Friday, September 19, 2014

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ACKNOWLEDGEMENT வழங்க வேண்டும்


தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு நேரடியாக அரசு அலுவலகத்தில் கொடுத்தால், மனுதாரருக்கு ஒப்புகை சீட்டு அதாவது ஏற்புச்சான்று கொடுக்க வேண்டும்.
----------------------------------------------------------------------------------------
1) தமிழக அரசு ஆணை எண்: 112 (தேதி : 02/08/2006)

2) பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையினரின் அரசாணை எண்: 114, 66, 89

3) மத்திய அரசின் ஆணை எண்: 13013 / 1 / 2006 ( தேதி :05/ 05/ 2006)

இந்த 3 அரசானைகள் படி எந்த மத்திய மாநில அரசு அலுவலகத்தில் மனு அல்லது கடிதம் ஏதேனும் கொடுக்கப்பட்டால் அக்கடிதம் பெற்றுக்கொண்டதற்கான "ACKNOWLEDGEMENT" உடனடியாக வழங்க வேண்டும். ஒரு வேலை தபால் மூலம் வரும் மனு, கடிதங்களுக்கு 3 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட விண்ணப்ப தாரருக்கு தபால் மூலம் "ACKNOWLEDGEMENT" அனுப்பி வைக்க வேண்டும்.
அவ்வாறு கொடுக்கவில்லையென்றால்,சட்டப்படியான அறிவிப்பு கொடுங்கள்.அடுத்து குற்றவியல் நீதிமன்றத்திற்கு தகவல் கொடுங்கள்..
வரியுடன் பதிவு செய்யுங்கள் ....

இது ஒரு மாதிரி, இதை பயன்படுத்தி கொள்ளுங்கள்

No comments:

Post a Comment