Thursday, November 20, 2014

நம்மூரில் இதன் பெயர் அச்சாறு..



கரட்,வெங்காயம்,லீட்ஸ்,கோவா,குடமிளகாய்,மிளகாய்,செலரி,பச்சைமிளகாய்( தேவையான அளவு உறைப்புக்கு) எல்லாவற்றையும் சிறிய துண்டுகளாக நறுக்கி தேவையான அளவு வினகர் விட்டு அத்தோடு எழுமிச்சம்ம்காய்கள்(நான்4காய் போட்டேன்) பிழிந்து உப்பு மிளகு தேங்காய் எண்னை அல்லது ஆலிவ் எண்ணை (இரண்டு கரண்டி )இட்டு நன்றாக கலக்கவும் பின்னர் பிளாஸ்டிக் போத்தல் அல்லது கண்ணாடிக்குவளையில் இட்டு நன்றாக மூடி குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் தேவையான பொழுது எடுத்து பாவிக்கலாம்.. இரண்டு மூன்று கிழமைகள் கெடாமல் இருக்கும்(ஒவ்வெருநாளும் போத்தலை குலுக்கி வைத்தால் நல்லது) 24மணித்தியாலத்தின் பின்னர் உண்ணுவதே நல்லது ருஷி அதிகமாய் இருக்கும்.