விருட்ச ராஜன் தரும் வியத்தகு நன்மைகள்
மரங்களில் அரசனாக
கருதப்படுவது போதி மரம் என போற்றப்படும் அரச மரமே. மரங்களில் நான் அரச
மரமாக இருக்கிறேன் என பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவால் கூறப்பட்டு
உள்ளது. . அரச மரம் தன்னிடம் வருவோரை எல்லாம் எப்படி ஒரு நாட்டின் அரசன்
தன் மக்களை அரவணைத்து கொள்வானோ அது போல் அரவணைத்து நம் கஷ்டங்களை நீக்கி
நன்மை புரிகின்றது.
அரச மரத்தை தொடாமல் தினசரி எவ்வளவு முடியுமோ அவ்வளவு
பிரதட்சினங்கள் செய்து வருவதால் பல நன்மைகள் உண்டு. கிரக கோளாறுகளால்
மிகவும் அவதியுற்று தவித்து
கொண்டிருக்கும் பலர் அரச மரத்தடியில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு
வியத்தகு மாற்றங்களை கண்டுள்ளனர்.
அறிவியல்ஆராய்ச்சியின்படி ஒரு அரச மரம்
நாள் ஒன்றுக்கு 1800 கிலோ கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்ஸைட்) உட்கொண்டு
2400 கிலோ பிராண வாயுவை (ஆக்ஸிஜன்) வெளியிடுகிறது. இதை அறிந்தே பிள்ளைபேறு
இல்லாதவர்கள் / பிள்ளை பேறு தாமதம் போன்றவைக்கு நம் முன்னோர்கள் பெண்களின்
நாளமிள்ளா சுரப்பிகள், சூலகம் (பெண்மை ) போன்றவற்றை தூண்ட அரசை தினசரி
சுற்றி வர சொல்லியுள்ளனர்.நாளடைவில் அது 'பகுத்தறிவு' அற்ற விஷயமாகி போனது
தான் வேதனை.
அனைவரும் அரச மரத்தை தினசரி வலம் வருவதால் துர் சக்திகளை
பற்றிய பயம் விலகல் , எதிரிகள் குறித்த பயம் விலகல் , ஆரோக்கிய மேன்மை,
லட்சுமி கடாட்சம், புத்திர பாக்கியம் போன்றவை உண்டாகும். அரச மரத்தை காலை
வேளை முதல் மதியத்திற்குள் வலம் வருவது, அதன் கீழ் உட்காருவது நன்மை தரும்.
மரத்தை தொட கூடாது. குறைந்தது ஏழு முறை வலம் வருவது சிறப்பு. உடன்
யாரேனும் இருப்பின் அவருடன் பேசியபடி சுற்றுவது, வேக வேகமக சுற்றுவது பயன்
அளிக்காது. அடி மேல் அடி வைத்து சுற்றி வருவது சிறப்பு. மரத்தின் இலைகளை
பறிப்பது கூடாது. மேற்கண்டவற்றை உங்கள் சந்ததியினருக்கும் தெரிய செய்து
அனைவரும் நலமுடன் வாழ்வீர்களாக !!
No comments:
Post a Comment