Friday, September 27, 2013

பெண் ஒரு சக்தி

பெரும்பாலும் ஆண் பெண்ணிடம் ஈர்க்கப்படுகிறான். அதுபோல் பெண்ணும் ஆணிடம் ஈர்க்கப்படிகிறாள். இது இயற்கை நடத்தும் சூட்சும விளையாட்டு.
உலகலாவிய உந்துதலில் வாழும்வரை அது சரியே.
ஆன்மீகம், ஆன்மா என்ற இன்னொரு உலகமும் நம்முள்ளேயும் வெளியேயும் இருக்கிறது. நாம் அறிவோம்.
அவ்வுலகில் ஆண், பெண் என்ற பேதமில்லை. வெறும் ஆன்மா மட்டுமே. தத்துவார்த்தமாய் அதுவும் சரியே.
நடுவில் கொஞ்சம் கவனமாக விழிப்புணர்வாய் ஆண் - பெண் வாழ்க்கையை நகர்த்துவோரே விசனப்படாமல் வாழ்வை வெல்கிறார்கள்.
உலகியல் வாழ்வில் சிக்குண்டு வாழ்வை வெறுக்கும் ஆண், பெண் ஒரு புரியாதப் புதிர் என்பான். அவள் ஒரு மாயை நம்பாதே என்று அனுபவச் சான்றிதல் வேறு கொடுப்பான். இன்னும் கொஞ்சம் சினம் கூடினால், பெண்ணா ? பிசாசா ? என்று கேள்வியாய் குழம்பிப் போவான்.
உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா?
பெண்ணை ஓர் ஆன்மாவாகப் பார்க்கப் பழகியவனுக்கு அவள் எந்நாளும் சக்திதான். மாயையாக மாறவே மாட்டாள். உடலளவிலும் மனத்தலளவிலும் மட்டுமே பார்ப்பவனுக்கு அவள் எந்நாளும் மாயைதான் சக்தியாக மாறவேமாட்டாள்.
ஒரு பெண், பணிவிலும் பரவசத்திலும் (பரம்பொருளின் வசம், என்றுணர்க) இருக்கும்வரை அவள், சக்தியின் வடிவம். அவள் மாயையாக மாற மாட்டாள். ஒரு பெண், பயத்திலும் பலவீனத்திலும் இருக்கும்போதுதான் மாயையாக 'விசுவரூபம்' எடுக்கிறாள்.
ஒரு காலத்தில் பெண்ணை மாயையாகப் பார்த்து மருண்டவர்தான், பட்டினத்தடிகளார்.
பிற்காலத்தில் தெளிவு பெறும்போது அதே பட்டினத்தடிகளார் 'வாலை' எனப்பெறும் சக்தியாகப் போற்றிப் பாடுகிறார்.
"மூலத்து உதித்தெழுந்த
முக்கோண சக்கரத்துள்
வாலைதனை போற்றாமல்
மதிமறந்தேன் பூரணமே"

No comments:

Post a Comment