''களர் அல்லது உவர் நிலத்தை ஜீரோ பட்ஜெட் பாணியில் எவ்வாறு நல்ல நிலமாக மாற்றுவது?''
''சம்பந்தபட்ட நிலத்தில் முதலில் நீளவாக்கில் கால்வாய் போன்ற குழிகளை (Trench) அமைக்க வேண்டும். நிலத்தில் 9 அல்லது 12 அடி இடைவெளிகளில் கோடுகள் போட்டுப் பிரித்துக் கொள்ளவும். பிறகு 3 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்டதாக நீளமான குழிகளை அமைக்கவேண்டும். ஜீவாமிர்தத்தை சீரான இடைவெளியில் நீள்குழியிலும் கரைகளிலும் இட வேண்டும். ஏக்கருக்கு 100 கிலோ தொழு எருவும் போடவேண்டும். தட்டைப் பயறு, கம்பு மற்றும் சோளத்தை வைத்து உயிர்மூடாக்கும் அமைக்க வேண்டும்.

பொதுவாக நிலத்தின் மேல் மண்ணில், மண் அரிப்பு காரணமாக நுண்ணூட்டங்கள்
இருப்பதில்லை. நீள் குழிகள் அமைப்பதன் மூலம் நுண்ணூட்டம் செறிந்த கீழ் மண்
மேலே வரும். நீள் குழியில் இலை, தழை மற்றும் செடி செத்தைகளைப் போட்டு
ஜீவாமிர்தம் இடுவதன் மூலம் நுண்ணுயிர் பெருக்கம் ஏற்படும். பூமியில் 15
அடிக்கு கீழே சமாதி நிலையிலுள்ள உள்ள மண் புழுக்கள் செயலூக்கம் பெறுவதால்
மட்கு (Humus) உண்டாகி, களர் நிலம் வளமான நிலமாக மாறும். நாளுக்கு நாள்
உங்கள் நீர் தேவை குறைந்துக் கொண்டே வரும், ஏனென்றால், 1 சதுர அடி மட்கு,
சுமார் 6 லிட்டர் நீரை காற்றின் ஈரப்பதத்திலிருந்து கிரகித்து
பயிர்களுக்குக் கொடுக்கும்.
நீள்குழியின் மூலம் மழைநீர் சேகரி¢ப்பும் நடக்கும்.
உதாரணத்துக்கு, ஒரு ஏக்கர் என்பது 4,046 சதுர மீட்டர்களாகும். இதில் 1 மில்லி மீட்டர் மழை பொழிந்தால், 4,046 லிட்டர் நீர் கிடைக்கும். 1,000 மில்லி மீட்டர் மழை பொழிந்தால் 40,46,000 லிட்டர்கள். நீள்குழிகளால் மட்டுமே இந்த மழை நீரை முழுமையாக சேகரித்து, உங்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கமுடியும்.
எல்லா வகையான மரப் பயிர்கள், காய்கறிகள், கொடிவகைப் பயிர்களை இந்த நீள் குழியின் கரைகளில் பயிர் செய்யலாம். உழவுக்கு வேலையே இல்லை (No Tilling).
இந்த நீள்குழிகளின் மூலம் வேறு சில நன்மைகளும் கிடைக்கும். குழியிலிருந்து எடுக்கும் மண்ணை, மரம் மற்றும் பயிர் வைக்கும் பார் அமைப்பதற்காக பயன்படுத்துவதால், அது உயரமாக இருக்கும். மழை அதிகமாகப் பெய்வதால் மேல் மண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமலும், மரம் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்காமலும் இது பாதுகாக்கும்.''
Thanks to
பி.கிருபாநிதி ராம்பாக்கம்

No comments:
Post a Comment