலைகள் நம் கைவசம் உள்ளது.  ஒவ்வொன்றாக கற்றுக்கொடுக்கப்படும்! அப்படியே என் வலைதளத்தின் விளம்பரங்களை கிளிக் செய்து எனக்கும் பயனளியுங்கள்!

இங்குள்ளவை குறிப்புகள் மட்டும் தான், திட்டமிடுவது, செயல்படுவது, வெற்றி பெறுவது, முன்னேறுவது உங்கள் கைகளில் தான்...! வாழ்த்துக்கள்.