Friday, September 12, 2014

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அரசுக்கு பல ஆயிரங்கள் இழப்பு....

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பொது தகவல் அலுவலருக்கு தகுந்த புரிதல் இல்லாததால் அரசுக்கு பல ஆயிரங்கள் இழப்பு....

பொதஅ, மனுதாரர் கோரிய ஆவணங்களை 30 நாட்களுக்குள் வழங்கவேண்டும் இல்லையெனில் அவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.
உதரணமாக, நீங்கள் அனுப்பிய மனு ஒரு அலுவலகத்தை 1ம் தேதி அடைகிறது என்று வைத்து கொள்வோம். அதற்கு பொதஅ உங்களுக்கு 5ம்தேதி கடிதம் மூலமாக, தாங்கள் கோரிய அனைத்து ஆவணங்களுக்கும் கட்டணமாக ரூ.20 செலுத்த சொல்கிறார் என்றால், தகவல்களை பெறுவதற்கான உங்கள் 30 நாட்களுக்கான கால அளவில் 5 நாட்கள் முடிந்து விடுகின்றது. அதாவது, பொதஅ உங்களுக்கு கடிதம் எழுதிய நாளில் 30 நாட்களுக்கான கடிகாரம் நின்று விடுகின்றது. அதன் பின்னர் எப்போது நீங்கள் கட்டணத்தை பொதஅ-க்கு அனுப்பி வைக்கிறிர்களோ, அன்றிலிருந்து கடிகாரம் திரும்பவும் ஓட ஆரம்பிக்கும்.

நீங்கள் கட்டணத்தை அவர்கள் அலுவலகத்தில் (எந்த வகையிலாவது) 15ம் தேதி செலுத்துகிறீர்கள் என்றால், பொதஅ-க்கான கால அளவு 15ம் தேதியில் இருந்து ஓட ஆரம்பிக்கும். ஆகவே பொதஅ அடுத்தமாதம் 10ம்தேதிவரை தங்களுக்கு ஆவணங்களை அனுப்ப கால அவகாசம் எடுத்து கொள்ளலாம்.
ஆனால், பொதஅ அனைவருக்கும் மறக்காமல் தெரிந்த ஒரு விஷயம் பதில் அனுப்ப 30 நாட்கள் எடுத்து கொள்ளலாம் என்பதுதான். அதையோ, ஆவணங்களை கேட்கும்போதும், ஆவணங்களுக்கான கட்டண விபரத்தை அறிவிக்ககூட 30 நாட்கள் கழித்துதான் பதில் எழுதுகிறார்கள். இந்நிலையில், 30 நாட்களுக்கான அவர்களுக்கு கிடைக்கும் கால அவகாசத்தை அந்த பதில் எழுதும்போதே, அவர்கள்பூர்த்தி செய்துவிடுவதால், மனுதாரர் அதற்கு பின் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மனுதாரர் எழுதிய மனுவிற்கு, 30 நாட்கள் கழித்து ஒரு பொதஅ கொடுத்த பதிலை கீழே கொடுத்துள்ளேன்.

“According to RTI Act, if you are willing to get the information, you shall pay a sum of Rs.2 per page. I am therefore request to remit the amount of Rs.80 to Government account and send the remittance challan in original for furnishing information sought for by you under RTI Act, 2005.

இதற்கு கீழ்கண்டவாறு பதில் அளிக்கப்பட்டது.

As per the Act, the information must be furnished at free of cost if the same is not supplied within 30 days. Hence, if you still insist me to pay the additional charges of Rs.80/-, then I have no other alternative except to honour your instructions with protest and liberty to take up the issue for Appeals (u/s 19(1) - First Appeal before the First Appellate Authority, u/s 19(3) - Second Appeal before Tamil Nadu State Information Commission) and thereafter, if necessary, before the Honourable High Court of Madras, Madurai Bench for issuing Writ of Mandamus, for refund of the said charges.

உடனடியாக, அனைத்து ஆவணங்களையும் இலவசமாக அனுப்பி வைத்தார்கள்.

ஆவணங்கள் கைவசம் இருக்கும் நிலையில், அதற்கான கட்டண அறிவிப்பை 30 நாட்களுக்குள் அனுப்பி வைத்திருந்தால், அரசாங்கத்திற்கு ரூ.80 கிடைத்திருக்கும் அல்லவா?

தஅஉ சட்டத்திற்காக ஒவ்வொரு அரசு துறையிலும் ஏற்படும் செலவினங்கள், தணிக்கை செய்யப்படுகின்றதா என்பது தெரியவில்லை. அந்த பொதஅ-ரிடம் இருந்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பை வசூல் செய்யும் பட்சத்தில், ஆவணங்களுக்கு கட்டண அறிவிப்பை அனுப்ப 30 நாட்கள் பொதஅ எடுத்து கொள்ளமாட்டார் அல்லவா? அரசுக்கு இந்த வகையில் ஏற்படும் பல ஆயிரம் இழப்பை தவிர்க்கலாமே?

No comments:

Post a Comment