Thursday, October 2, 2014

பொது அறிவு தகவல்கள்.......

1. உடல் வெப்பநிலையைப் பராமரிக்க தேவைப்படும் ஊட்டச்சத்து எது?

-கொழுப்பு

2. உலோகமில்லாத கனிமங்களில் மூன்று?

-மைக்கா, ஜிப்சம், சுண்ணாம்புக்கல்

3. மனித உடல் உறுப்புகளில் ரத்தம் பாயாத இடங்கள் யாவை?

-நகங்கள், மேல்தோல், ரோமங்கள்

4. மின்பகுளிகள் என்று எவற்றைக் கூறுவர்?

-அயனிச் சேர்மங்கள்

5. மின்சார டைனமோவைக் கண்டு பிடித்தவர் யார்?

-ஹிப்போலைட் பிக்ஸி

6. வீட்டுக் கழிவுகள் எத்தனை வகைப்படும்?

-இரண்டு (கரிமக் கழிவுகள், கனிமக் கழிவுகள்)

7. புல் இயல் (Agrostology) என்பது என்ன?

-புல், தாவரங்கள் பற்றிய அறிவியல்

8. புலனுறுப்புக்களிலிருந்து செய்திகளை மூளைக்கு தெரிவிக்கும் நரம்புகள் எவை?

-உணர்ச்சி நரம்புகள்

9. வாயு மூலக்கூறுகள் ஓய்வு நிலையை அடையும் வெப்பநிலை என்பது என்ன?

-தனிவெப்பநிலை

10. பரம்பரைத் தன்மைக்குக் காரணமாக இருப்பவை எவை?

-குரோமோசோம்கள்

11. உயர்ந்த ஒலி கவரும் பொருள் எது?

-இழைக்கண்ணாடி

12. சோப்பு தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள் யாவை?

-கொழுப்புப் பொருள், சோடா காரம் அல்லது பொட்டாசியம் காரம்

13. பூஜ்யத் தொகுதித் தனிமங்களை என்னவென்று கூறுவர்?

-மந்த வாயுக்கள்

14. நைட்ரஜன் உரங்கள் அளிக்கும் சத்து என்ன?

- செடியின் தண்டுகள், அலைகளின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் சத்து

15. ஹாலஜன்கள் என்பவை யாவை?

-அலோகங்கள்

16. சூடாக்கும் போது உலோகங்களை விட கண்ணாடி எளிதில் விரிசல் அடைவது ஏன்?

-கண்ணாடி ஓர் எளிதில் கடத்தி

17. அசாதாரண தொகைசார் பண்புகள் எப்பொழுது கண்டறிப்படுகிறது?

-கரைபொருள் மூலக்கூறுகள் அவற்றுக்குள் ஒன்று சேரும் போது

18. லாக்டோஸ் என்பது என்ன?

-ஒரு என்சைம்

19. வானிலை இயல் (Meteorology) என்பது என்ன?

-வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியல்

20. ஒளி மையத்தின் வழியே செல்லும் எந்த ஒரு ஒளிக்கதிரும்?

விலகல் கிடையாது

No comments:

Post a Comment