தேவையான பொருட்கள்
காராமணி பயறு & ரு கிலோ
எண்ணெய், உப்பு & சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை & சிறிதளவு
காய்ந்த மிளகாய் & 3 (கிள்ளவும்)
செய்முறை:&
காராமணி பயறை வறுத்து, நீரைக் கொதிக்க வைத்து, வேக விடவும். தேவையான உப்பு சேர்க்கவும்.
காராமணி வெந்ததும், நீரை வடித்துவிடவும்.
ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
காராமணியை இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு:& பச்சை பட்டாணி, பச்சை காராமணி, பச்சை மொச்சை ஆகியவை கொண்டு சுண்டல் செய்யலாம். காய்ந்த பயறுகளை விட பச்சையாக
இருப்பவை ருசியாக இருக்கும். சத்து நிறைந்ததும் கூட.
No comments:
Post a Comment