Friday, September 26, 2014

இடி விழுந்ததால் நிரம்பிய திருச்செங்கோடு தெப்பக்குளம்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு-பள்ளிபாளையம் சாலையில் பெரிய பழமையான தெப்பக்குளம் உள்ளது. இந்த குளமானது கிருஷ்ண தேவராயர் காலத்தில், திரியம்பக உடையார் என்பவரால் கி.பி.1512ல் கட்டப்பட்டது. திருச்செங்கோடு மக்களின் நீராதரமாக விளங்குவது இந்த தெப்பக்குளம் ஆகும். பல ஆண்டுகளாக சரியாக மழை பெய்யாத காரணத்தால் இந்த தெப்பக்குளம் தண்ணீர் இல்லாமல் இருந்தது. இதனால் திருசெங்கோடு மக்கள் தண்ணீர் பிரச்னையில் இருந்தனர்.

இந்த பழமையான தெப்பக்குளத்தை திருச்செங்கோடு நகராட்சியானது 1.15 கோடி செலவில் புரனமைத்து பாதுகாத்து வருகிறது. மேலும், இங்குள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவின் நிறைவு நாளன்று பக்தர்கள் இங்கு வந்து கம்பங்களை விட்டு பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

 இந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு திருச்செங்கோட்டில் நேற்று (25-09-2014) இரவு பலத்த மழை பெய்தது. 76 மி.மீ. மழை கொட்டித்தீர்ததில், நள்ளிரவு சுமார் 1 மணிக்கு பெரிய சத்தத்துடன் தெப்பக்குளத்தில் இடி விழுந்தது. இதனால் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்த தெப்பக்குளத்தில், நீரூற்றுகள் ஏற்பட்டு தண்ணீர் வந்தது. இதனால் தெப்பக்குளம் நிரம்பியது.

nandri

கு. ஆனந்தராஜ்





























































No comments:

Post a Comment