Wednesday, September 25, 2013

அரைக்கீரை மசியல்


குறிப்பு

இந்த அரைக்கீரை மசியல், சாம்பாருக்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
அரைக்கீரை - ஒரு கட்டு
துவரம் பருப்பு - 1/4 ஆழாக்கு (வேகவைத்து மசிக்கவும்)
வெங்காயம் - 25 கிராம்
பூண்டு - 10 பல் (தட்டியது)
கறிவேப்பிலை - 10
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிக் கொள்ளவும்,
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத்  தாளிக்கவும்.
இத்துடன்  நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.வெங்காயம் முக்கால்  பாகம் வதங்கியவுடன் பச்சைமிளகாய், பூண்டு பல் சேர்த்து வதக்கவும்.
அரைக்கீரையையும் சேர்த்து, சிறிது நீர் தெளித்து வேக விடவும்.  தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். வேக வைத்த பருப்பை இத்துடன்  சேர்த்துக்
கிளறி இறக்கவும்.

No comments:

Post a Comment