Wednesday, September 25, 2013

ரசவாங்கி



தேவையான பொருட்கள்
சிறிய கத்தரிக்காய் -1 ரு கிலோ
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயம் -1 டீஸ்பூன்
அரிசிமாவு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -10
உப்பு, எண்ணெய் & சிறிதளவு
புளி & சிறிதளவு (கரைத்துக் கொள்ளவும்)
செய்முறை:
பிஞ்சு கத்திரிக்காயை நீளவாக்கில் பொடியாக நறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு வறுத்துப் பொடி செய்யவும்.
தேவைக்கேற்ப உப்பை அதிலேயே சேர்க்கவும். எண்ணெயில் கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும்.
புளிக்கரைசலில், வறுத்து தூள் செய்த பொடி போட்டு கத்தரிக்காயில் சேர்க்கவும்.
தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சரிபார்த்து இக்கலவை கொதித்து, கெட்டியானதும் இறக்கவும்.

No comments:

Post a Comment