நோயின் அறிகுறி
சாறு வடிதல் நோயினால் பாதிக்கப்பட்ட மரத்தண்டின் வெடிப்புகளில் இருந்து கருஞ்சிவப்பு நிறத்தில் திரவம் வடியும். ,பொதுவாக மரத்தின் அடிப்பகுதியில் அதிகமாக ஏற்படுகிறது. அடுத்தடுத்து இருக்கும் சில வெடிப்புகளில் இருந்து வடியும் திரவம் காய்ந்து கருமை நிறத்தில் காணப்படும்
மிகவும் முற்றிய நிலையில் மரத்தின் தண்டுப்பகுதி முழுவதிலும் வெடிப்பு பரவும். மரத்தின் வெளி அடுக்கில் உள்ள கீற்றுகள் முற்றாத நிலையிலேயே மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து தொங்க ஆரம்பிக்கும். தென்னங்;குலைகள் உற்பத்தி குறைந்து குரும்பை உதிர்வு ஏற்படும். மரம் மேல் நோக்கிச் செல்ல அளவு குறைந்து சிறுத்துக் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை
தென்னந் தோப்பில் வடிகால் வசதி செய்ய வேண்டும். இந்நோய் ஆரம்ப நிலையில் இருப்பின் மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியை கூரான கத்தி கொண்டு வெட்டி யெடுத்து முழுவதுமாக எரித்து விட வேண்டும். வெட்டப்பட்ட பகுதியின் மீது காலிக்ஸின் (5 சதம்) மருந்தினை பூசிப் பின் 2-3 நாட்கள் கழித்து காய்ச்சிய தாரைப் பூச வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட இரசாயன மற்றும் தொழு உரங்;களை இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
இத்துடன் மரத்திற்கு 5 கிலோ கிராம் என்ற அளவில் வேப்பம் புண்ணாக்கை மற்ற தொழு உரத்துடன் கலந்து இடுவது பயன்தரும். காலிக்ஸின் (5 சதம்) கரைசலை ஆண்டிற்கு மூன்று முறை வீதம் வேர் மூலம் தருவதனால் மரத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கலாம்.
No comments:
Post a Comment