தேவையான பொருட்கள்
புடலங்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 3 (கீறிக் கொள்ளவும்)
தாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - 2
பொட்டுக்கடலை பொடி - 200 கிராம்
எண்ணெய் - 1/4 குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
புடலங்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
ஒரு வானலியில் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.
பின் வெங்காயத்தையும், பூண்டையும் வதக்கவும். புடலங்கயைச் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு போடவும் சிறிது நீர் தெளித்து காயை வேக விடவும்.
கூட்டை இறக்கு முன் பொட்டுக்கடலைப் பொடியைத் தூவி இறக்கவும்.
No comments:
Post a Comment