Sunday, September 21, 2014

முகத்தல் அளவைகள் - நிறுத்தல் அளவைகள் - கால அளவுகள்

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை.
 

முகத்தல் அளவைகள்
 

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.


 


முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

=======================================================================

>தமிழ் மொழியில் பாடங்களின் பெயர் சிறப்பம்சம்
நாம் படிக்கும் பாடங்களின் தமிழ் பெயர்களும் மற்ற மொழியை விட நம் மொழியில் பெயர் மற்றும் பெயர் காரணம் விளக்க விழைகிறேன்
என் அறிவிற்கு எட்டியதை நான் எழுதுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் ,சரியாக இருந்தால் சிந்திக்கவும் நம் மொழியின் சிறப்பைப் பற்றி....
ஆங்கிலம் மற்றும் தமிழ் ஒப்பீடு
Science :--The intellectual and practical activity encompassing the systematic study of the structure and behavior of the physical and natural...
அறிவியல் :-- அறிவோடு இயல்பாக ஒத்துப் போகும் நிகழுவுகள் எல்லாம் அறிவியல்.அவ்வாறு இல்லையெனில் அது அறிவியல் என்று சொல்ல இயலாது .....

History :--the discovery, collection, organization, and presentation of information about past events...
வரலாறு :--வரம் + ஆற்று -- நீ வந்த வரவறிந்து செயலாற்று

Geography :-- The study of the physical features of the earth and its atmosphere, and of human activity as it affects and is affected by these.
புவியல் :- புவியின் இயல்பு மற்றும் அதை சுற்றி உள்ளவற்றின் இயல்பு

Civics:-- The study of the rights and duties of citizenship
குடிமியல் :-- குடும்பத்தின் (தேசத்தின்) இயல்பு .ஒரு குடும்பத்தின் உள்ள உறுப்பினர்களின் உரிமை மற்றும் கடமைகளை பற்றி உணர்த்துவது

Mathematics:-The abstract science of number, quantity, and space.
The mathematical aspects of something: "the mathematics of general relativity".
கணிதவியல்:-கணிப்பதின் இயல்பு .

இவ்வாறு ஒரு சொல்லில் பாடத்தின் இயல்பை பற்றி கூறுகிறது .இது போன்ற சிறப்பம்சம் எந்த மொழியிலும் கிடையாது என்று நம்புகிறேன் 


No comments:

Post a Comment