Wednesday, September 25, 2013

மிளகு குழம்பு




தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு & 1 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு & 1 டீஸ்பூன் 
துவரம் பருப்பு & 1 டீஸ்பூன் 
தனியா & 1 டேபிள் டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் & 10 
மிளகு & 10
சீரகம் &  1/2 டீஸ்பூன் 
புளி& எலுமிச்சம் பழ அளவு (கரைத்துக் கொள்ளவும்) 
கறிவேப்பிலை & சிறிதளவு 
உப்பு, எண்ணெய் & தேவைக்கேற்ப 

செய்முறை:

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, தனியா, மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இதை பொடி செய்யவும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 
கரைத்து வைத்த புளிக் கரைசலை ஊற்றி தூள் செய்த பொடியையும் போட்டு தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இக்கலவை நன்கு சேர்ந்து திக்கானதும் இறக்கி வைக்கவும்.

குறிப்பு: 

கை படாமல் உலர்ந்த ஸ்பூன் கொண்டு இவற்றை உபயோகித்து வந்தால், இரு வாரங்கள் வரை கெடாமல் வைத்திருக்கலாம். 

No comments:

Post a Comment