புருவ மத்தி எதென்றக்கால் பரப்பிரம்மமானதோர் அண்ட உச்சி”
. – சித்தர் காகபுசந்தர்.
புருவமத்தி பரப்பிரம்மமான அண்ட உச்சி.
அண்டம் போல் அழகான , பூமி போல் அழகான கண்மணி, உச்சி என்றால் கண்மணி மத்தியாகும்.
அது பரப்பிரம்மமானது.
அதாவது ஒளியானது புருவமத்தி கண்மணி மத்தியிலுள்ள ஒளி.
வள்ளல் பெருமான் புருவம் கண் என்று தெளிவாக கூறிவிட்டார்.
“கையற விலாத நடுக்கண் புருவபூட்டு கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு.” என்று வெட்ட வெளிச்சமாக்கி விட்டார்.
“நடுக்கண் தான் புருவபூட்டு” இதற்கு விளக்கமும் வேண்டுமோ. மேலும் வள்ளலார் தான் இரு கண்களாலும் செய்த பெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்.
“என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப் புவனத்தில் யார்தான் செய்வர்”
தன் கண்ணில் தான் தானும் தவம் செய்தேன் என்று வள்ளலாரே குறிபிடுகிறார்:
இதை திருமூலர் திருமந்திரத்தில் பரிபாசையாகவும், நேரடியாகவும் குறிபிடுகிறார்:
“நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டம் இல்லை மனைக்கும் அழிவில்லை “
இங்கு திருமூலர் நமது நாட்டம் நடுமூக்கில் வைக்கணும் என்கிறார்.
ஒரு சித்தர் புருவமத்தி என்றார், இங்கு திருமூலர் நடுமூக்கு என்கிறார். எது சரி.
அவ்வை பிராட்டி கூறிய முதல் பாடலை நினைவு கொள்ளுங்கள்.
நடுமூக்கு – இது பரிபாசை.
ஞானத்திற்கு பொருள் காணனும்.! மேலோட்டமாக பார்த்து மூக்கு என்று ஏமாந்து போகாதீர்.
மூக்கை பார்த்து மோசம் போனவர் ஏராளம்.
இதன் விளக்கம் என்ன?
தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா அதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்வோம்.
நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு அதன் நடுபகுதியே ஊசிமுனை துவாரம் உள்ளதாகும் அதனுள் தான் ஊசிமுனை அளவு ஜோதி உள்ளது!
இதில் தான் நம் நாட்டம் இருக்க வேண்டும்.
கண் என நேரடியாக சொல்லாமல் நடுமூக்கு என்றது நாம் சிந்தித்து தெளிய வேண்டும்.

No comments:
Post a Comment