Wednesday, September 25, 2013

வாழைத் தண்டு கறி



தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு - சிறு துண்டு
பச்சைப் பருப்பு - லு ஆழாக்கு
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
மிளகாய் வற்றல் - 6
எண்ணெய் -  குழிக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - சிறிதளவு
தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -2 டீஸ்பூன்
செய்முறை :
வாழைத்தண்டை பொடியாக நறுக்கவும். பச்சைப் பருப்பை முக்கால் வேக்காட்டில் வேக 

வைக்கவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த 

மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தை இதனுடன் சேர்த்து, வாழைத்தண்டையும் சேர்த்து, தேவைக்கேற்ப 

உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.
சிறிது நீர் தெளித்து, வதக்கி, வாழைத்தண்டு வெந்ததும் இறக்கி விடவும்.
குறிப்பு:& வாழைத் தண்டை நறுக்கு பொழுது மோரில் போட்டு எடுத்தால் கறுக்காமலிருக்கும்.

No comments:

Post a Comment