Wednesday, October 8, 2014

திக்! திக்! திக்! கிணறு.. (ஒரு அதிசயம்)




அஹமதாபாத் நகரத்திற்கு வெகு அருகில் அசர்வா எனும் இடத்தில் ‘தாதா ஹரீர் வாவ்’ எனும் படிக்கிணறு அமைந்திருக்கிறது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு அற்புத கட்டிடக்கலை படைப்பாக இந்த படிக்கிணறு அமைப்பு அக்கால கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது
அடுக்கடுக்காக அமைந்திருக்கும் தளங்களில் வழியாக கீழே உள்ள கிணற்றுக்கு இறங்கி செல்வது போன்ற அமைப்பாக இந்த தாதா ஹரீர் வாவ் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு மாளிகை கோபுர கட்டுமான அமைப்பை வானை நோக்கி உயர்த்தி எழுப்புவதற்கு பதிலாக பூமியில் கீழ் நோக்கி கொண்டு சென்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் அதுதான் இந்த தாதா ஹரீர் வாவ்....

உண்மையில் நிஜத்தில் இந்த ஹரீர் வாவ் எப்படியிருக்கும் என்பதை ஒருபோதும் உங்களால் கற்பனையில் யூகிக்க முடியாது என்பதுதான் உண்மை. இங்குள்ள புகைப்படம் சற்றே இதன் பிரம்மாண்டத்தை உணர்த்த உதவக்கூடும். இருப்பினும் வாழ்நாளில் இந்தியாவில் பார்க்க வேண்டிய கலைப்படைப்புகளில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.
அக்காலத்தில் நகரத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய இந்த கிணறு பயன்பட்டது என்று சொல்லப்பட்டாலும், இதன் பிரம்மாண்டத்தை நோக்கும்போது இது கலைப்படைப்பாக வித்தியாசமான முயற்சியாக அக்கால கலைஞர்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்வதில் சிரமமில்லை.

இதனை உருவாக்கியது மனிதர்களா அல்லது கடவுளா என வியக்கும் அளவுக்கு ஒப்பற்ற கட்டிடக்கலை அதிசயமாக இந்த தாதா ஹரீர் வாவ் வீற்றிருக்கிறது.
இந்தக் குறிப்பிட்ட கிணறு 1501ல் சுல்தான் பாயி ஹரீர் என்ற மன்னரின் அந்தப்புர நாயகிகளில் ஒருவரால் மன்னர் நினைவாக உருவாக்கப் பட்டிருக்கிறது.கிணறு தொடர்ந்து இந்துக்கள், முஸ்லிம்கள் என்று இருமதத்தவர்களாலும் பொதுச்சொத்தாக பேணப் பட்டு, பயன்படுத்தப் பட்டு வந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன...!

No comments:

Post a Comment