நான் இப்போது சொல்லப் போவதை நீங்கள் நம்பப்
போவதுமில்லை. உங்களால் நம்பவும் முடியாது. உங்களால் செயல்படுத்தப்படும்
ஒவ்வொரு செயலுக்கும், அறிவியல் சொல்லும் விந்தையான ஒரு விளக்கம் பற்றியது
இது.
. நீங்கள், உங்கள் காதலனின்/காதலியின் கைகளையோ அல்லது (புது) கணவனின்/மனைவியின் கைகளையோ தொடும் போது, உடல் முழுவதும் இரத்தம் பாய்ந்தது போல, இனிமையானதொரு பரவச நிலையை அடைகிறீர்களல்லவா? சரி, அப்படியென்றால் இதை முதலில் படித்துப் பாருங்கள். உங்களை நீங்களே எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறீர்கள் என்பது புரியவரும். அதனால் இப்பவே சொல்லிவிடுகிறேன், இதைப் படித்தபின் வரும் பின் விளைவுகளுக்கு நான் எப்போதும் பொறுப்பாக முடியாது.
. நீங்கள் உடல் பாகங்களைத் (அல்லது பொருட்களைத்) தொடும்போது, அவற்றைத் தொடுவது போல உணர்வை அடைகிறீர்கள் அல்லவா? அதாவது அந்தப் பொருளைப் பற்றிக் கொள்ளும் உணர்வு. ஆனால், அந்தத் தொடும் உணர்ச்சி உண்மையானதல்ல. அது உங்கள் மூளையால் மழுப்பப்பட்ட ஒரு பொய் உணர்வாகும். காதலியின்/மனைவியின் கைகளைத் தொடுவதால் நடக்கும் செயல்பாடு நீங்கள் நினைப்பது போல இல்லை. அது வேறு வகையானது. தொடுவதை ஒரு கவர்ச்சிச் செயலாய் நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது கவரும் செயலல்ல. அதற்கு எதிர்மாறான ஒரு செயல். "என்ன புரியவில்லையா? பரவாயில்லை தொடர்ந்து படியுங்கள்”.
. ஒன்றைத் தொடும்போது, உங்கள் கையில் இருக்கும் அணுத்துகள்களுக்கும், தொடப்படும் பொருளில் (காதலியின் கைகளில்) இருக்கும் அணுத்துகள்களுக்கும் இடையில் உருவாகும் தள்ளுவிசையின் உணர்வையே உங்கள் மூளை கவர்ச்சி விசையாக மழுப்பிக் காட்டுகிறது. அதாவது அப்படியொரு மழுப்பலை உங்கள் மூளை விரும்புகிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.
. வலக்கையில் ஒரு காந்தத்தையும், இடக்கையில் ஒரு காந்தத்தையும் வைத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் அருகருகே கொண்டுவர நீங்கள் முயற்சிக்கும் போது, அவை ஒன்றையொன்று தள்ளுமல்லவா? அப்போது நமக்கு ஒரு உணர்வு தோன்றுமே! அது போன்ற ஒரு உணர்வுதான், காதலியின் கைகளைப் பிடிக்கும் போதும் உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்தத் தள்ளும் உணர்வை பற்றும் உணர்வாக மூளை மாற்றிக் கொள்கிறது. தொடுவதோ, வருடுவதோ அனைத்தும் இதில் அடங்கும். அது மட்டுமில்லை, அதைவிட இன்னுமொரு ஆச்சரியமும் உண்டு. தொடுகையின் போது உண்மையாகவே நடைபெறும் செயல் என்ன தெரியுமா? உங்கள் கைகளும், காதலியின் கைகளும் எப்போதும் ஒன்றையொன்று தொடுவதேயில்லை. சொல்லப் போனால் எந்தப் பொருளையும் நாம் கைகளில் எடுக்கும் போதும் அவற்றைத் தொடுவதேயில்லை. தொடுவது போல உணர்கின்றோம் அவ்வளவுதான்.
. நீங்கள் ஒரு பொருளைத் தொட்டுக் கொண்டிருப்பதை, ஒரு நுண்ணிய எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பின் மூலம் பார்த்தால், உங்கள் கைக்கும், அந்தப் பொருளுக்கும் இடையில் இடைவெளி இருந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். அப்பொருட்களிலுள்ள அணுத்துகள்களின் ஏற்றங்கள் (Charge) தரும் தள்ளுவிசைகள் மட்டுமே அங்கு உண்டு. அந்தத் தள்ளுவிசையையே நாம் தொடுவது என்று நம்பிக் கொள்கிறோம். ஆனால் அது சுத்தப் பொய். எல்லாமே மாயை.
. அத்தோடு முடியவில்லை விசயம். ஒருவன் உங்கள் தலையில் ஒரு தடியால் அடித்தால், உங்களுக்கு தலை உடைந்து காயம் வருகிறதல்லவா? அந்தக் காயம் கூட, அந்தத் தடி உங்கள் தலையில் பட்டதால் ஏற்பட்டது அல்ல. மிக வேகமாகத் தடி உங்கள் தலையை அணுகும் போது ஏற்பட்ட அணுத் தள்ளு விசையினால் உருவாகிய சக்தி, உங்கள் தலையை வெடிக்கப் பண்ணுகிறது. அந்த வெடிப்பினால்தான் காயம் வந்து இரத்தம் வழிகிறது. அடிக்கப்படும் தடி, உங்கள் தலையை எப்போதும் தொடப் போவது இல்லை. இதுவே கத்தியால் குத்தும் போதும் நடக்கிறது. கூர்மையான பொருட்களில் ஏற்றமுள்ள துகள் செறிந்திருப்பதுதான் இதற்குக் காரணம்.
. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இதுவே நடக்கிறது. ஒவ்வொரு தனித்தனிச் செயல்களுக்கும் தனித்தனியான விளக்கங்களை நமக்குத் தெரிவிப்பது நம் மூளைதான். இப்போது நீங்கள் கணணியில் தட்டச்சுச் செய்யும் எந்த எழுத்துகளையும் கைகளால் தொடவில்லை. என்ன நம்ப முடியாமல் இருக்கிறதா..? இது போல நம்மால் விளங்கிக் கொள்ளவே முடியாத பல விசயங்கள் உண்டு.
. சரி, இதற்காகவெல்லாம் காதலியைத் தொடாமல் இருந்து விடாதீர்கள். இவையெல்லாம் மைக்ரோ நிலைகளில் நடைபெறும் செயல்கள். சொல்லப் போனால் ‘குவாண்டம்’ நிலை விளக்கங்கள். அதனால் இவற்றையெல்லாம் மூளையில் போட்டுக் குழப்பிக் கொண்டு காதலியைத் தொடுவதைத் தவிர்க்கவே வேண்டாம். கத்தியையும், தடியையும் தொடுவதை வேண்டுமானால் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
-ராஜ்சிவா-

No comments:
Post a Comment