Sunday, September 22, 2013

உருகும் அண்டார்டிகா பனி மலைகள்

1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாய் உருகும் அண்டார்டிகா பனி மலைகள்


லண்டன்: அண்டார்டிகாவில் கடந்த 1,000 ஆண்டுகளி்ல் இல்லாத அளவுக்கு இந்தக் கோடை காலத்தில் பனிக் கட்டிகள் மிக வேகமாக கரைந்து வருகின்றன. ஆஸ்திரேலிய (Australian National University) மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு (British Antarctic Survey) இதனைக் கண்டுபிடித்துள்ளது.
600 ஆண்டுகளில் 1.6 டிகிரி அதிகரிப்பு
அண்டார்டிகாவில் கடந்த 600 ஆண்டுகளில் வெப்பத்தின் அளவு 1.6 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த 50 ஆண்டுகளில் தான் வெப்ப அளவு அதிகரிப்பு வேகம் பிடித்துள்ளது.

பனிக்கட்டியில் டிரில்
அண்டார்டிகாவின் வட முனைப் பகுதியில் உள்ள ஜேம்ஸ் ராஸ் தீவில் 1,197 அடிக்கு பனிக்கட்டிகளை டிரில் செய்து, குடைந்து, இந்தப் பகுதியின் கடந்த கால வெப்பத்தையும் தற்போதைய வெப்பத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளது இந்த ஆராய்ச்சிக் குழு. கடந்த 1000 ஆண்டுகளில் இந்தப் பகுதியின் பனி உறைந்தது, பின்னர் உருகியது என நடந்த காலநிலை மாற்றங்கள், அந்தப் பனிப் பாறைகளில் அடுக்குகளை உருவாக்கியுள்ளது.

அடுக்குகளின் தடிமனை வைத்து
இந்த பாறை அடுக்குகளின் தடிமனை வைத்து எவ்வளவு பனி உருகியது என்பதை கணக்கிட முடிந்துள்ளது. இதன்படி அண்டார்டிக்கா பகுதியில் பனி மிகக் குறைந்த அளவு உருகியதும், வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்ததுவும் 600 ஆண்டுகளுக்கு முன்னர் தான் என்று தெரியவந்துள்ளது.

50 ஆண்டுகளில் 10 மடங்கு உருகல்
இதில், கடந்த 50 ஆண்டுகளில் தான் அண்டார்டிகா பனி உருகுவது 10 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சிறிய வெப்ப நிலை மாற்றம் கூடஇதன்மூலம் என்ன தெரிகிறது என்றால், அண்டார்டிகா பனிப் பகுதியின் வெப்பம் அதன் தாங்கும் சக்தியை விட அதிகமாகிவிட்டது. அங்கு மிகச் சிறிய அளவிலான வெப்ப நிலை அதிகரிப்பு கூட மிக அதிகமான பனி உருகும் நிலையை உருவாக்கிவிடுகிறது. இது ஒட்டுமொத்தத்தில் பூமியின் வெப்ப நிலை அதிகரித்துவிட்டதையே மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்கிறார் இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான நெரில் ஆப்ராம்.
Arctic ice more vulnerable to summer sunshine

Washington, April 22 : A new study by scientists at the National Center for Atmospheric Research (NCAR) and Colorado State University (CSU), US, has shown that the shrinking expanse of Arctic sea ice is increasingly vulnerable to summer sunshine. The study finds that that unusually sunny weather contributed to last summer's record loss of Arctic ice, while similar weather conditions in past summers do not appear to have had comparable impacts. Drawn on observations from instruments on a new group of NASA satellites known as the "A-Train," the study was funded by NASA and the National Science Foundation. According to NCAR's Jennifer Kay, the lead author of the study, "In a warmer world, the thinner sea ice is becoming increasingly sensitive to year-to-year variations in weather and cloud patterns." "A single unusually clear summer can now have a dramatic impact," she added. The findings indicate that summer sunshine in the Arctic produces more pronounced melting than in the past, largely because there is now less ice to reflect solar radiation back into space. As a result, the presence or absence of clouds now has greater implications for sea ice loss. Last summer's loss of Arctic sea ice set a modern-day record, with the ice extent shrinking to a minimum of about 4.1 million square kilometers in September, which was 43 percent less ice coverage than in 1979, when accurate satellite observations began. Looking at the first two years of data from radar and lidar on the A-Train satellites, Kay and her colleagues found that total summertime cloud cover in the Western Arctic was 16 percent less in 2007 than the year before. A strong high-pressure system centered north of Alaska kept skies relatively clear. Over a three-month period in the summer, the increased sunshine was strong enough to melt about a foot of surface ice. Over open water, it was sufficient to increase sea-surface temperatures by 2.4 degrees Celsius. Warmer ocean waters can contribute to sea ice loss by melting the ice from the bottom, thereby thinning it and making it more susceptible to future melt. The research suggested that warmth from the Sun will increasingly affect Arctic sea ice loss in the summer. "Our research indicates that the relative importance of solar radiation in the summer is changing," said Kay. "The sunshine reaching the Arctic is increasingly influential, as there is less ice to reflect it back into space. Dry, sunny conditions in a single summer can now act as a potent force to melt sea ice," she added. 

No comments:

Post a Comment