IRTCல் தக்கல் முறையில் டிக்கெட் பதிவுசெய்வது எப்படி
ரயில் பயணத்துக்கு தக்கல் முறையி்ல் டிக்கெட் எடுக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்த திட்டத்தின்படி பயணம் செய்வதற்கு 48 மணிநேரத்துக்கு முன் தக்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
அந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, திடீரென பயண ஏற்பாடுகளை செய்யும் பயணிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் நாளாடைவில் தக்கல் டிக்கெட்களை வெளிசந்தைகளை சேர்ந்த ஏஜென்ட்கள் பெற்று கொண்டு, அதிக விலையில் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து ரயில்வே துறைக்கு அதிகளவில் புகார்கள் வந்தன. அதனையடுத்து தக்கல் டிக்கெட் எடுக்கும் நேரம் 48 மணி நேரத்தில் இருந்து 24 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
IRTCல் தக்கல் முறையில் டிக்கெட் பதிவுசெய்வது எப்படி?
- முதலில் உங்களுடைய கணினியில் உள்ள நோட் பேடை திறந்துகொண்டு, தேவையான தகவல்களை குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.
- சரியாக காலை 9:45 மணிக்கு IRTC இணையதளத்தில் லாகின் செய்யுங்கள்.
- மணி 10 ஆவதற்குள் தக்கல் டிக்கெட் தொடர்பான முன்பதிவு விபரங்களை பூர்த்திசெய்யவும்.
- சரியாக 10 மணிக்கு சப்மிட் என்ற பொத்தானை அழுத்துங்கள்.
- இதற்கு முன்னர் நீங்கள் லாகின் செய்யாமல் இந்த இணையதளத்தை 2/3 பக்கங்களில் ஓபன் செய்துவையுங்கள்.
காப்ட்சா, மற்றும் பணம் செலுத்துவதை சரியாக செய்யுங்கள். சிறிது நேரம் பொருத்திருந்தாலே, உங்களுடைய டிக்கெட் பதிவுசெய்யப்படும் என்பது நண்பரொருவரின் அறிய கண்டுபிடிப்பு!
No comments:
Post a Comment