Sunday, September 21, 2014

எழுதுகோல் தோன்றிய விதம் தெரியுமா?

எழுதுகோல்' என்று தூய தமிழில் எத்தனை பேர் சொல்கிறோம். நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பதிவுக் கருவி, பேனா. அது தோன்றிய விதம் தெரியுமா?



 


இன்று நாம், பயன்படுத்துவதற்கு எளிதான பேனாக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை. பேனாவுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்பது ஆச்சரியமான விஷயம்.
‘லத்தீன்’ மொழியின் ‘பென்னா’ என்றால் ‘பறவையின் இறகு’ என்று பொருள். ‘பென்னா’ என்பதே ஆங்கிலத்தில் ‘பென்’ என்றும், தமிழில் ‘பேனா’ என்று மாறியது.
5ம் நூற்றாண்டில் ‘இறகுப் பேனா’ வழக்கத்துக்கு வந்தது. அது 18ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
1780ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார்.
1809ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி ‘நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார்.
ஜான் ஹாக்கின்ஸ் என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு ‘நிப்’ செய்தார். ‘நிப்’ன் முனையில் ‘இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882ல் வந்தது. அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு ‘நிப்’பை கண்டுபிடித்தார்.
1859ல் முதல்முறையாக ‘ஊற்றுப் பேனா’ (‘பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது. 1883ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.
அனைத்திலும் தமிழர்கள் நாம் முன்னோடி என்பதில் சந்தேகம் இல்லை. நம்முடைய இலக்கியங்கள், புராணங்களில் இருந்து பல தகவல்கள் மேலை நாட்டு அறிஞர்களால் எடுக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டு உள்ளது.

உதாரணம், நமது ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திக் கொண்டு செல்ல புஷ்பக விமானத்தை பயன்படுத்தினான். இந்த தகவல் தான் தற்போதைய விமானத்திற்கு முன்னோடி என்பது எனது தாழ்மையான கருத்து.

அதைப்போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே குத்தாணியை பயன்படுத்தி பேனாவிற்கு அடிகோல் வகுத்தது தமிழர்களாகிய நாம் தான் என்பதில் பெருமையே.

பாரத தேச பிதா காந்தியே தன் கையால் தமிழில் எழுதியிருக்கிறார். தமிழர்களே தமிழைத்தமிழில் எழுதுங்கள்! தயவுசெய்து, தமிழைத் தமிழில் எழுதுங்கள் & ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழில் எழுத மென்பொருட்கள்-> http://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472 அல்லது
என்.எச்.எம் எழுதி> https://www.facebook.com/note.php?note_id=10150386278969710 அல்லது இ.கலப்பை> http://www.facebook.com/note.php?note_id=127514014709 ( ஒவ்வொரு படத்திலும் அழுத்தி அதன் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தைப்/இணைப்பைப் படிக்கவும் )

No comments:

Post a Comment