Monday, September 16, 2013

நாட்டு மாடே லாபமானது





சிறு வயது முதலே பிராணிகள் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு உண்டு ,அப்போது நங்கள் வாடகை வீட்டில் இருந்ததால் நாய் கூட வளர்க்க இயலாது இருந்த போதும் அடம்பிடித்து அவ்வபோது நாய் குட்டிகளை வாங்குவேன் பிறகு அதை எங்கள் மாமா வீட்டில் கொண்டு விட்டு விடுவேன் ,இப்படியாக நான் வளர்த்த பிராணிகளை நினைத்து பார்கிறேன்

நாய்
கிளி
முயல்
வெள்ளை எலி
வாத்து
கிண்ணி கோழி ,வான் கோழி
குரங்கு
நரி
புறா
மாடுகளின் 


மீது எனக்கு தனி பிரியம் இருந்தாலும் கூட நாட்டு மாடுகளின் மீது ஆர்வத்தை உண்டாக்கியவர் திரு சுபாஷ் பலேகர் அவர்கள் ,அதே போல காங்கேயம் மாடுகளின் மீது பற்றுதலை உண்டாக்கியவர் @karthikeya sivasenathypathy நான் காங்கேயம் மாடு வாங்க வேண்டும் என்று வீட்டில் வற்புறுத்திய போது வீட்டில் யாருக்கும் பால் கறக்க தெரியாது அதனால் எங்கள் தோட்டம் போடுகிரவரை கேட்டோம் அவரோ நாட்டு மாட நமளால அத கறக்க முடியாது என்று ஒதுங்கி கொண்டார் .ஊர் முழுக்க விசாரித்தும் இருவர் மட்டுமே நாட்டு மாட்டை கறப்பார்கள் என்று தகவல் கிடைத்தது அதனால் ஆசைக்காக ஒரு கிடேரி கன்று வாங்கினோம் .பிறகு நாட்டு மாடுகளின் சிறப்பை தொடருந்து சொல்லி கறவை மாடு வாங்க சமதம் பெற்றேன் யாரும் கறக்க முடியாது என்று ஒதுங்கிய நிலையில் பால் கறந்தே அறிந்திடாத என் அம்மா இப்போது கறக்கிறார்கள் .இருந்தும் சுற்றி இருப்பவர்கள் சும்மா இருப்பது இல்லை நாட்டு மாட்டை வாங்கி கட்டி அது எனத்துக்கு ஆகுது ,சிந்து மாடா இருந்தா கூட பால் ஊத்துனா வீட்டு செலவுக்கு வரும் என்று நான் ஊருக்கு செல்லும் போதெல்லாம் யாராவது ஒருத்தர் இதை சொல்லுவார்கள் ,நேற்றும் இதே போல ஒரு உறவினர் சொன்னார் .நாங்க சிந்து மாடு வெச்சுருக்கோம் நாள் 14ஒன்றுக்கு லிட்டர் கரகின்றது என்றார் ஒரு நாளைக்கு எவளோ உரம் போடறிங்க நு கேட்டேன் 6 கிலோ என்றார் (கிலோ rs 20) பருத்தி கொட்டை 2 கிலோ ( கிலோ 15 ) ஆகா மொத்தம் 150 ரூபாய் ஒரு மாட்டுக்கு செலவு செய்கிறீர்கள் 14 லிட்டர் பால் (லிட்டர் 20) rs 280 செலவு போக மிச்சம் rs 130 ,நான் 2 கிலோ skm போடுகிறேன் 6 லிட்டர் பால் (நாட்டு மட்டு பால் 30 /லிட்டர் ) ஆகா மொத்தம் 180 செலவு போக 140 மிச்சம் .14 லிட்டர் கறக்கும் சிந்து மாட்டை விட 6 லிட்டர் கறக்கும் நாட்டு மாட்டில் உங்களை விட 10 ரூபாய் அதிகம் பெறுகிறேன் என்றேன் அவர் பதில் பேசவில்லை .இத்தனை பேரின் மாற்று கருத்தையும் மீறி எங்கள் ஊரில் ஒவ்வொரு தோட்டத்திலும் காங்கேயம் மாடு இருந்த நிலை மாறி இன்றைக்கு இரண்டு காங்கேயம் பசு இருக்கும் ஒரே தோட்டம் எங்கள் தோட்டம் தான் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறேன் என்றால் அதற்க்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டியது அண்ணன் Karthikeya Sivasenapathy அவர்களுக்கு தான்

கலப்பின மாடு நாட்டுமாடு
பால் அளவு 14 லிட்டர் 6 லிட்டர்
விலை rs .20 rs .30
வருமானம் 280 180
தீவனம் (skm 20/ kg ) 120(6*20) 40(2*20) (இது கூட தேவை இல்லை )
பருத்தி கொட்டை (15/kg ) 30(2*15) --
செலவு 150 40

நிகர லாபம் 130 140

குறிப்பு -சில கலப்பின மாடுகள் இன்னும் அதிகமாக பால் கறக்கலாம் அதே சமயம் அதற்க்கு ஏற்றார் போல தீவனமும் வேண்டும் )

No comments:

Post a Comment