Monday, September 22, 2014

நியூட்ரினோ ஆய்வின் மூலம் பூகம்பம் மற்றும் சுனாமியை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என ஐ.என்.ஓ

தேனி: நியூட்ரினோ ஆய்வின் மூலம் பூகம்பம் மற்றும் சுனாமியை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என ஐ.என்.ஓ. திட்ட இயக்குனர் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம், போடி அம்மரப்பர் மலைப்பகுதியில் அமைந்துள்ள நியூட்ரினோ அறிவியற்கூடத்தை நியூட்ரினோ ஆய்வகத்தின் (ஐ.என்.ஓ) திட்ட இயக்குனர் நபா மண்டல், பாபா அணு ஆராய்ச்சி  மையத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் இந்தியாவின் 21 பல்கலைக்கழங்களிலிருந்து ஆராய்ச்சி மாணவர்களு பார்வையிட்டனர்.
நம்மிடையே பேசிய நபா மண்டல், ''ஆரம்பத்தில் இந்த மலைப்பகுதியை தேர்வு செய்து இங்கு வந்தபோது மக்கள் அனைவரும் பயந்தாங்க. இந்த திட்டம் குறித்து அவர்களுக்கு விளக்கிய உடன் மக்கள் எங்களை எதிர்க்கல. போட்டானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான துகள்தான் இந்த நியூட்ரினோக்கள். உலகம் தோன்றிய போதே தொடங்கிய துகள்களை காணும் கருவிகள் இந்தியாவில் இதுவரை இல்லை. அதனை கண்டறியவே இந்த திட்டத்தை இங்கு கொண்டுவந்துள்ளோம். பிரபஞ்சத்தில் எங்கும் இருந்தாலும் , காஸ்மிக் கதிர்கள் உட்புகாதபடி உள்ள சூழலில் தான் இவற்றை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள  முடியும்.

அதற்காக ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு இந்த மலையை குடைந்து அதனுள் காஸ்மிக் கதிர்கள் உட்புகா வண்ணம் இந்த அறிவியற்கூடத்தை அமைக்க உள்ளோம். மலையின் அடிப்பகுதியிலிருந்து 2.1 கிமீ தூரத்திற்கு சுரங்கம் அமைத்து அதன் வழியா இந்த மையத்தை அடையலாம். இந்த மையம் அமைக்கப்பட்டால் இந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான  மாணவர்கள் இங்கு வந்து இந்த திட்டத்தினை பற்றி அறியலாம் .நிறைய விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் வருவார்கள். பூகம்பம், சுனாமி போன்றவை உண்டாகும் போது மிகப்பெரிய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை முன்கூட்டியே தெரிந்து கொள்ள நியூட்ரினோ அடிப்படை ஆய்வு பெரிதும் உதவும்.
இந்த அறிவியற்கூடத்தின் திட்ட செலவு 1500 கோடி ரூபாய். அருகிலுள்ள கிராமத்திற்கு சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு சாலை வசதி விரைவில் ஆரம்பிக்க உள்ளோம். இது மக்களின் பயன்பாட்டுக்கும் மிகவும் உதவும். நியூட்ரினோவை பொருத்த வரை அறிவியற்கூடத்தை சுற்றி வேலி அமைத்துள்ளோம்.  தண்ணீர் வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. டுவார்ட் போடு மூலம் இந்த  ஊரிலிருந்து 16 கிலோ தொலைவிலுள்ள ஆறிலிருந்து தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்யவுள்ளோம். நிலத்தடி நீரை துளி அளவு கூட பயன்படுத்தவில்லை.

ஆரம்ப திட்டங்களுக்காக 2 மெகா வாட் மின்சாரத்தை தமிழக மின்சார வாரியத்தின் மூலம் கேட்கலாம் என்று இருக்கிறோம். தற்போது மதுரையில் ஒரு சிறிய அளவில்  செயல்மாதிரி வைத்து ஆராய்ச்சிகளை செயல்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். இந்த திட்டம் அமலுக்கு வந்தால் ஆராய்ச்சி மாணவர்களுக்கு துணையாக இருக்கும்'' என்றார்.

ref by

http://news.vikatan.com/article.php?module=news&aid=32621

No comments:

Post a Comment