Wednesday, October 8, 2014

ஒருவர் இறந்த பின் 3 நிமிடங்கள் வரை

ஒருவர் இறந்த பின் 3 நிமிடங்கள் வரை அவருக்கு நினைவுகள் இருக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த  சவுத்தாம்ப்டன் பல்கலைகழக விஞ்ஞானிகளிகளால் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது மருத்துவ ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவக்குழு இங்கிலாந்து , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள 15 மருத்துவமனைகளில் உள்ள 2060 நோயாளிகளிடம் கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டது.

இதில், ஒரு மனிதனின் இதய துடிப்பு நின்ற 20 முதல் 30 விநாடிகளில் அவனின் மூளையும் செயல்பாட்டை இழந்து விடும் எனவும், அதன் பிறகு 3 நிமிடங்கள் வரை அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்த நினைவுகள் அவனுக்கு இருக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழக்கும் தருவாயில் இருக்கும் ஒரு நோயாளியிடம் நினைவுகள் கண்டறியும் கருவி பொருத்தப்பட்டதில், அவர் உயிரிழந்த பிறகு அவரை உயிர்பிழைக்க வைப்பதற்காக டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி அந்த நோயாளியின் நினைவுகள் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.   மரணம் தொடர்பான ஆராய்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு இந்த ஆய்வு எடுத்து செல்லும் என தெரிகிறது.

Thanks to

DHINAKARAN

No comments:

Post a Comment