Wednesday, September 25, 2013

கோதுமை பிரியாணி




தேவையான பொருட்கள்


கோதுமை ரவை- 1/2 கிலோ
பீன்ஸ்- 100 கிராம்
காலிபிளவர்- 1 /2 கிலோ
பச்சை பட்டாணி - 1/2 கிலோ
பச்சை மொச்சை -100 கிராம்
கத்தரிக்காய் - 100 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சை மிளகாய்- 4
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு -10 பல்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
தனியாதூள் -3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் -1 (சாறு எடுக்கவும்)
பட்டை - 2 சிறுதுண்டு
லவங்கம் - 2
புதின இலை - சிறுகட்டு
எண்ணெய் -1/2 குழிக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
நீர் - இரு பங்கு

செய்முறை

பச்சை மொச்சையை உரித்துக் கொள்ளவும். காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய் விழுதாக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்துத் தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், தக்காளி இவற்றைச் சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது, புதினா இலை சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வேக விடவும்.
மிளகாய்த்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.
அத்துடன் ரவையைப் போல் இருமடங்கு நீர் ஊற்றி கொதித்ததும், ரவையைச் சேர்த்து உப்பு சரி பார்த்து வேக விடவும்.
குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து இறக்கவும். 

No comments:

Post a Comment