தேவையான பொருட்கள்
கோவக்காய் - 1/4 கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)
வெங்காயம் - 150 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
தக்காளி - 150 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் -3 (நறுக்கிக் கொள்ளவும்)
இஞ்சி -சிறுதுண்டு (நறுக்கிக் கொள்ளவும்)
பூண்டு - 4 பல் (நறுக்கிக் கொள்ளவும்)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (நறுக்கிக் கொள்ளவும்)
தனியா தூள் - 2 டீஸ்பூன் (நறுக்கிக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் (நறுக்கிக் கொள்ளவும்)
எண்ணெய் - 1/4 குழிக்கரண்டி
கடுகு உளுத்தம் பருப்பு - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும்.
பின் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
கொவக்காயையும் சேர்த்துக் கிளறி, நீர் தெளித்து வேகவிடவும்.
கோவக்காய் வெந்து, மசாலாவுடன் சேர்த்து, ட்ரை ஆனதும் இறக்கி வைத்துப் பரிமாறவும்.
No comments:
Post a Comment