Monday, September 8, 2014

LPG நுகர்வோருக்கு ரூபாய் 40,00,000 காப்பீடு உண்டு

நுகர்வோரே விழித்திரு !!
உங்களுக்கு தெரியுமா ?

LPG நுகர்வோருக்கு ரூபாய் 40,00,000 காப்பீடு உண்டு -
----------------------------------------------------------------------------------------------------------------------------
சிலின்டர் வெடித்து இறந்தால், ரூபாய் 40,00,000 காப்பீடு உண்டு !
http://daily.bhaskar.com/article/RAJ-JPR-lpg-cylinders-come-with-rs-40-lakh-risk-cover-3185659.html
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் LPG சிலின்டர் வெடித்து பலரது வாழ்க்கையும் இழந்து, செல்வத்தையும் தொலைத்துள்ளோம். நம்மில் பலருக்கு, விபத்தை தடுப்பது எப்படி என்று தெரியும், ஆனால், விபத்தில் இறந்தால், நமக்கு ரூபாய் 40,00,000 காப்பீடு உண்டு என்ற விபரம் தெரியாது.
வருடா வருடம், 10,000 சிலின்டர் வெடிப்பு சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடக்கிறது. அப்படிப்பட்ட சம்பவங்களில் இறப்பு என்பது குறைவு, ஆனால், சிலின்டர் வெடிப்பு வீட்டிற்கும், சொத்திற்கும் மிக பெரிய இழப்பை ஏற்படுத்துவதோடு, காயங்களையும் உண்டு செய்கிறது என்று ஐஸ்வர் லால் ஜாட், முதன்மை தீனைப்பு அதிகாரி கூறுகிறார், ஆனால், மக்களுக்கு, மேலே சொன்ன இரு வித சம்பவங்களிலும், இழப்பீடு பெற முடியும் என்று, நிறைய பேருக்கு தெரிவதில்லை என்று கூறுகிறார்.

பல நேரங்களில், இப்படி மக்கள் எவ்விதமான இழப்பீட்டையும், காஸ் கம்பெனியிடம் கோருவதில்லை. இதற்கு அறியாமையே காரணம்.
படித்தவர்கள், குடும்ப பெண்கள் யாருக்குமே, காஸ் சிலின்டர் வெடித்து இறந்தால், காஸ் கம்பெனி வசம் இழப்பீடு கோர முடியும், இப்படி ஒரு மறைந்துள்ள பயன் உள்ளது என்று யாருக்கும் தெரியாது. காஸ் கம்பெனி ஊழியர்களும், இதை நுகர்வோரான, பொது மக்களுக்கு தெரிவிப்பதில்லை.
Bhanwar Singh Chauhan, என்ற மூத்த வழக்கறிஞரும், மக்கள் LPG இணைப்பு பெறும்போதே, இந்த காப்பீட்டை பெறுகிறார்கள். இந்த தகவலை கம்பெனி தெரிவிக்காவிட்டால், இந்த விஷயத்தை, நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கலாம், மேலும், அந்த நிறுவனங்கள் இந்த தகவலை மறைத்ததற்கு, வழக்கு கூட போடலாம் என்றும் தெரிவிக்கிறார்.

காப்பீட்டு முகவர்களும், இப்படி கிளைம் பெறுவது வெகு எளிது என்று தெரிவிக்கின்றனர், முதலில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, காஸ் கம்பனிக்கும் தெரிவித்து, காப்பீட்டு அலுவலக அதிகாரிகள் வந்து சர்வே செய்யும் வரை காத்திருந்து, இழப்பீட்டு தொகையை பெற முடியும் என்று சொல்கிறார்கள்.

நீங்கள் LPG காஸ் பயன்படுத்தினால், உங்களுக்கு ரூபாய் நாற்பது லட்சம் வரை காப்பீடு உண்டு. ஏதேனும் விபத்து நிகழ்ந்தால், நீங்கள் ரூபாய் ஐம்பது லட்சம் வரை, சேதம் மற்றும் ஆஸ்பத்திரி செலவுகளுக்காக இழப்பீடு கேட்க முடியும். துரதிர்ஷ்டம் என்னவென்றால், LPG கம்பனிகளும், அரசும் இந்த விஷயத்தை, விளம்பரபடுத்துவதே இல்லை. ஏதாவது விபத்து நடந்தால், அனைத்து பதிவு பெற்ற LPG காஸ் நுகர்வோர்களும் பொதுத்துறை எண்ணெய் கம்பனிகள் எடுத்த காப்பீட்டு பாலிசியில் அடங்குவர்.

இவ்வாறான விபத்து ஏதும் நடந்தால், நுகர்வோர், distributor க்கு உடனடியாக எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும். distributor, உரிய காஸ் கம்பனிக்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் தெரிவிக்க வேண்டும். distributor, இந்த கிளைம் ஐ பெற்ற தர, நுகர்வோருக்கு அனைத்து முயற்சிகளும் செய்ய வேண்டும்.
இது தவிர, அனைத்து LPG distributorsகளுக்கு Third Party Liability Insurance உண்டு, LPG விபத்தால் உண்டான, இழப்பை சமாளிக்க.

http://www.iocl.com/download/Citizen_Charter_IOCL_Final_Ver_6_01_04_13.pdf 

thanks – advocate help centre

No comments:

Post a Comment