Wednesday, October 8, 2014

மூளை செல் உள்கட்டமைப்பு ஆராய்ச்சி

8/10/2014


மூளை செல் ஷி  அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜான் ஓ கீப் மற்றும் நார்வே டாக்டர் தம்பதி மேபிரிட் மோசர், எட்வர்ட் மோசர் ஆகியோர் இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ‘நியூரல் சர்கியூட்ஸ் அண்ட் பிகேவியர்’ மையத்தின் இயக்குனராக இருப்பவர் ஜான் ஓ கீப். இங்கிலாந்துஅமெரிக்க ஆராய்ச்சியாளரான இவர் கடந்த 1971ம் ஆண்டில், மூளையின் ‘ஹிப்போகேம்பஸ்’ பகுதியில் உள்ள குறிப்பிட்ட நரம்பு செல் அமைப்பை கண்டறிந்தார். ஒரு அறையில் ஒரு எலி இருக்கும்போது, நமது மூளையில் இருக்கும் இந்த செல்கள் செயல்பட தொடங்குகிறது. அந்த எலி வேறு இடத்துக்கு செல்லும்போது, மூளையின் மற்ற செல்களும் செயல்பட தொடங்குகின்றன. ‘பிளேஸ் செல்ஸ்’ எனப்படும் இவைகள்தான் நம்மை சுற்றியுள்ள ஒரு இடத்தின் வரைபடத்தை நமக்குள் ஏற்படுத்தி கொடுக்கிறது என ஓ கீப் தனது ஆய்வறிக்கையில் கூறியிருந்தார்.

34 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2005ம் ஆண்டில் நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் தம்பதிகளான மேபிரிட்  எட்வர்ட் மோசர் ஆகியோர் ‘கிரிட் செல்ஸ்’ எனப்படும் மற்றொரு வகை நரம்பு செல்களை கண்டறிந்தனர். சரியான வழியை கண்டறிய இந்த ‘பிளேஸ் மற்றும் கிரிட்’ செல்கள்தான் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமக்கு வழிகாட்டுகின்றன என இவர்களின் ஆராய்ச்சி தெரிவித்தது. அல்சீமர் என்ற நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு நினைவிழப்பு எப்படி ஏற்படுகிறது என்ற அடிப்படை நுட்பங்களை புரிந்துகொள்ள இவர்களின் மூளை செல் உள்கட்டமைப்பு ஆராய்ச்சி உதவும் வகையில் உள்ளது. அதற்காக இந்த 3 பேருக்கும் சேர்த்து, இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அடுத்தடுத்து அறிவிக்கப்படவுள்ளன.

ரூ.6.76 கோடி பரிசு:

நோபல் பரிசு பெற்ற இந்த மூன்று பேருக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு தொகை கிடைக்கும். இதில் பாதியை ஜான் ஓ கீப்பும், அடுத்த பாதியை நார்வே தம்பதிக்கும் வழங்கப்படவுள்ளது. நோபல் பரிசை நிறுவிய ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10ம் தேதி அன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த பரிசு வழங்கப்படவுள்ளது.

Thanks to

Dhinakaran

No comments:

Post a Comment