திருமணம் தாமதமாவதற்கு ஜனன ஜாதகத்தில் 7 ம் இடம் பாதிக்கப்படுதல், 7 ம் பாவாதிபதி பாதிக்கப்படுதல், களத்திரகாரகன் சுக்கிரன் பாதிக்கப்படுதல், அத்துடன் குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படுதல், பெண் ஜாதகமாக இருந்தால் 8 ம் இடம் பாதிப்பு, ராகு கேதுவால் ஏற்படும் நாக தோஷம், 12 ம் இடத்தில் கேது இருப்பது, செவ்வாய் தோஷம் மற்றும் சூரியன் + சுக்கிரன் சேர்ந்து உண்டாக்கும் சூரிய சுக்கிர தோஷம், கேது + சுக்கிரன் சேர்ந்து உண்டாகும் கேது சுக்கிர தோஷம், குரு + சுக்கிரன் சேர்க்கை பெற்று குரு சுக்கிர தோஷம் ஆகிய தோஷங்களால் திருமணம் தாமதமாகும்
=====================================================================
அழகிய மனைவி யாருக்கு அமைவாள்
இலக்கினத்துக்கு நான்கு, பதினொன்றில் ஏழாம் அதிபதி அமரவும், இலக்கினத்துக்கு பதினொன்றாம் அதிபதி குடுமப வீடான இரண்டாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும், அல்லது, ஏழு, பதினொன்றுக்கு உடையவருடன், இரண்டாம் அதிபதி தொடர்பு கொண்டாலும் அழ்கும், குணமும், சொத்தும் நிரம்பிய பெண்ணே மனைவியாக வருவாள். சுக்கிரனும், பத்தாமதிபனும் எப்படித்தொடர்பு கொண்டாலும், பார்ப்பதற்கே பேரழகான பெண்ணே மனைவியாக வருவாள்.
ஏழில் குருவிருந்து, சுக்கிரன் பலம்பெறவும், இரண்டாமதிபதி நட்பு வீடேறவும், அல்லது ஏழாமதிபதி குருவுடன் கூடியோ, பார்த்தோ இருந்தாலும், மேலும், பிறப்பு ராசியில் குருவும், சந்திரனும் கூடியிருந்து, ஏழாமதிபதி புதன் காணவும் எழிலான வடிவுடைய, இரக்கச்சிந்தனை நிரம்பிய, தான தர்மம் செய்யும் பெண் துணைவியாக வருவாள்.
ஏழில் சுக்கிரன் நின்றால், எடுப்பும், மிடுக்கும் நிரம்பியவள் மனைவியாக வருவாள்.
ஏழுக்குடையவன் நான்கு, பத்தில் அமர, கற்புக்கனலே மனைவியாக வருவாள்.
நவாமச இலக்கினத்துக்கு ஏழில் குரு, சந்திரனிருக்க பேரழகான பெண் அமைவாள்.
ஏழாமதிபதியும், பத்தாமதிபதியும் கூடி, ஏழாம் வீட்டில் அமர, வருமானம் மிகுந்த அழகியை மணப்பான்.
பொதுவாக, இலக்கினாதிபதி, இலக்கினத்தில் உள்ள கிரகங்களையோ, குடும்பஸ்தானத்திலுள்ளகிரகத்தையோ காணவேண்டும். அல்லது இவ்விடங்களிலுள்ள கிரகத்தையோ காணவேண்டும். அதுவும் இல்லை என்றால், அவ்விடங்களின் அதிபதியைக் காணவேண்டும். மேலும்,
ஏழாமிடம் சுக்கிரன், சந்திரன் வீடாகி, அவர்கள் சுபக்கிரகச் சேர்க்கையோ சுப நவாம்சமோ அடைய வேண்டும்.ஏழாமிடத்தை குருபோன்ற சபக் கிரகமும் காணவேண்டும். அப்போதுதான் “ ஜாதக பாரிஜாதத்தில்” கூரியபடி, “ வாழ்வினில் ரூபியாக வரும் குணவதியாய் பெண்டீர்” தான் வாழ்க்கைத்துணைவியாக வருவாள்.
இலக்கினத்தில் சந்திரன் நின்று, சூரியன் உச்சம்பெற, அழகான, மிகவும் சாதுவான பெண் மனைவியாக வருவாள்.
புதனும், குருவும் ஏழிலமர, புனிதமானவள்.
தன் வீட்டில் தான் அமரந்த சுக்கிரன், அழகான பெண்ணை மனைவியாகத் தருவான்.
அசுரனும், தேவனும் ஒருவரையொருவர் நோக்க, பெரிய இடத்துப்பெண் மனைவியாக வருவாள்
.1. இரண்டு, நான்கு, ஏழு, பத்துக்குடையவர்களுடன், இலக்கினாதிபதி ஏதேனும் ஒருவகையில் தொடர்பு கொண்டிருக்கவேண்டும்.
2. இலக்கினாதிபதி கேந்திர, கோணம்பெற வேண்டும்
3. இலக்கினத்துக்கு இரண்டாமதிபதியும், ஏழாமதிபதியும் ஆட்சிபெறவேண்டும்,
4. சனி, புதனுடன், ஏழாமதிபதி கூடி, குரு காண, அல்லது சனிபுதன், ஏழாமதிபதி கூடவேண்டும்
5. இலக்கினத்தில் ஏழாமதிபதி அமர, பத்தில் புதன், சந்திரன் இருக்கவேண்டும்
6. சுக்கிரனுக்கு ஏழாம்வீட்டில் புதன், குரு, சந்திரன் கூடியிருக்க வேண்டும்
=====================================================================
No comments:
Post a Comment