அரசாங்க மக்கள் சாசனத்தில் அத்தியாவசியம் பெறக்கூடியதாக 150 சேவைகள் இடம் பெற்றுள்ளது.
அதை அதிகாரிகள் செய்தே தரவேண்டியதற்கான காலவரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது உதாரணமாக குடிமைப்பொருள் வழங்கல் துறையில் ரேசன் கார்டு குறித்து 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி பதில் தர வேண்டும். பதில் சரியானதாக இல்லாத பட்சத்தில் இரண்டாம் நிலை அதிகாரி முதலாவது அதிகாரிக்கு காலதாமதம் செய்த ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.250 அபராதம் விதித்து பாதிக்கப்பட்டவருக்கு வழங்க இந்த சேவை உரிமை சட்டம் வழிவகை செய்கிறது. இவ்வாறு மொத்தம் 11 துறைகள் இதற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் 150 சேவைகளுக்கு மக்கள் சாசனத்தில் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது.
ஆர்.டி.ஓவில் பழகுநர், ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பிப்பு என்பது ஒரு நாளில் வழங்கப்பட வேண்டும் என்பது சேவை உரிமையில் உள்ளது. அப்படி வழங்காத அலுவலர் மீது ஒரு குறிப்பிட்ட தொகை அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.
மார்ச் 2010-ம் ஆண்டு மார்ச் 7 அன்று இந்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. உடனடியாக மத்திய பிரதேசமும், அதைத் தொடர்ந்து பீகார்,உ.பி, ஜம்மு காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திராஞ்சல், இமாச்சல்பிரதேசம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 19 மாநிலங்களில் இது அமலுக்கு வந்துள்ளது!’’
No comments:
Post a Comment