Wednesday, September 25, 2013

சிக்கன்- முருங்கைகாய் பெப்பர் சிக்கன்

நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு Pour oil in a pan dry powder, slightly Curry Tree, talikkavum with dried chillies
என்னென்ன தேவை?


சிக்கன்-1/4கிலோ 
முருங்கைகாய்-2 நறுக்கிகொள்ளவும்
வெங்காயம்-200 கிராம்
பச்சைமிளகாய்-2 
இஞ்சி, பூண்டு விழுது-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
மிளகுத்தூள்-4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-6
கொத்தமல்லி இலை-1கப்
எண்ணெய்-1/2 குழிக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்

எப்படி செய்வது?

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சிறிது கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச்  சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய், முருங்கைகாய் சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி வதக்கவும். இஞ்சி, பூண்டு, விழுதைச்சேர்க்வும். சிக்கனையும்  இதனுடன் சேர்த்து போதுமான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். மிளகுத்தூளை காரத்திற்கு தகுந்தாற் போல் சேர்க்கவும். சிக்கன், முருங்கைகாய்,  நன்கு வெந்து மசாலா கலவையுடன் சேர்ந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

No comments:

Post a Comment